மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்

மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்

 

 

மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம். பரமஹம்ஸர் திருவண்ணாமலை நித்யானந்த தியானபீடத்தில் 20.12.2010 அன்று பத்திரிக்கையாளர்கள் முன்பு படித்தார்.

இதயம் கனிந்த வணக்கங்களோடு துவங்குகிறேன்…

சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்களின் இதயம் தொட்ட உங்களின் இந்த வார்த்தைகள்… காயப்பட்ட ஒவ்வொருவருக்கும் மட்டுமே புரியும் மருந்துகள்.

தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடே சீரழிக்கப்பட்டுவிட்டது.

எல்லாமே நாசம்செய்யப்பட்டுவிட்டது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

மின்வெட்டு

விலைவாசி உயர்வு

விவசாயத் தொழில் சீரழிவு

நெசவுத் தொழில் அழிக்கப்பட்டது

பொதுவாக தொழில்துறையே பலவீனமடைந்தது

மக்களுக்கு வாழ்வாதாரமே இல்லாமல் போனது

வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது

இந்த மாநிலத்தையே கடனாளியாக்கிவிட்டது

1 லட்சம் கோடிக்கு மேல் கடன் பெருகிவிட்டது என செய்திகள் வெளிவந்துள்ளன.  கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட சீரழிவு வார்த்தைகளில் சொல்லி மாளாது.

சீரழிந்த தமிழ்நாட்டை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும். தமிழ்நாடு இருக்கும் அவல நிலையில் இருந்து அதை மீட்டு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

தாங்கள் தந்த இந்த புள்ளிவிவர சீரழிவுகளைத் தாண்டி நடந்த இன்னொரு சீரழிவை, ஜனநாயக அராஜகத்தை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

திட்டமிட்டு எங்களை அழிக்க முயற்சித்தவரும் அந்த தமிழ்ப் பத்திரிக்கையில் என்னையும், என் இயக்கத்தையும் பற்றியும், முக்கியமாக எங்கள் இயக்கத்தை சேர்ந்த பெண்களை பற்றியும் வெளிவந்த அவதூறு கட்டுரைகளை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்தது. தண்டித்தது.

உயர்நீதிமன்ற ஆணைப்படி, என்னைப் பற்றி எதுவும் எழுதக்கூடாது என்று கூட தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வந்த பிறகும், அந்த பத்திரிக்கை நீதிமன்றத்தை மதிக்கவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து மேலும் ஆபாசமான பொய்க் கட்டுரைகளை என்னையும், என் இயக்கத்தை சுற்றியும் எழுதியதோடல்லாமல் தொடர்ந்து 13 முறை நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து 13 இதழ்களில் மூன்றாம்தர பொய்க்கட்டுரைகளை எங்களை சுற்றி, எங்களை அழிக்கும் நோக்கில் பிரசுரித்திருக்கிறார்கள்.

மக்களின் நம்பிக்கைக்குரிய பத்திரிக்கை இயந்திரத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையிலும், மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகுரிய நீதிமன்றத்தையே அவமதிக்கும் வகையிலும் வலம் வரும் மனிதர்களாகவும் வாழும் தைரியம் அவர்களுக்கு கிடைத்திருப்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் கேட்டை விளைவிக்கும்.

எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ளலாம், அந்நாட்டின் உயர்நீதிமன்ற தீர்ப்பை அந்த நாட்டிலேயே மதிக்காமல் ஒருவர் வலம்வருவதை எவராலும் பொறுத்துக்கொள்ள இயலாது… என்ற லட்சக்கணக்கான மக்களின் உணர்வு கொந்தளிப்பை உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.

சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதுதான் என் முதல் வேலை” என்ற  தங்களின் வார்த்தைகள்,  உலகம் முழுவதும் 197 நாடுகளில் அன்பர்களாகவும், பக்தர்களாகவும், தொண்டர்களாகவும், சீடர்களாகவும், சந்நியாசிகளாகவும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் எங்களின் ஒருகோடி மக்களின் உணர்வில் தேனை வார்த்திருக்கிறது.

அதில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே 12 இலட்சம் பக்தர்கள் வாழ்கின்றார்கள். கடந்த ஒராண்டில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மதத்தாக்குதலால் இவர்களுக்குள் ஏற்பட்ட  இதயக் குமுறலையும், வேதனைகளையும் தங்களுக்குத் தெரிவிக்கவேண்டிய பொறுப்பில் இருப்பதனால் இக்கடிதத்தை தங்களின் மேலான பார்வைக்கு எடுத்துவருகின்றேன்.

தாய்குலத்திற்கு முன்னுரிமை, சாரய ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு திட்டம், மதமாற்ற தடைச் சட்டம்,  கோயில்களில் அன்னதானத் திட்டம் போன்ற சமுக மற்றும் ஆன்மீக பாதுகாப்பு திட்டங்களை துணிச்சலாக அமுல்படுத்திய  உங்களை, ஆன்ம உணர்வுகொண்ட எல்லா தமிழர்களின் சார்பாகவும் பணிவன்போடு வாழ்த்துகிறேன்.

சொல்வது வேறு,

செய்வது வேறு,

திட்டங்களை வகுப்பது வேறு,

திட்டங்களை நிறைவேற்றுவது வேறு,

பிற மாநிலங்ளில் பல தலைவர்கள் தங்களின் ஓட்டுகளை தக்கவைத்துக்கொள்வதற்காக, அரசாங்க பணத்தை வீணடிப்பதையும். தன் மாநில மக்களின் எதிர்காலம் பல்லாண்டுகாலம் நன்றாயிருக்க வேண்டும் என்று யோசிக்காமல் செயல்படுவதையும் கண்டு ஒரு இந்திய பிரஜையாக வருந்தியிருக்கிறேன்.

புரட்சிகரமான செயல்களில் இறங்கினால் சர்வாதிகாரி, அதிகார துஷ்பிரயோகி, யாரையும் மதிக்காதவர் என்ற கெட்டபெயர்களைதான் பட்டமாக சூட்டுவார்கள் என்று தெரிந்திருந்தும், பல அசாத்தியதிட்டங்களை அமுல்படுத்தி; தமிழ்மக்களின் எதிர்காலத்தை இதயத்தில் தாங்கி; ஏற்கெனவே ஆட்சி புரிந்த ஒரு துணிச்சலானவரை முதலமைச்சராக பெறுவதில் எம்குலமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

197 நாடுகளில் உள்ள தியானபீடத்தின் சத்சங்க மையங்கள் மற்றும் கோயில்களின் எண்ணிக்கை ஆயிரம்.  அவற்றில் 150 தியானபீட வழிபாடு ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கின்றன.  சென்ற வருடம் மார்ச் 2ம் தேதியில் இருந்து, கடந்த ஒன்பது மாதங்களில் 120 தியானபீட வழிபாட்டு ஸ்தலங்கள் சமூக விரோதிகளால் அடித்து நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்டிருக்கின்றன. வேறு மாநிலங்களில் உள்ள எங்களின் எந்தவொரு மையமும்  இப்படி தாக்கப்படவில்லை என்பதை தங்களின் பார்வை எடுத்து வைக்கின்றேன்.

தமிழகத்தில் மட்டும்தான் இந்தத் தொடர் தாக்குதல்கள் சமூக விரோதிகளால் அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன.  இதனால் இலட்சக்கணக்கான தமிழ்நாடு பக்தர்களின் வாழ்வு நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று உலகுக்கு முன்மாதிரியாக இருக்கும் தமிழ்நாட்டில் மிக வேகமாக நான் தாக்கப்பட்டேன் எல்லா நாட்டவரும் நம் மத ஆன்மீக வழிமுறைகளை வாழ்வதற்கான  வழிகாட்டியாக இருந்தேன் என்பதற்காக மட்டுமே அந்த விரோத ரவுடி கும்பல் சர்வதேச மத விரோத சக்திகளோடு கைகோர்த்து என்னையும், என் இயக்கத்தையும் அழிக்கமுயற்சி செய்தது.

இதையெல்லாம் தாண்டி சமீபத்தில் நாங்கள் சொன்னதாக வெளிவந்திருந்த செய்திகள் எங்களின் இதய உணர்வுகளை புரிந்துகொண்ட உங்களின் பெருந்தன்மையையும், மக்களுக்கு உதவும் பெருநோக்கையும்  காட்டுகிறது. நீங்கள் சொன்னதாக வெளிவந்த இந்த உணர்வுமிக்க அன்புவரிகள்… லட்சக்கணக்கான எம்குல பக்தர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை பாய்ச்சியிருக்கிறது.

கடந்த ஐந்து வருடத்தில் எத்தனையோமுறை நீங்கள் கண்ணீர் சிந்தி விட்டீர்கள், அல்லல்பட்டுவிட்டீர்கள், இரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறீர்கள்.  அதையெல்லாம் துடைத்துவிடுங்கள். கண்ணீர் சிந்துவதை நிறுத்திவிடுங்கள். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். அதற்கு நான் பொறுப்பு.” என்ற இந்த ஆறுதல் வார்த்தைகளை லட்சக்கணக்கான எம்குல மக்களுக்கு, நம்பிக்கை சங்கொலியாக தந்த தங்களின் சமூக பாதுகாப்பு பெருநோக்கிற்கு உளமாற நன்றி சொல்கின்றேன்.

சில பிரபல தமிழ் தொலைக்காட்சிகளும், சில பிரபல தமிழ் பத்திரிக்கைகளும் திட்டமிட்டு எங்களை அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும்  கடந்த ஒருவருடமாக செய்து கொண்டேயிருக்கிறார்கள். பொதுமக்கள் படிக்க முடியாத அளவிற்கு அருவருப்பான செய்திகளையும், காட்சிகளையும் என்னைச் சுற்றியும், என்னுடைய ஆஸ்ரமவாசிகளைச் சுற்றியும் சித்தரித்து எங்களின் சமூக அந்தஸ்தை படுகொலை செய்தார்கள். எங்களால் தமிழகத்தில் நடமாடமுடியாத அளவிற்கு இதயக்காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

எங்களைச்   சுற்றி   சித்தரிக்கப்பட்ட   பொய்க்   கட்டுரைகள் மற்றும் பொய்க் காட்சிகளால் பல கோடிகளை  இவர்கள் சம்பாதித்ததோடல்லாமல், பல கேடிகளை எங்களை நோக்கி ஏவியும் விட்டுருக்கிறார்கள்.

இதன் விளைவு, தமிழகத்தில் மட்டும் 17 இடங்களில் என்னுடைய பிரம்மச்சாரிணிகள் சேலை உருவப்பட்டு, காரணமேயில்லாமல் மானபங்கப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.  அதேபோல் 7 பிரம்மச்சாரிகள் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார்கள்.

கூலிப்படைகளை வைத்து  எங்களை கருவருக்க அவர்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், வெவ்வேறு வகையில் சமூக விரோதிகளை தூண்டிவிட்டு எங்களின் மத சுதந்திரத்தையும்,  அடிப்படை மனித  உரிமைகளையும் பறிக்கிறார்கள்.  சித்ரவதை செய்கிறார்கள்.

இவை அனைத்தையும் மீறி அஞ்சா நெஞ்சம் கொண்ட; ஆன்மீக பலம் கொண்ட; அமைதியையும்,  அஹிம்சையையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்ட,  லட்சக்கணக்கான என் பக்தர்கள் தமிழகத்தில் மீண்டும் ஒன்று திரண்டு எழுந்து விட்டார்கள்.

அதைக் கொண்டாடும் விதமாக 2010 டிசம்பர் மாதம் 29 ஆம் தேதியில், ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் ஒன்று திரண்டார்கள்.  தொடர்ந்து 48 நாட்கள் குரு முடி விரதம் இருந்து கிரிவலம் வருவதற்கும், அதில் நான் கலந்து கொள்வதற்கும் ஜனநாயக மத சுதந்திரப்படி விரதம் எடுத்து அதை நிறைவேற்ற ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்தார்கள். ஆனால் எங்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல் துறையே எங்களை மாடவீதிவலம் செல்ல வேண்டாம்,  கிரிவலம் செல்ல வேண்டாம் என்று தடுத்தது எங்களின் அடிப்படை மத உரிமையை பறித்து விட்டது.  இது எல்லோருடைய மத உணர்வையும் நேரடியாகக் காயப்படுத்தியிருக்கிறது.

120 தியானபீட வழிபாட்டு ஸ்தலங்கள் எரிக்கப்பட்டு,   17 பிரம்மச்சாரிணிகள் மானபங்கப்படுத்தப்பட்டு,           7  பிரம்மச்சாரிகள் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாகியும்,           இன்றுவரை   ஒருமுறைகூட திருப்பி அடிக்காமல், அஹிம்சையையும் அமைதியையும் மட்டுமே கடைபிடித்து, எம்குல இலட்சக்கணக்கான பக்தர்கள் மிகவும் காயப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு  சமூக விரோதிகளால் ஏற்பட்டிருக்கும் இழப்புகள், இழப்பீடு தரமுடியாத அளவிற்கு ஆழமானவை. மோசமானவை.

தமிழகத்தில் எங்களுக்கு நடந்து முடிந்த கொடுமைகளை பக்தர்கள் மன்னித்து விடுவார்கள்.  அவர்கள் அந்த அளவிற்கு பக்குவப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த அப்பாவி பொதுமக்கள் மத,  ஆன்மீக நம்பிக்கையை வாழ்கிறார்கள் என்பதற்காகவே இனியும் தாக்கப்படக் கூடாது.  இதை நிறுத்தத்திற்கு கொண்டுவருவதும்; இவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான மத சுதந்திரத்தை மீட்டுத்  தருவதும் சமூக விரோதிகளிடமிருந்து எம்குல தமிழ் மக்களை காப்பாற்றுவதும், மீட்டுத்  தருவதும், உங்களின் மேலான பார்வைக்கு எடுத்து வந்த  உடனேயே நடந்துவிடக் கூடிய ஒன்றுதான் என்பதை உணர்ந்து இக்கடித்தை எழுதுகிறோம்.

நாங்கள் எங்கள் அஹிம்ஸை கொள்கையிலிருந்து மாறமாட்டோம்.  இந்த அஹிம்ஸையின் உறுதியினாலேயே இதை எதிர்கொள்வோம்.

யார்தான் இதற்குப் பதில் சொல்வது?

யார்தான் முற்றுப் புள்ளி வைப்பது?

யார்தான் இதைக் கேட்பது?

எங்களைத் தாக்கும் சமூக விரோதிகள் தாங்களாகவே ஓய்ந்து போவார்கள் என்றுதான் அமைதியாகவே இருந்தோம். இனியும் பொறுத்துக்கொள்வது… இந்த நாட்டில் வாழும் என் மக்களுக்கு, என் பக்தர்களுக்குச் சாத்தியமில்லை என்பதனால், தமிழக முதல்வரான உங்களின் பார்வைக்கு, இந்த மொத்தச் செய்தியையும் நேரடியாக எடுத்துவந்து, உங்களுடைய உடனடி நிவாரணத்திற்காகக் காத்திருக்கப் போகின்றோம்.

சென்ற வருடமே இதேப் போன்ற ஒரு நிவாரணத்திற்காக காத்திருந்தோம். ஆலய மணியை பசு இழுத்து அடித்தாலே, அதற்காக ஓடோடி  வந்து நீதி அளிக்கும் அரசர் பரம்பரையைச் சேர்ந்த இம்மண்ணில், 25,000பேருக்கு முன்பாக வேறு வழியே இல்லாமல் பகிரங்கமாக இதேக் கடிதத்தை சென்ற வருடம் படித்தேன். அப்படிப் படித்துப் பயனில்லை. சமூக விரோத கும்பல் தாக்குதலை தொடர்கிறது. சில மாதங்களுக்கு முன்புகூட 20 பேர் தங்கியிருந்த ஒரு தியான கூடாரத்தை, திருவண்ணாமலை ஆசிரமத்தில் சமுக வீரோத கும்பல் தீ வைத்தது. தெய்வாதீனமாக பொதுமக்கள் பலரின் உதவியல் உடனடியாக தீ அணைக்கப்பட்டு நாங்கள் காப்பாற்றப்பட்டோம் என்பதை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

்இதுவரை நாங்கள் கொடுத்த எல்லா தகவல்களையும், நீங்கள் உங்கள் உளவுத்துறையின் மூலமாக வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்ீீ என்ற வேண்டுதலையும்  அன்றே அரசுக்கு சமர்ப்பித்தோம். ்சாதாரணமாக வெறுமனே உங்கள் பெயரை உபயோகப்படுத்தி, எங்களையெல்லாம் தாக்குகின்ற, ஊடகங்கள் சொல்லுகின்ற வார்த்தைகளை மட்டும் கேட்காமல், உங்கள் உளவுத்துறை மூலமாக நாங்கள் கொடுத்திருக்கும் இந்தப் புள்ளி விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.ீீ என்று அன்றே நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

இதற்கப்புறமும்  எங்களைத் தாக்கும் சமூக விரோதிகளிடமிருந்து, எங்களுக்கு பாதுகாப்புகிடைக்காது போனால், வேறு வழியே இல்லை…….. கன்னியாகுமரியில் இருந்து ஒவ்வொரு கிராமம் கிராமமாக,  பாதயாத்திரையாக சென்று ஒவ்வொரு வீட்டு படியேறி எங்களின் 1200 ஆஸ்ரமவாசிகள், பிரம்மச்சாரிகள் மற்றும்  சந்நியாசிகளோடு பக்தர்களும் சேர்ந்து, நாங்கள் எங்களின் இதய ஓடு ஏந்தி, அன்புப் பிச்சை கேட்டு எங்களின் சுயகவுரத்தை மீட்டுக் கொள்வது மட்டும் தான் வழியாகத் தெரிகிறது.

நாங்கள் ஓடேந்தி பாதயாத்திரை சென்றால்தான் வாழ முடியும் என்கின்ற நிலையை இந்தச் சமூக விரோதிகள் உருவாக்கி விட்டார்கள் என்று அன்றே நாங்கள்  வேறு வழியில்லாமல் சொன்ன அன்புப் பிச்சையைப் நாங்களே பெறத்தான் நாங்கள் தள்ளப்பபட்டிருக்கிறோம்.

உணர்வு அளவில் காயப்பட்டிருக்கும் நாங்கள் இழந்த மதச் சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் மீட்டுத்தர தாங்கள் நடவடிக்கை எடுக்குமாறு, அன்போடு தமிழ்நாடு நித்யானந்த தியானபீடங்களின் சார்பாகவும், அகில உலக நித்யானந்த தியானபீடங்களின் சார்பாகவும், தமிழ்நாடு அல்லாமல் பல இடங்களில் வாழும் எங்கள் தியானபீட தமிழ் அன்பர்கள் சார்பாகவும் உங்களிடம் ஆழ்ந்த அன்போடும், பணிவோடும், சமூகப்பொறுப்போடும்இக்கடிதத்தை விண்ணப்பிக்கின்றேன்.

இந்தக் கடிதத்தை கோடிக்கணக்கான மக்களின் கண்ணீரோடு, சில லட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தோடு உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகின்றேன். நேரில் உங்களிடம் வந்து அளிப்பதற்கு நேரம் அளிக்குமாறும் வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.

உணர்வளவில் மிகவும் காயப்பட்டிருக்கும் எம்குல தமிழ்மக்கள் இழந்த மத சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் மீட்டுத் தர தாங்கள் நடவடிக்கை எடுக்குமாறு அன்போடு தங்களிடம் விண்ணப்பிக்கிறேன், சமர்ப்பிக்கிறேன்.

இப்படிக்கு,

பரமஹம்ஸ நித்யானந்தர்

admin

9 thoughts on “மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்

 1. Paramahamsa Nithyanandarukku.

  JAI

  Paramahamsa Nithyanandarukku.

  JAI
  ********************

  JAI SRI PARAMAHAMSA NITHYANANDA

 2. annamalaiyin meedhu thanadhu athigara balathai kattiya suriyan pathavi ezhandhu pona varalarai..arunachala puraanathil padikkatha pagutharivu vaathigal endru thangalai sollikollum poiyargal kalaraiku pogum naal vandhu vittadu…maghathil pirandhu meendum mannai aandu kondu irukindra thamizhaga mudhalvar indha kaditharku bhadilai seyalai kattukindra pozhudu thamizhagam mattum alla india mattum alla prabhanja shakthiaye avarai aaseervathikkum…..
  JAI PARAMAHAMSA SRI SRI NITHYANANDA SWAMI KU JAI……….

 3. என் சற்குருநாதரின் பாதம் போற்றி,

  இந்தக் கடிதம் தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி மலேசிய திருநாட்டில் வாழும் எங்களுக்கும் ஒரு விடிவெள்ளியாக அமைந்துவிட்டது. எங்களின் வெளியுலக வாழ்க்கையையும் உள்ளுலக வாழ்க்கையையும் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டே ஆனந்தமயமாக்கி, வாழ்க்கைத் தடைகளை நீக்கி உணர்வோடு கலந்துவிட்ட எங்கள் குருவுக்கு நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கின்றேன்.

  1. nithyanandam

   already the people are facing their own negative karmas.
   we have filed legally…cases are going on.
   cosmically…already judgments were given and accordingly actions are getting executed.
   so please dont worry about these snakes. we have amirtha with us.

 4. NITHYANANTHAM.Swamiji,they compulsory punished by nemisis.cases are going on successfully…already punishments are declared by the God.we have faith on Tamilnadu government.so please dont worry about these bloddy bit.

  1. my name jerald prasanna swami nithyanada avargallukku thanks iam daily watcing sathsang z tamil 6am at swami taking very very halpul in my life style is changing i have more new sathsangs thanks swamij

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *