உங்களிடம் உரைக்கிறேன். . .

உங்களிடம் உரைக்கிறேன். . .

நம் நாட்டின் நாடித்துடிப்பு நீங்கள்தான்!

நாத்திக நாராசத்தினால் ஆன்மீகம் கேலிக்குறியதாகவும், கேவலமானதாகவும் காண்பிக்கப்பட்டு இப்பொழுது நமது நாட்டின் பொன்னான எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது.

நம்முடைய கலாச்சாரமும், பண்பாடும் சீர்குலைந்து போய்க்கொண்டிருக்கிறது.

இளைஞர்களே!

இந்நாட்டின் நாடித்துடிப்பு நீங்கள்!

இந்த நாடு உங்களை நம்பித்தான் இருக்கிறது!

உங்கள் மூதாதையர்கள் போன்று யோக உடலும் (Yogic Body), வேத மனமும் Vedic Mind) பெற்று இந்த உலகத்தின் தலையெழுத்தைத் திருத்தி எழுத வந்தவர்கள் நீங்கள்.

அந்தோ!

என்னவர்களே. . .

நம்முடைய சமுதாயத்தில் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களின் விளைவால் உங்கள் வாழ்க்கைப் பாதையே திசை திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறது. தற்போதைய கல்வியாலும், வாழும் வாழ்க்கை முறையாலும் எதனைப் பெறுகிறீர்கள் தெரியுமா?

உடலளவில். . . நோய்களையும், மனத்தளவில். . . உங்கள் ஆற்றல்களை விரிவுப்படுத்த தெரியாத பலவீனமான மனப்பாங்கையும்தான் பெற்றிருக்கின்றீர்கள்.

இந்தியாவின் மக்கள் தொகையில் 54% பேர் இளைஞர்கள்தான்.

எதையும் சாதிக்கும் ஆற்றல் மிக்க நம் இளைஞர்கள், தலைமை தாங்கி முன்னின்று நாட்டையே முன்னோக்கிச் செலுத்தும் அசாதாரண வாழ்வை தேர்ந்தெடுக்காமல், சாதாரணமான வாழ்க்கையை வாழ்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.

மது பழக்கத்திற்கு அடிமையாகுதல். . .

தகுதிகேற்ற வேலையின்மையால் நம்பிக்கையின்மை. . .

ஆர்வத்திற்கேற்ற சரியான கல்வி பயில முடியாமையால் வாழ்க்கையில் விரக்தி. . .

வன்முறையையும் காமத்தையும் பெரிதுபடுத்தி விளம்பரப்படுத்தும் பொறுப்பற்ற ஊடகங்களால் ஏற்படும் மன உளைச்சல். . . என எல்லாம் சேர்ந்து, இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கை ஒரு பெரிய சவாலாக இருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல், தவறான வாழ்க்கை முறையின் விளைவால், உடல் நலன் பற்றி அக்கறை இல்லாமல் போனதால் 30 வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு அதிக இளைஞர்கள், குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் நம் இளைஞர்கள், வேதனைபடுகிறார்கள் என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றன.

இந்திய மருத்துவ சேவை மையம் (Indian medical services) சமீபத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

இந்திய குழந்தைகள் மற்றும் இந்திய இளைஞர்கள் மத்தியிலும் தற்கொலை செய்துகொள்வது அதிகமாக உள்ளது என்று சொல்லியுள்ளது.

UNஅறிக்கைபடி, இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் (அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை) போதைக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்றும், மேலும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாமல் குறைந்தது 50 லட்சம் மக்கள் போதைக்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள் என்றும் அதில் பெரும்பாலானர்வர்கள் இளைஞர்கள் தாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனால் 18 – 35 வயதுவரை உள்ள இளைஞர்களின் உடல் நலம், மன நலம், ஒழுக்கமான வாழ்க்கை, நுண்ணறிவு ஆகியவை வேகமாக அழிந்துவருகிறது என்று எச்சரித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு நபராவது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள் – 27 மார்ச், 2011 அன்று உதுணீணூஞுண்ண்  ஆதத்த் எனும் செய்தித்தாளில் வந்த செய்தி இது. இந்தச் செய்திகள் எல்லாம் என் நெஞ்சைப் பிழிகின்றன.

‘வீர’த் திருமகன்களை ஈன்றெடுத்த நாட்டிற்கு ‘குடி’ மகன்கள் நிறைந்த நாடு என்ற அவப்பெயரா?’

[box_dark]

உங்களிடம் உரைக்கிறேன். . .

தாய்திருநாட்டை காப்பாற்றுங்கள்.

ஞானிகளும், ரிஷிகளும் வகுத்துத்தந்த நமது வேத கலாச்சாரம் மோசமானதல்ல.

அதுதான் இதுவரை எல்லோரையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. இடையில் புகுந்த நாத்திக நாராச சக்திகளின் அட்டகாசத்தால் நம் கலாச்சாரம் பாழ்படத் தொடங்கிவிட்டது.

இளைஞர்களே புரிந்துகொள்ளுங்கள்…

நம்மை நேரடியாக அடிமைப்படுத்த முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு, சூழ்ச்சியினால் நம் கலாச்சாரத்தை அழித்து நம் நாட்டை மீண்டும் அடிமைப்படுத்த பார்க்கிறார்கள். நாட்டின் நன்மைக்காகப் பாடுபடும் ஆன்மீக சக்தியை எல்லாம், தங்களின் சுயலாபத்திற்காகவும், தன் குடும்பத்தின் நன்மைக்காகவும் அச்சுறுத்தி, தங்கள் அசுர அதிகாரத்தினால் அழிக்க நினைக்கிறார்கள், இந்த நாத்திக நாராச சக்திகள்.

அவர்களிடமிருந்து நாட்டைக் காத்து, மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதையே தங்கள் வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்ட இளைஞர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.

[/box_dark]

 

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *