அன்பின் ஊற்றாகுங்கள்

அன்பின் ஊற்றாகுங்கள்

[button link=”The URL of the button” variation=”red”]அன்பின் ஊற்றாகுங்கள்[/button]
Become the Source of Love

 

 

உண்மையான அன்பு என்பது மிக ஆழமானதாகவும், சக்தி அளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. மேலும் அது, உங்களது அனுபவமாகாதவரை, உங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகவும் இருக்கிறது. அன்பு என்பது சக்தியின் வெளிப்பாடேயன்றி, அது செய்ய வேண்டிய ஒரு செயல் அல்ல.

ஒரு விஷயத்தை எனக்குச் சொல்லுங்கள், மக்களை முதல் முதலாக பார்க்கும் போதே அவர்களின் மீது உங்களால் அன்பு செலுத்தமுடியுமா? நான் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது மக்கள் பெரும்பாலும் செல்லும் பதில் இதுதூன், அது எப்படி சாமி? அவர்கள் யார் என்றுகூட தெரியாத போது அவர்கள் மீது என்னால் எப்படி அன்பு செலுத்த முடியும்?”

சரியாகச் செல்ல வேண்டுமென்றால், இப்படித்தான் நீங்கள் எல்லாருமே நினைக்கிறீர்கள். ஆனால் சிறிதளவு அறிவுப்பூர்வமான புரிதலும் தியானமும் இருந்தால் போதும், உங்களால் யார்மீது வேண்டுமானாலும், காரணமே இல்லாமல், இயல்பாகவே அன்பு செலுத்த முடியும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்!

நடைபாதையில் இருக்கும் மரங்கள் மீது கூட நீங்கள் அன்பு செலுத்த முடியும். அவற்றின் மீது அக்கறைகொள்ள முடிவதையும், உங்களிடமிருந்து ஒரு சக்தியோட்டம் பாவதையும் உணர முடியும்.

சாலையில் உங்களைக் கடந்து செல்லும் முன்பின் தெரியாத மணிதர்களைக்கூட உங்களால் நேசிக்க முடியும். உண்மையில், அன்புதான் உங்களின் சுயத்தன்மை; அது, நீங்கள் கொண்டிருக்கும் தூமைப்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு பண்பு அல்ல. இன்றைய நாளில் அன்பு என்ற வார்த்தை தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதைப் போல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வேறு ஒரு கருத்து இருக்க முடியாது என்றே சொல்லலாம். இக்காலத்தில் அன்பு ஒரு வியாபாரம் போலாகிவிட்டது. யாராவது ஒருவர் உங்களுக்குப் பிடித்தது போல் பேசும்போது, நீங்கள் அவரை விரும்புகிறீர்கள். அதே மனிதர் நாளை உங்களுக்குப் பிடிக்காததைச் செய்யும்போது, நீங்கள் அவரை முன்பு நேசித்ததுபோல் நேசிப்பதில்லை; அல்லது அனேகமாக அவரை வெறுக்கவே தொடங்கி விடுகிறீர்கள்.

தினமும் கணினியின் மூலம் உரையாடிக் கெண்டிருக்கும் ஒரு உயிர் நண்பர் கூட, உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தைச் சொன்னாரென்றால, உடனே அவர் உங்களுக்கு வேண்டாதவராகிவிடுகிறார். இப்போது உங்களது அன்பு எங்கே போயிற்று? அந்த அன்பு தற்காலிகமாகப் பாதிப்புக்குள்ளாகிவிட்டது! நீங்கள் சாதாரணமாக விளையாடும் ஒரு விளையாட்டு போன்றதுதான் அது. அந்த விளையாட்டில் அன்பும் வெறுப்பும் மாறி மாறி வரக்கூடியதாகவும், ஒன்று மற்றொன்றாக மாறக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த அன்பு – வெறுப்பு உறவுமுறையில், உண்மையில் அன்பு என்பதே கிடையாது. இப்படி அன்பும், வெறுப்பும் மாறி மாறி வரும்போது, அது அன்பே அல்ல. தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள், அது வெறுமனே ஒரு மனிதருக்கோ (அ) சூழ்நிலைக்கோ நீங்கள் பதிலளிக்கும் ஒரு செயல்தான். இதைத்தான் நாம் அன்பு என்கிறோம். இது உண்மையான அன்பு அல்ல. அது, பொருள்சார்ந்த அல்லது பலன்சார்ந்த அன்பு அவ்வளவுதான்.

உண்மையான அன்பிற்குப் பொருளைப் பற்றித் தெரியாது; அதற்கு எந்தப் பொருளும் தேவை இல்லை. அங்கு ஒரு பொருள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அன்பு இருக்கும். உண்மையான அன்பில், அன்பு செயப்படும் பொருளாகவும் அன்பே இருக்கிறது. அன்பு என்பது அன்பிற்காகவே! அதற்கு வேறு எந்தப் பொருளையும் தெரியாது.

நீங்கள்தான் அன்பிற்குரிய பொருளாக இருக்கிறீர்கள், அப்போது நீங்கள் அன்பு மயமாகவே ஆகிவிடுகிறீர்கள். அதன் பிறகு அந்த அன்போடு தொடர்பு கொள்ளும் எந்த ஒரு பொருளும் அந்த அன்பை உணர்கிறது.

தன்னிச்சையாக, இயல்பாகப் பாய்ந்தோடும் நதியை வெவ்வேறு இடங்களில் தொடர்புகொள்ளும் மக்கள் அனுபவிப்பதைப் போலவே, உங்களது அந்த அன்பையும் மக்கள் அனுபவிக்கிறார்கள்.

ஒரு மனிதரிடமிருந்து உண்மையான அன்பு பொங்கிப் பரவும் போது, அவரைச் சுற்றி இருக்கும் மக்களும் அந்த அன்பின் ஊற்றை உணர முடியும். உண்மையான அன்பில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது.

உங்களுக்குள் இருக்கும் சக்தியானது, அன்பாக மட்டுமே பொங்கி வெளிப்படவேண்டும். அதற்குப் பிறகு உங்களைச் சுற்றி இறுக்கியுள்ள உறவுக் கட்டுகளின் எல்லைகளை உடைத்தெறிந்து உங்களை நீங்களே மிக அழகாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும் – அன்புமிக்க மனிதராக!

உங்களின் இருப்பின் பண்பை அதாவது அன்பைக் கண்டுபிடிக்க இரண்டு விஷயங்கள் செய்ய வேண்டும். ஒன்று, இது போன்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும். அவ்வாறு மீண்டும் மீண்டும் கேட்கும் போது உங்களுக்குள் அன்பைப் பற்றிய ஒரு உறுதியான கருத்து உருவாகிறது. இந்த வழியில் உங்களுக்கு உள்ளே உருமாற்றத்திற்கான செயல்முறைக்கு ஒரு தளம் உருவாகிறது.

இரண்டாவது விஷயம், தியானம். அதன் மூலம்தான், உண்மையாகவே உருமாற்றம் நிகழ முடியும். இந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். காரணமேயில்லாமல் அன்பு செலுத்தும் போது, நீங்கள் எல்லைகள் அற்று பரந்து விரிவடைகிறீர்கள்.

திடீரென உங்கள் உலகம், இந்த வாழ்க்கையை விட மிகப் பெரியதாகத் தோன்றுவதை உணர்வீர்கள். அது மிக மிக ஆனந்தமயமானது. அது ஒரு பரவச நிலையாகும்.

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் ஒரு சக்தி ஊற்றாகவே மாறிவிடுகிறீர்கள்.

உங்களுக்குள் பொங்கும் சக்தியோட்டமானது மற்றவர்களைத் தொட்டே தீரும். வேறு வழியே இல்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு உங்களிடமிருந்து அன்பு பொங்கிப் பரவுகிறது. இயற்கையாகவே மற்றவர்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். இனிமையான உறவுகள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்.

admin

One thought on “அன்பின் ஊற்றாகுங்கள்

  1. Anbe sivam, anbin mulam nalla – nalla karuthugai pagirthu seyalattra mudim yenpatai miga tulliyamaha unaramudikinrathu. anbu vanpai murikirathu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *