Levitation

Levitation

 

[button link=”The URL of the button” variation=”red”]நித்யானந்த தியானபீடத்தின் அகில உலக செயலாளர்கள் அளித்த பேட்டி…[/button]

5000-க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் முன்னிலையிலும், 35 நாடுகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்டட நித்யானந்த தியானபீட தியான சத்சங்க மையத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையிலும், ஊடகத்துறையின் முன்னிலையிலும் குண்டலினி சக்தியின் செயல்பாடு பற்றி, அதில் ஒன்றான Levitation எனும் சக்தியின் செயல்பாடு பற்றி 15.07.2011 (குருபூர்ணிமை) அன்று அறிவியல் பூர்வமாக விளக்கும் நவீன ஆராய்ச்சி நடைபெற்றது.

அப்பொழுது பரமஹம்ஸ நித்யானந்தர் அந்த அறிவியல் ஆராய்ச்சியைப்பற்றி ஆங்கிலத்தில் மிகத் தெளிவாக விளக்கம் அளித்தார்…..

Levitation என்பது உயர்ந்த சக்தியின் ஆற்றலால் உடல் லேசாகி பூமியிலிருந்து உடல் மேல் எழும்பி கீழே வரும் நிகழ்வாகும்.

இதைச் சாதாரணமாக வெறுமனே ‘குதிப்பது’ என்று நினைத்துவிடாதீர்கள்.  சாதரணமாகக் குதிக்கும்பொழுது மூளையின் செயல்பாடுகள் வேறு விதமாக இருக்கும்.  தீகை்ஷயின் ஆற்றலால் உடல் மேல் எழும்பும்பொழுது Levitation மூளையின் செயல்பாடுகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

Levitation ஆகும்பொழுது மூளையில் நிகழும் மாற்றங்கள், நீங்கள் சாதாரணமாகக் குதிக்கும் பொழுது நிகழாது.  தீகை்ஷயின் சக்தியால் மூளையில் நிகழும் இந்த மாற்றங்களைத்தான் நாங்கள் இந்த அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்துக் காண்பிக்கப்போகின்றோம். மூளையில் நிகழும் மாற்றங்கள்தான், ஒருவர் தாமே வேண்டுமென்று குதிக்கின்றாரா அல்லது உயர்ந்த சக்தி உடலில் அனுபவமாக நிகழ்வதால் குதிக்கின்றாரா என்பதைக் காண்பிக்கும்.

இவர்கள் ஹிப்னாடிஸம் செய்யப்பட்டிருக்கிறார்களா,” என்று நீங்கள்

கேட்கலாம்.

இல்லை.

ஹிப்னாடிஸம் செய்யப்பட்டிருந்தால், இந்த தீகை்ஷ கொடுக்கப்பட்டதும் ஹிப்னாடிஸத்திலிருந்து முற்றிலும் வெளிவந்து விடுவார்கள்.

இவர்கள் ஏதாவது போதை மருந்து எடுத்திருக்கிறார்களா,” என்று கூட நீங்கள் கேட்கலாம்.

இல்லை.

போதை மருந்து எடுத்துக்கொண்டால் மூளையின் செயல்பாடுகள் இவ்வாறு இருக்காது.  அது மட்டுமல்லாமல் போதை மருந்து பழக்கங்களுக்கு அடிமையாகியிருக்கும் நபர் இந்த தீகை்ஷ பெற்றால், அந்த அடிமை பழக்கத்திலிருந்து வெளிவந்து விடுவார்…

உடல் முற்றிலுமாகக் குணமடைந்துவிடும், அது மட்டுமல்லாமல்  முதல் பத்து வரிசையில் இருக்கும் மனோரீதியான நோய்கள் தீகை்ஷயின் மூலம் 100% குணமடைந்திருக்கின்றன என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளோம்.  அதற்கு எங்களிடம் மருத்துவ ஆதாரங்களும் இருக்கின்றன.

அதனால் ஊடக்துறையினரிடம் நான் தாழ்மையோடு கேட்டுக்கொள்வதெல்லாம்,  இந்த அறிவைப் பற்றித் தவறாகச் சித்திரிக்காதீர்கள் என்பதுதான்.

உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் நான் பதிலளிக்கிறேன்.

உங்களுடைய எல்லாச் சந்தேகங்களுக்கும் நானே பதிலளிக்கிறேன்.  நான் உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்காகத்தான் உங்களை அழைத்திருக்கிறேன்.  இந்த ஆராய்ச்சி சம்பந்தமாக நீங்கள் எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேளுங்கள்.

 

வேண்டுமென்றால் பத்திரிகை துறையிலிருந்தோ, ஊடகத்துறையிலிருந்தோ யாராவது ஒருவர் வந்தால் நாங்கள் இந்த ஆராய்சியை உங்களின் ஒருவர் மீதும் செய்து காண்பித்து நிரூபிக்கத் தயாராக இருக்கின்றோம்.

நீங்கள் வெறுமனே சாதாரணமாகக் குதியுங்கள். அப்பொழுது உங்கள் மூளையின் செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் திரையில் வரைபடமாகக் காண்பிப்பார்கள்.  அதை நீங்கள் பார்க்கலாம்.

அப்பொழுது நீங்களே இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சியின் நிஜத்தன்மையைப்

பரிசோதித்துப் பார்க்க முடியும். அதனால் உங்களில் யாராவது ஒருவரை இந்த ஆராய்ச்சியைப் புரிந்துகொண்டு செய்வதற்கு அழைகின்றேன்.

அப்பொழுது, ‘பிரஜாவாணி’ பத்திரிகையின் புகைப்பட நிபுணர் ஒருவர் முன்வந்தார். அவருடைய தலையில் NEXUS 32 QEEQ

எனும் அதிநவீன ‡ Nuerofeedback  கருவியின் தலை கேப் அணிவிக்கப்பட்டது.

அவர் தயாராக அமர்ந்தார். அவரைப் பார்த்து பரமஹம்ஸ நித்யானந்தர், கண்களை மூடி ஓய்வாக, தளர்வாகுங்கள்,” என்று ஆங்கிலத்தில் சொன்னார். அப்பொழுது அந்தப் புகைப்பட நிபுணர், எனக்கு ஆங்கிலம் புரியவில்லை,” என்றார். உடனே அங்கிருந்த டாக்டர் கிருஷ்ண சாமாராவ் அவர்கள், பரமஹம்ஸ நித்யானந்தர் சொல்லிய செய்திகளை அவருக்கு கன்னட மொழியில் மொழிபெயர்த்தார்.

மூளையின் செயல்பாட்டைப் பற்றிய ஆராய்ச்சி இது என்று பரமஹம்ஸ நித்யானந்தரும், டாக்டரும் கன்னட மொழியில் அவருக்கு விளக்கினார்கள்.

சிறிது நேரம் கழித்து ஆராய்ச்சியின் ஒரு பாகமாக, உட்கார்ந்த நிலையிலேயே நீங்களாகவே குதிக்க முயச்சிசெய்யுங்கள்,” என்று சொன்னார் டாக்டர் கிருஷ்ணாராவ்.

அதற்கு அவர், என்னால் குதிக்க முடியவில்லை,” என்றார்.

அப்போது பரமஹம்ஸ நித்யானந்தரும் அவரிடம், நீங்களாகக் குதிக்க முயற்சி செய்யுங்கள்,” என்று கன்னட மொழியில் சொன்னார்.

முடியாது,” என்று மறுத்துவிட்டார் அந்த நபர்.

சிறுது நேரம் கழித்து எழுந்து நின்று கொண்டு ‘ள்ளே! ‘ள்ளே!!!” என்று கன்னடத்தில் கத்த ஆரம்பித்தார்

மொழி புரியாததால் இப்படிச் சொல்லுகின்றார் என்று மற்ற ஊடகத்துறையினரும் அருகில் வந்து அவருக்குப் பொறுமையாக ஆராய்ச்சியைப் பற்றி விளக்கினார்கள்.  சிலர் ஆராய்ச்சியைப் பற்றிய தங்களின் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டார்கள்.

ஊடகத்துறையினர் கேட்ட அத்துணை கேள்விகளுக்கும் பரமஹம்ஸ நித்யானந்தரும், ஆராய்ச்சி மருத்துவர்களும் பொறுமையாக விளக்கம் அளித்தார்கள்.

நிகழ்ச்சி இனிமையாக நடந்தது.

இதுதான் நடந்தது.  இதற்கு அனைத்து வீடியோ ஆதாரங்களும் உள்ளது.

தங்களால் புரிந்துகொள்ள முடியாததாலும், புரிந்துகொள்ளத் தயாராக இல்லாததாலும் மொத்த நிகழ்ச்சியின் புனிதத்தையும் சில ஊடகங்கள் கொச்சைப்படுத்தி வேண்டுமென்றே அசிங்கப்படுத்தியுள்ளார்கள்.

குண்டலினி சக்தி விழிப்பைடையும்பொழுது Levitation

ஆன பக்தைகளை ஆபாசமாகப் படம்பிடித்துக் காண்பித்திருக்கிறார்கள்.  ஆண்கள் பலர் Levitation

ஆனார்கள்.  ஆனால் அவர்கள் யாரையும் காண்பிக்காமல் பெண்களை மட்டுமே படமெடுத்து அவர்களின் உடல் அசைவுகளைக் கொச்சைப்படுத்தி ஆபாசமாகக் காண்பித்து லட்சக்கணக்கான இந்து மதத்தவர்களின் உணர்வைப் புண்படுத்தியுள்ளார்கள்.

லெவிடேசன் (Levitation)  என்பது சாதாரணமாகக் குதிப்பது அல்ல;‘உயர்ந்த சக்தி ஆற்றல்’ சக்தி தீகை்ஷயின் போது உடலுக்குள் பொங்குவதால், உடல் லேசாகி மேலே உயர்ந்து பூவை போன்று கீழே வரும் நிகழ்வாகும். இதில் அந்தரத்தில் மிதக்க வைப்பது, பறக்க வைப்பது பற்றி பரமஹம்ஸர் எங்குமே சொல்லவேயில்லை.

நீங்கள் வேண்டுமானால் (Levitation)  செய்வதற்கு முயற்சி செய்து பாருங்கள்.  பத்மாசனத்தில் அமர்ந்து உங்கள் உடலின் மொத்த எடையையும் ஒரு அரை அடி உயர்த்த முயற்சி செய்து பாருங்கள்…அடி ‘இடி’ போன்று விழுந்து, முதுகெலும்பு முதல் முயற்சியிலேயே முறிய வாய்ப்பிருக்கிறது.  பிறகு இரண்டாவது முறை முயற்சிகூட செய்ய முடியாது.

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *