2012 ராசி பலன்கள்

2012 ராசி பலன்கள்

[button link=”The URL of the button” variation=”green”]2012 ராசி பலன்கள்[/button]

 

 

[button link=”The URL of the button” variation=”red”]மேஷ ராசி[/button]

 

தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ள மேஷ ராசி நேயர்களே!

சுதந்திரப்பிரியரான நீங்கள் குறிப்பிட்ட சட்ட திட்டங்களுக்கு அடிமையாய் இருப்பதை விரும்ப மாட்டீர்கள். உங்களுடைய அபிப்பிராயம் தனித்தன்மை உடையதாய் இருக்கும். கல்வியில் ஊக்கமும் பிடிவாத குணமும் கொண்ட நீங்கள், வெள்ளை உள்ளம் படைத்தவராக இருப்பீர்கள்.

 

21-12-2011-ல் ஏற்பட்ட சனி பெயர்ச்சியினால்

இவ்வருடம் வம்புவழக்குகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், வம்புவழக்குகளுக்குச் செல்லாதீர்கள், சொல் ஆற்றலால் செயல்பட, புகழும் அந்தஸ்தும் கூடும். பல தொழில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும், சமாளிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு சரியாகும். சரீர உஷ்ணமுடைய உங்களுக்கு மல சிக்கல் மற்றும் வயிறு சம்மந்தமான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.

 

ராகு – கேதுவின் நிலை – 21-12-2012 வரை

இவ்வருட கிரக நிலையில் ஆரோக்கிய குறைபாடுகள் பாதிஅளவே உண்டு. முயற்சியில் வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சரளமாக இருக்கும். பொருட் சேர்க்கையும் வெளி வட்டார உதவிகளும் சுமூகமாக அமையும்.

 

17-05- 2012 -ல் குரு பகவான் ரிஷிப ராசிக்கு பெயர்ச்சியாவதால்

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி குழந்தை பாக்கியம் ஏற்படும். இருப்பிட வசதி ஓரளவு கைகூடும். இடப் பெயர்ச்சியும் வாகன பலிதமும் உண்டாகும். தொழில் இணக்கங்கள் ஏற்பட்டு சமூகத்தில் நன்மதிப்பும் உடன் நிவர்த்தியும் ஏற்படும்.

 

பெண்களுக்கு: இவ்வருடம் கணவன் மனைவி உறவு சுமூகமாக அமையும். சந்ததிகள் நலன் கருதி பல செலவினங்களைச் செய்வீர்கள். பெற்றோரின் நலனில் கவனம் தேவை. புதிய வீடும், திடீர் அதிர்ஷ்டங்களும் ஏற்படும். புத்தாண்டில் ஆண்டு முழுவதும் குருபகவான் நன்மையாகவே அமைவதால், பல உதவிகளும் சுப செலவுகளும் பொன் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

மாணவர்களுக்கு: கல்வியில் தேர்ச்சியும் விரும்பிய பாடத் திட்டத்தில் நல்ல மதிப்பெண்களையும் பெறலாம். சிறிது தொய்வு ஏற்பட்டாலும், முயற்சியால் வெற்றி கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு: இதுவரை இருந்து வந்த மந்த நிலை நீங்கி புதிய பொலிவுடன் செயல்படலாம். வருட இறுதியில் சில தொய்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பரிகாரத்தினால், காரிய தாமதமின்றி வெற்றி கிடைக்கும்.

விளையாட்டுத் துறையினருக்கு: பல முயற்சிகளில் வெற்றியும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வருதலும் ஏற்படும். ஆசைகள் ஓரளவு பூர்த்தியாகி வெற்றி வாய்ப்புகளைப் பெறலாம்.

பரிகாரம்: செவ்வாய் கிழமையன்று, செவ்வாய் ஹோரையில், பழனிமலை முருகப் பெருமானைத் தரிசித்து, மேஷராசியின் விருட்சமான அத்தி மரக்கன்றை, ஏதாவது ஒரு முருகர் சன்னதியில் நட்டு வைத்து, பூஜித்து வர, இடர்கள் நீங்கி நன்மை பெறலாம்.

 

[button link=”The URL of the button” variation=”red”]ரிஷப ராசி[/button]

 

விடா முயற்சியும் பொது வாழ்க்கையில் சேவையும் உடைய ரிஷப ராசி நேயர்களே!

பெருமையும், பொறுமையும் உடைய நீங்கள் அநேகரை கவரும் முக சாயலுடனே இருப்பீர்கள்.

 

21-12-2011-ல் ஏற்பட்டசனி பெயர்ச்சியினால்

இவ்வருடம் எல்லோருடனும் கலகலப்பாக இராமல் ஒதுங்கியே இருப்பீர்கள். புதிய திட்டங்களை வகுத்து, பாராட்டுகளைப் பெறுவீர்கள். யோக போகமான வாழ்க்கை நிலை அமையும். பக்குவமான செயல்பாட்டினால் எதிலும் வெற்றி பெறலாம். அறிவாற்றலுடைய உங்களுக்கு சில சோதனைகள் வந்தாலும், பரிகாரத்தினால் வாழ்க்கையை வசதியாக அமைத்துக் கொள்ளலாம். சில சுப காரியங்கள் சுமூகமாக முடியும். வழக்கு வியாஜ்யங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.

 

17-12-2012-ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு வருவதால்

தொழில் துறையில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை. உறவினர் வருகையால் சுப விரயங்களும் சில தூர தேச பிரயாணமும் இருக்கும். மேலதிகாரிகளால் தொல்லையும், பணியில் அதிக உழைப்பும், உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்காமலும் சிரமங்களைத் தரலாம்.

 

02-12-2012 வரை  7-ல் ராகுவும் 1-ல் கேதுவும் அமைவதால்,

சில சங்கடங்களையும், வீண் விரயங்களையும், சுக குறைபாடுகளையும், எதிரிகளால் தொல்லையும் ஏற்படுத்தலாம். திருமணத் தடைகளை ஏற்படுத்தலாம். இடப்பெயர்ச்சிகளைத் தரும்.

 

பெண்களுக்கு: இவ்வருடம் வளமான வாழ்வு அமைந்து அன்புள்ளம் கொண்ட கணவருடன் சுமூக வாழ்வு வாழ்வீர்கள். வெளிவட்டார உதவிகளும், பணவரவும், சந்ததிகள் நலனும் சீராக அமையும். வாகன வகையில் சில இடர்களைத் தரலாம். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திவிடலாம்.

மாணவர்களுக்கு: கல்வியில் சுமாரான பலனும்,  முயற்சியால் தேர்ச்சியும் அடையலாம். வெளி நாட்டு யோகம் உண்டு. மேற்படிப்பு அமையும்.

வியாபாரிகளுக்கு: சுமூகமான அணுகுமுறையால் வெற்றி கிட்டும். பல எதிர்ப்புகளுக்கு இடையில் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். இரும்பு சம்மந்தமான துறையினருக்கு வெற்றியும், தோல், கெமிக்கல் சார்ந்த துறையினருக்கு பல கூட்டு முயற்சியால் வெற்றி அடையலாம்.

விளையாட்டுத் துறையினருக்கு: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளிநாட்டு வாய்ப்புகள் தேடிவரும். கடின உழைப்பே உங்கள் வெற்றியின் ஏணிப்படியாக அமையும். போட்டிகளில் வெற்றி தோண்ணூறு சதவீதம் அடையலாம்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சுக்ர ஹோரையில் சமயபுரம் மாரியம்மனை வணங்கி, அல்லது ஏதாவது ஒரு அம்மன் சன்னதியில், சுக்ர ஹோரையில், வேப்பமர கன்றை நட்டு, நெய்  தீபமேற்றி பூஜிக்க, நற்பலன்களைப் பெறலாம்.

 

[button link=”The URL of the button” variation=”red”]மிதுன ராசி[/button]

 

புகழ்ச்சியும் பெருமையும், உடைய மிதுன ராசி நேயர்களே!

பேச்சாற்றலால் அனைவரையும் கவரும் உங்களுக்கு

 

27-12-2011-ல் ஏற்பட்ட சனி பகவான் 5-ம் இடத்தில் பெயர்ச்சியாவதால்

சுகக் குறைபாடுகள் நீங்கி நன்மை பெறலாம். வெளிவட்டார புகழ் கூடும். எதிலும் வெற்றியும், தன வரவுகள் அபரிதமாகவும் இருக்கும். மண், மனை, பூமி வகையில் லாபமும் கூட்டுத் தொழிலில் மேன்மையும் ஏற்படும். நண்பர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். தீடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும், பொன் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

 

17-12-2012-ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 12-ல் வருவதால்

திருமணம் கைகூடுதலும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் ஏற்படும். சில சுபவிரயங்கள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. வெளி தேச வாய்ப்புகள் கூடும். முயற்சி பலிதமும், பண வரவுகளும் ஏற்படும்.

2-12-2012 வரை ராகு பகவான் 6-லும், கேதுபகவான் 12-லும் இருப்பது

சந்ததிகள் நலனிலும் பெற்றோர்கள் நலனிலும் கவனம் தேவை. சகோதர வகையில் நன்மதிப்பும் இருப்பிட வசதிகளும் கைகூடும். சமூகத்தில் நன்மதிப்பும் சில ஆலய தரிசனங்களும் ஏற்படும். போட்டிகளில் வெற்றியும், சத்ரு ஜெயமும் ஏற்படும்.

 

பெண்களுக்கு: கோபத்தை குறைத்து பெரியோர்களுக்கு அடிபணிந்து நடப்பது நல்லது. சில வீண் அலைச்சலும் ஏற்படும்; சொத்துக்கள் சேர்க்கையும் ஏற்படும். உறவினர் மூலம் நண்பர்கள் மூலம் இடர்களைச் சமாளிக்கலாம்.

மாணவர்களுக்கு: எதிர்பார்த்த நற்பலன்களை அடையலாம். சில பிரயாணங்களும் உங்கள் வெற்றிக்கு வழிகாட்டியாக அமையும். முயற்சியால் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறலாம். தெய்வ வழிபாட்டினால் நன்மையும் உண்டு.

வியாபாரிகளுக்கு: எப்போதும் இல்லாத புதிய தொழிலை தொடங்க உகந்த நேரமிது. ரியல் எஸ்டேட், ஓட்டல், திரைப்பட துறையினருக்கு வெற்றி வாய்ப்புகளைப் பெறலாம். முயற்சியால் சமூக நன்மதிப்புகளைப் பெறலாம்.

விளையாட்டுத் துறையினருக்கு: புதிய தொழில் உத்திகளை அமைத்து, அமோக வெற்றிகளை அடையலாம். பதவி உயர்வுகள் அமையும். குருவின் நல்லாசியுடன் செயல்படுவதால் போட்டிகளில் 80% நற்பலன்களைப் பெறலாம்.

பரிகாரம்: திருப்பதி வெங்டாஜலபதியை வணங்கி அல்லது ஏதாவது ஒரு பெருமாள் சன்னதியில், புதன் கிழமை புதன் ஓரையில், நெல்லிமரக்கன்றை நட்டு, தூப தீபத்துடன் வழிபட, நன்மைகள் பெருகும்.

 

[button link=”The URL of the button” variation=”red”]கடக ராசி[/button]

 

வாக்கு வன்மையும் சாமர்த்தியமும் உடைய கடகராசி நேயர்களே!

சேவையில் பிரியமும் அனைவரையும் பேச்சால் மயங்க வைக்கும் உங்களுக்கு

 

21-12-2011-ல் ஏற்பட்ட சனி பகவானின் 4-ம் இட பெயர்ச்சியால்

பல சுக குறைபாடுகளும், இருப்பிட வசதிகளிலும் வாகன வசதிகளிலும் தொல்லையும் ஏற்படலாம். பிறருக்கு உதவி புரியும் உங்களுக்கு இந்நேரத்தில் உதவி வாய்ப்புகள் குறையும். செய்தொழில் நாணயத்திற்காக பல நன்மைகளைப் பெறுவீர்கள். அனுபவமும் சமயோஜித புத்தியும் உங்களுக்கு நன்மதிப்பை ஏற்படுத்தும். கொடுக்கல் வாங்கலில் சில இடர்களைத் தரலாம்.

 

17-05-2012-ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ல் பெயர்ச்சியாவதால்

தொழில்துறையில் சில சங்டகங்களைத் தரலாம். வாகன வகையில் கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடுவது உங்களின் நன்மதிப்பைக் குறைக்கும்.

 

2-12-2012 வரை ராகு பகவான் 5-திலும் கேது பகவான் 11-ல் அமைவது

பிறர் செய்யும் இடைஞ்சல்களையும், கெடுதல்களையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பொதுச் சேவையில் நாட்டம் ஏற்படும். உழைப்பால் எதிர்பார்க்கும் நற்பலன்களைப் பெறலாம். தெய்வ அருள் உண்டு.

 

பெண்களுக்கு: சுமூகமான பலன்களையே தரும். முயற்சி பலிதமும், பணவரவும், பொருள் சேர்க்கையும் ஏற்படும். வெளிவட்டார உதவிகளில் 50% நற்பலன் உண்டு. சந்ததிகள் மூலம் நற்பலன்கள் கை கூடும்.

 

மாணவர்களுக்கு: போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் அதைத் தவிர்த்து வெற்றி பெறலாம். சிற்சில இடையூறுகள் ஏற்பட்டாலும், வழிபாட்டினால் முழுமையான பலன்கள் பெறலாம். வருடத்தின் ஜூலை மாதத்திற்கு மேல் நற்பலன்கள் அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு: லாபங்கள் கிடைக்காவிட்டாலும், நஷ்டம் ஏற்படாது. போதிய பண வரவு கிடைக்கும். இடையூறுகளைக் களைந்து எதிர்பார்த்த நற்பலன்களைப் பெறலாம். புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

விளையாட்டுத் துறையினருக்கு: கேளிக்கை ஈடுபாடுகள் அதிகரிக்கும். பிரயாணங்கள் உங்களின் பயிற்சிக்கு உதவியாக இருக்கும். நினைத்த காரியங்களில் 40% வெற்றி வாய்ப்புகள் இருப்பதால் முயற்சி தேவை. பெரியோரின் ஆசியும், தெய்வ வழிபாடும், பரிகாரங்களும் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.

பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சநேயர் (அல்லது) ஏதாவது ஒரு ஆஞ்சநேயர் கோயிலில், சனிக்கிழமையன்று, சந்திர ஹோரையில், அரசமரக்கன்றை நட்டுப் பஞ்சமுக தீபமேற்றி வழிபட்டால், நன்மைகள் அடையலாம்.

 

[button link=”The URL of the button” variation=”red”]சிம்மம்[/button]

கம்பீர தோற்றமுடைய சிம்ம ராசி நேயர்களே!

தனித்தன்மையும் தலைமை போக்கும் உடைய உங்களுக்கு

 

21-12-2011-ல் ஏற்பட்ட சனி பகவானின் 3-ம் இடப்பெயர்ச்சியால் பல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பொன், பொருள், பூமி வகையில் லாபமும், தடைபட்ட நிகழ்வுகள் யாவும் நிறைவேறுதலும் ஏற்படும். நீண்ட நாளைய உடல் உபாதைகள் யாவும் தீர்ந்து நன்மை பெறலாம். இதுவரை இருந்து வந்த நிலை மாறி, நண்பர்களும் உறவினர்களும் நேசக்கரம் நீட்டுவார்கள். உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நேரமிது.

 

17-05-2012-ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் பெயர்ச்சியாவதால்

நீங்கள் செய்யும் உத்யோகத்தில் கவனம் தேவை. கோபத்தைக் குறைத்து, பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் வளர்த்துக் கொண்டால், நன்மை அடையலாம். பிறரை அடக்கி ஆளுதலைத் தவிர்த்து, அன்புடன் செயல்பட வேண்டும்.

 

2-12-2012 வரை ராகுபகவான் 4-ல் கேது பகவான் 10-ல் அமைவது

சிலருக்கு தொழிலில் இடமாற்றங்களையும், புதிய தொழில் துவங்கும் யோசனையையும் தரும். பதவி உயர்வுகள் அடைவீர்கள். சுய-தொழில் வகையில் வருமானமும் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தும் அடைவீர்கள். சில தொழில் உதவிகள் கிடைக்கும்.

 

பெண்களுக்கு: பல விதங்களில் ஆதாயமும் உற்சாகமும் தரும். கணவன் மனைவி உறவு வகையில் கவனம் தேவை. பெற்றோர் வகையில் சில மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும், இறுதியில் சுகமடைவார்கள். பதவி உயர்வு உண்டு.

மாணவர்களுக்கு: புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். முயற்சியால் தேர்வில் 95% மதிப்பெண்களைப் பெறலாம். வெளிநாட்டு வாய்ப்புகள் உண்டு.

வியாபாரிகளுக்கு: அந்நியர்களால் பல நல்ல ஆதாரங்களைப் பெறலாம். பண வரவும், பொருள் சேர்க்கையும், வெளிவட்டார உதவிகளும் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கி வெற்றிகளைப் பெறலாம். தொழில் துவங்க நல்ல நேரமிது.

விளையாட்டுத் துறையினருக்கு: புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளிதேச தொடர்புகளும் சஞ்சாரமும் ஏற்படும். புகழ், கீர்த்தி, வெற்றி ஏற்படும். பல ஆடம்பர வசதிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தினரின் பாராட்டையும், நன்மதிப்பையும் பெறலாம். தெய்வ கடாட்சம் உள்ள வருடமிது.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை அல்லது ஏதாவதொரு விநாயகர் கோவிலில், ஞாயிற்றுக் கிழமை சூரிய ஹோரையில், ஆலமரக்கன்றை நட்டு, ஒரு நெய்தீபம் ஏற்றி வழிபட, நன்மைகள் பெருகும்.

 

 

[button link=”The URL of the button” variation=”red”]கன்னி[/button]

 

வேடிக்கையாகப் பேசும் குணமுடைய கன்னிராசி நேயர்களே!

சாந்த குணமும், அமைதியான சுபாவமும், இசைப்பிரியருமான உங்களுக்கு

 

21-12-2011-ல் சனி பகவான் 2-ல் பெயர்ச்சியாகி ஏழரை சனியின் அசுப கோச்சாரத்தால்

உங்களின் செயல்பாடுகள், முயற்சிகள் சரியானவையாக இருந்தாலும் உங்களால் வேகமாகச் செயல்பட முடியாது. வீண் அலைச்சலும் சிரமங்களும் ஏற்படலாம். பிறரது உதவிகளால் தொழில் துறையில்  மேன்மையை அடைவீர்கள். உங்களின் செயலில் கவனம் தேவை. திருமணம் போன்ற சுபகாரியங்களால் குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும்.

 

17-05-2012 -ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ல் பெயர்ச்சியாவதால்

எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றிகளைக் கொடுக்கும். சந்தோஷமும், சுகவாழ்வும், வாகன வசதியும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெறலாம். வேலைப்பளு கடினமானாலும், அரசாங்க உதவி கிட்டும். மன அமைதி ஏற்படும்.

 

2-12-2012வரை ராகு பகவான் 3-ல் கேது பகவான் 9-ல் அமைவது

யோக பலன்களையே தரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக அமையும். வாக்கு வன்மையும், வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலையும் அடைவீர்கள். தூர தேசப் பிரயாணம் ஏற்படும்.

 

பெண்களுக்கு: சுப காரியங்கள் எதுவாயினும் அதைச் சிறப்பான முறையில் செய்து முடிக்கலாம். வெளிவட்டாரத்தில் சில அனுபவங்களைப் பெறுவீர்கள். அந்தஸ்தும் புகழும் கூடும். போதிய சேமிப்பும், மனை வாங்குதலும், வீடு கட்டுதலும் ஏற்படும். வாகன வசதிகள் அமையலாம்.

மாணவர்களுக்கு: மனக்குறைகள் நீங்கி, தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்களுடைய காரியங்கள் எப்பொழுதும் போலவே இருக்கும். அரசாங்க வெளிதேச உறவுகள் ஏற்படும். வெற்றி மதிப்பெண்கள் 40% மட்டுமே வருவதால் படிப்பில் கவனம் தேவை.

வியாபாரிகளுக்கு: முன்னேற்றகரமான சுபிட்சமான லாபங்களைப் பெற பொறுமை அவசியம். தொழிலில் அதிக கவனம் தேவை. இரும்பு கெமிக்கல் சம்மந்தமான தொழில், பருத்தி ஆடை ஆபரண தொழில் புரிவோர் எதிர்பார்த்த நன்மைகளைப் பெறலாம்.

விளையாட்டுத் துறையினருக்கு: இருப்பிட வாகன வசதி வாய்ப்புகள் சிறிதளவு குறையும். பண விரயங்களை தந்தாலும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கலாம். போட்டியில் வெற்றி 40% இருப்பதால் அதிக முயற்சி தேவை. இடமாற்றத்தால் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறலாம்.

பரிகாரம்: மதுரை மீனாட்சியம்மன் (அல்லது) ஏதாவதொரு மாரியம்மன் கோவிலில், வியாழக்கிழமையன்று, குரு ஹோரையில், வில்வ மரக்கன்றை நட்டு, மூன்று முக தீபமேற்றி வழிபட, நற்பலன்கள் பெருகும்.

 

[button link=”The URL of the button” variation=”red”]துலாம்[/button]

 

பரோபகார குணமும், வசீகர தோற்றமும் உடைய துலாராசி நேயர்களே!

செயலில் பின்வாங்கும் குணமில்லாத உங்களுக்கு

 

21-12-2011-ல் சனி பகவான் ஜென்ம ராசியில் பெயர்ச்சியானது ஏழரை சனியின் இடைப்பகுதி காலமானதால்,

உங்களின் ஆற்றல் செயல்பாடுகள் குறையும். இருந்தாலும், இதர கிரகங்கள் சுமூகமான நற்பலன்களைக் குறைக்கும். வீண் அலைச்சலும், ஆடம்பர செலவுகளும் கூடும். புதிய தொழில் ஒப்பந்தத்தால் சிறிது லாபங்களை எதிர்பார்க்கலாம். அந்நிய இனந்தவர்களால் தொந்தரவுகளும், சில விரயங்களும் ஏற்படும். செலவுகளைக் கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்.

 

17-05-2012 குரு பகவான் 8-ல் பெயர்ச்சியாவது

செய் தொழிலில், வாகனாதி மோட்டார் வகை, துணி வகை போன்றவற்றில் வருவாய் பெருக்கமும், சில வெளிவட்டார உதவிகளும் கிடைக்கும். சந்திராஷ்டம தினங்களில் கவனம் தேவை. சில ஆரோக்கி குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

 

2-12-2012 – ராகு பகவான் 2-ல் கேது பகவான் 8-ல் அமைவது

கால சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்தினாலும், வாக்கு வன்மை கைகூடும். கூட்டு தொழிலிலும், சகோதர சகோதரிகள் இணக்கத்திலும் கவனம் தேவை. வாகன வகையில் கவனத்தைக் கையாள வேண்டும்.

பெண்களுக்கு: கணவன் மனைவி உறவு நிலையில் பரிபூரணமும், சில சுகக் குறைபாடுகளும் ஏற்படும். பெற்றோரின் ஆசியும், கட்டுமான பணிகளில் ஈடுபடுதலும், பழுது பாராமரித்தலும் ஏற்படும். எதிர்பாராத வரவும், வாய்ப்பும் உண்டு.

மாணவர்களுக்கு: முயற்சியில் வெற்றி இருந்தாலும், முன்னெச்சரிக்கை தேவை. சில ஞாபக குறைபாடுகள் ஏற்படலாம். எனவே சரஸ்வதி வழிபாடு, ஹயக்கீரிவ வழிபாடு நன்மைகளைப் பெருக்கும். இவ்வருடம் 50% நற்பலன்களைப் பெறலாம்.

வியாபாரிகளுக்கு: இதுவரை இருந்துவந்த விரயங்கள் விலகி, புதிய வரவுகளும் பழையன கழிதலும் ஏற்படும். இடமாற்றமும், புதிய தொழில் முயற்சியும் ஏற்படும். விரயங்களைத் தவிர்க்க, கூட்டு தொழிலால் பல மேன்மைகளைப் பெறலாம். வெளி வட்டார உதவிகள் கிடைக்கும்.

விளையாட்டுத் துறையினருக்கு: சில சுக குறைவுகள் ஏற்பட்டாலும், புதிய உபகரணங்கள் வாங்குவதால் மேன்மையான பயிற்சிகளைப் பெறலாம். எதிலும் அவசரப்படாமல் பொறுமையை கையாள்வது நல்லது. இதனால் 60% வெற்றியைப் பெறலாம். வழிபாட்டினால் நன்மை உண்டு.

பரிகாரம்: ஸ்ரீரெங்கம் ரெங்கநாதரை தரிசித்து (அல்லது) ஏதாவது ஒரு பெருமாள் சன்னதியில் வெள்ளிக்கிழமையன்று சுக்கிர ஹோரையில், விளாமரக் கன்றை நட்டு, இரண்டு எள் தீபமேற்றி வழிபட, நன்மைகள் பெறலாம்.

 

[button link=”The URL of the button” variation=”red”]விருச்சிகம்[/button]

 

சுதந்திரப் பிரியரான விருச்சிக ராசி நேயர்களே!

நல்ல நடத்தையும் மதப்பற்றுதலும் உடைய உங்களுக்கு

 

21-12-2011-ல் சனி பகவான் 12-ல் பெயர்ச்சியாகியிருப்பதால்,

இது ஏழரை சனி பகவானின் ஆரம்ப காலமானதால், ஆரம்பத்தில் பலவிதமான பணம் பொருள் விரயங்களைக் கொடுக்கும். தொழிலில் பல எதிர் நீச்சல்களைச் சந்திக்க வேண்டிவரும். வாழ்வின் படிப்பினையைத் தெரிந்து கொள்ளும் காலம் இது. பலரும் பாராட்டும்படியான செலவுகளை செய்து பெருமைகளை அடைவீர்கள். திருமணம் கைகூடும் காலம் இது. திடீர் தன வரவுகள் ஏற்பட்டாலும் அதனைத் திறம்பட செயல்படுத்தி, செலவினங்களைக் குறைக்க வேண்டும்.

 

17-05-2012 குரு பகவான் 7-ல் பெயர்ச்சியாவது

தாமத திருமணத்திற்கு வழிவகுக்கும். எந்த வேலையிலும் தாமதத்தை கொடுத்தாலும் இறுதியில் சிறப்பான நற்பலன்களைப் பெறலாம். தொழிலிலி படிமானம் ஏற்பட நல்ல காலம் இது. உடல் நலனில் கவனம் தேவை. முயற்சியால் வெற்றி கிட்டும்.

 

2-12-2012 – வரை ராகு பகவான் ஜென்ம ராசியிலும் கேது பகவான் 7-ல் அமைவது

நாக தோஷத்தைத் தந்தாலும் அவசர குணங்களையும் முன்கோபத்தையும் தவிர்த்து பெரியோர்களின் ஆசியினால் நன்மை பெறலாம். திருமண ப்ராப்தி தங்குதடையின்றி நிறைவேறும். குடும்ப நலனில் அனுசரித்து செல்வது நல்லது.

 

பெண்களுக்கு: உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் சில இடர்பாடுகள் ஏற்பட்டாலும் பெரியோர்களின் ஆலோசனையால் பூசல்களைத் தவிர்க்கலாம். உத்யோகஸ்தர்கள் இடப்பெயர்ச்சியைத் தவிர்த்து, ஆலோசித்து செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு: உடல்நலனில் அக்கறை தேவை. பல ஆதாய விருத்திகளைப் பெறுவீர்கள். போட்டிகளில் வெற்றி 50% இருப்பதால் பெற்றோரிடமும் சமூகத்தில் பல நன்மதிப்புகளைப் பெறலாம். வழிபாட்டினால் என்றைக்கும் வெற்றி கதவுகள் திறந்தே இருக்கும்.

 

வியாபாரிகளுக்கு: புதிய வரவுகள் கைகூடும். திறமையுடன் செயல்படுவதால் பற்பல வெற்றிகளைப் பெறலாம். உங்களின் பணிவான அணுகுமுறையால் அரசாங்க வகையில் உதவிகளும் கிடைக்கும். சில சுப விரயங்கள் ஏற்படலாம்.

விளையாட்டுத் துறையினருக்கு: அரசாங்க உதவிகள் கிட்டும். எந்தச் செயல்பாட்டிலும் வெற்றியைப் பெறலாம். மக்களின் ஆதரவு கூடும். பயிற்சியில் கடுமையாக ஈடுபடுவதால், போட்டியில் 50% வெற்றியைப் பெறலாம்.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகப் பெருமானை (அல்லது) ஏதாவது ஒரு முருகப்பெருமான் சன்னதியில், செவ்வாய் கிழமையன்று குரு ஹோரையில், பூவரச மரக்கன்றை நட்டு, ஆறுமுக தீபமேற்றி வழிபட, நன்மைகள் பெறலாம்.

 

[button link=”The URL of the button” variation=”red”]தனுசு[/button]

 

உயர்ந்த குணமுடைய தனுசுராசி நேயர்களே!

தைரியசாலியாகவும் செயலாற்றுவதிலே வல்லவராகவும் உடைய உங்களுக்கு

 

21-12-2011 சனி பகவான் 11-ல் பெயர்ச்சியாகியிருக்கிறார்.

பல காரிய சாதனைகளைச் செய்து வெற்றிபெறும் காலம் இது. பிறர் மோசம் செய்து விடுவாரோ என்ற மனப்பான்மையைக் குறைத்து, சந்தேகங்களைத் தவிர்த்து செயல்பட வெற்றி உண்டாகும். கலைத் துறையினருக்கு மேன்மை பெறுவர். கற்பதில் ஆர்வம் உள்ள உங்களுக்கு, புதிய முயற்சிகள் கைகூடும். பிறரின் ஆலோசனையை ஏற்று செயல்பட லாபங்களைப் பெறலாம்.

 

17-05-2012 குரு பகவான் 6-ல் பெயர்ச்சியாவது

சாதமான செயல்களை ஏற்படுத்தும். நற்பலன்கள் பெருகி தொழில் வளம் ஓங்கும். பந்துக்கள் வருகையால் பல நன்மைகள் கைகூடும். பொன் பொருள் சேருதலும், இருப்பிட சௌகர்களும் கூடும். வெளிவட்டார பதவிகள் கிடைக்கும். செல்வம் கூடும்.

 

2-12-2012 – வரை ராகு பகவான் 12-லும் கேது பகவான் 6-லும் அமைவது

அதிக அளவிலான குடும்ப செலவுகளைத் தரலாம். ஆண்டு முழுவதும் பண வரவுகள் வந்த வண்ணம் இருக்கும். நூதன முயற்சிகள் வெற்றி தரும். திடீர் லாபங்கள் அடையலாம். எதிலும் வெற்றியைக் காண்பீர்கள்.

பெண்களுக்கு: குடும்ப நன்மையும், அரசாங்க ஆதரவும் கிடைக்கும். குடும்ப நிலை சுமூகமாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். திருமணம் கைகூடும். பிணக்குகள் நீங்கி நல்லுறவுகளைப் பெறலாம். தைரியம் தெளிவு ஏற்படும்.

மாணவர்களுக்கு: படிப்பு பிரகாசமடையும். தேர்ச்சியில் முதலிடமும் பாராட்டும் பெறுவீர்கள். தூர தேச பயணம் படிப்பில் அனுபவங்களைத் தரும். தொடர்ந்து நற்பலன்களே ஏற்படும். உடல நலனில் கவனம் தேவை.

வியாபாரிகளுக்கு: பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள். அரசாங்க ஆதரவு கிடைக்கும். படிப்படியாக முன்னேற்ற வாழ்வினைப் பெறலாம். இருப்பிட வசதியும், வாகன பலிதமும், தொழில் மேம்பாடுகளும் ஏற்படும். கடன் நிவர்த்தியாகி சுமூக நன்மதிப்பைப் பெறலாம்.

விளையாட்டுத் துறையினருக்கு: உங்களின் நன்னடத்தைகள் உங்களுக்குப் பெருமையையும் பரிசுகளையும் பெற்றுத் தரும். முயற்சியில் வெற்றியும் காரிய சித்தியும் உண்டாகும். போட்டிகளில் 80% வெற்றி பெற வாய்ப்புண்டு.

பரிகாரம்: ஆலங்குடி குரு பகவானைத் தரிசித்து (அல்லது) ஏதாவதொரு சிவன் கோவிலில் வடபுறமுள்ள தட்சிணாமூர்த்திக்கு, வியாழக்கிழமையில், குரு ஹோரையில், எலுமிச்சை மரக்கன்றை நட்டுப் பூஜித்து, மூன்று முக விளக்கேற்றி, மஞ்சள்நிற புஷ்பத்தால் அர்ச்சிக்க, நலம் உண்டாகும்.

 

[button link=”The URL of the button” variation=”red”]மகரம்[/button]

 

உயர்ந்த குணமுடைய மகர ராசி நேயர்களே!

திடமான மனமும் நுண்ணறிவும் பெற்ற உங்களுக்கு

 

21-12-2011-ல் சனி பகவான் 10-ல் பெயர்ச்சியானது,

உங்களின் பதவியில் இடர்களைத் தரலாம். முரட்டு பிடிவாதம் சர்வாதிகாரமுடைய நீங்கள் உங்கள் பேச்சாற்றலால் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். முன்கூட்டியே ஆய்ந்து அறியும் குணமுடைய நீங்கள், அலட்சிய போக்குகளைக் கைவிட்டால் பல நன்மைகளைப் பெறலாம். பலமுறை ஆலோசித்து எதிலும் செயல்படுவது நல்லது.

 

17-05-2012 குரு பகவான் 5-ல் பெயர்ச்சியாவது

பல வேலைப்பளுவையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தும். திடீர் தனவரவுகள் ஏற்பட்டாலும், செலவுகளைக் குறைத்து, சமாளித்து செயல்படுவது நல்லது. வேலைப் பளு அலைகழிக்கும். புதிய பொறுப்புகளைத் தவிர்ப்பது நல்லது. பணியில் சுலபநிலை ஏற்பட்டு வருவாய் உயரும்.

 

2-12-2012 – வரை ராகு பகவான் 11-லும் கேது பகவான் 5-லும் அமைந்திருப்பது

செய்தொழில் வகையில் ஏற்பட்டு வந்த பிற்போக்கான சூழ்நிலைகள் யாவும் உயர்வு பெறும். உடல் உபாதைகள் தோன்றி மறையும். ஆடை ஆபரண சேர்க்கையும், உழைப்புக்கேற்ற ஊதியமும் அமையும். புதிய வரவுகள் கைகூடும்.

 

பெண்களுக்கு: எதிர்பார்ப்புகள் கைகூடி யோகமாக அமையும். பொருள் சேர்க்கையும் புகழும் உண்டாகும். பெரியோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தாய்தந்தையர் நலனில் கவனமாக இருக்கவும். புத்திர பாக்கியமும் திருமண விஷயங்களும் கைகூடி வரும்.

மாணவர்களுக்கு: படிப்பில் முழுக் கவனம் தேவை. நல்லதொரு ஸ்திர தன்மை அமையும் வரை ஓயாது படிக்க வேண்டும். வாகன வசதிகளும் கேளிக்கைகளும் உங்களின் படிப்பை திசை திருப்பி விடும். கவனம் தேவை.

வியாபாரிகளுக்கு: மக்கள் மத்தியில் புகழையும் செல்வாக்கையும் அடைவீர்கள். புதிய யுக்திகளை கையாண்டு கூட்டுத் தொழில் மூலமாக லாபம் அடையலாம். வாகன வகையில் யோகம் ஏற்படும். உணவுத்துறை சார்ந்தவர்கள் வெகுவான நற்பலன்களைப் பெறலாம்.

விளையாட்டுத் துறையினருக்கு: பேரும் புகழும் கூடும். பயிற்சிகளைப் பெற்று வெற்றி பெறலாம். உங்கள் உழைப்பால் பேரும் புகழும் கூடி 70% வெற்றி பெறலாம்.

பரிகாரம்: காஞ்சிபுரம் காமாட்சி அன்னையை வழிபட்டு (அல்லது) ஏதாவதொரு துர்க்கை சன்னதியில் சனிக்கிழமையன்று சுக்கிர ஓரையில் வெள்ளெருக்கன் செடியை நட்டு, எலுமிச்சை பழ தீபமேற்றி வழிபட, நன்மைகள் பெருகும்.

 

[button link=”The URL of the button” variation=”red”]கும்பம்[/button]

 

உழைப்பும் உற்சாகமும் கொண்ட கும்பராசி நேயர்களே!

பலரையும் சிநேகிதம் பிடித்து விடும் உங்களுக்கு

 

21-12-2011-ல் சனி பகவான்  பெயர்ச்சியானது 9-ம் இடம்.

அபரிமிதமான நற்பலனை ஏற்படுத்தும். கலை கல்வியில் மேன்மையும், உத்யோக உயர்வுகளும், வீடு வாகனம் வகையில் யோகமும் இருந்த சிரமங்கள் படிப்படியாகக் குறைந்து, பல மேன்மைகளை அடையலாம். குறையாக இருந்த வேலைகள் அனைத்தும் நிறைவேறி நற்பலன்களை அடையலாம். தொழில் வளங்கள் மேம்படும்.

 

17-05-2012 குரு பகவான் 4-ல் பெயர்ச்சியாவது

எதிலும் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும். குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். பெற்றோர்கள் மூலம் எதிர்ப்பும் இடைஞ்சல்களும் ஏற்படலாம். அரசாங்க ஆதரவுகள் கிடைக்கும். அதன் மூலம் பல இடர்களை நீக்கி, வெற்றிகளைப் பெறலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

 

2-12-2012 – வரை ராகு பகவான் 10-லும் கேது பகவான் 4-லும் அமைந்திருப்பது

சில தொழில் மாற்றங்களைத் தரலாம். வெளிதேச வாசமும், கேளிக்கையான பயணங்களை ஏற்படுத்தும். உங்கள் இலக்குகளில் சிலவற்றில் வெற்றி பெறலாம். கோபதாபங்களுக்கு ஆளாகாமல் பொறுமையைக் கையாள்வது அவசியம். இடப்பெயர்ச்சியால் நன்மை உண்டு.

 

பெண்களுக்கு: பிடிவாத குணத்தைத் தவிர்த்து, ஆன்மீக உணர்வுகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். சில எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதேபோல் எதிர்பாராத செலவுகளும் காத்திருக்கும். கணவரின் அன்பை முழுமையாகப் பெற முயற்சிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு: மிக சிரத்தை எடுத்துப் படிக்கவேண்டும். கூடிய வரையில் நன்மையான பலன்களை அடைய தெய் வ பக்தி அவசியம். சில உற்சாக குறைவுகள் ஏற்பட்டாலும், முயற்சியால் வெற்றி கிட்டும்.

வியாபாரிகளுக்கு: செலவுகள் அதிகமாகும் நேரமிது. செலவுகளைக் குறைத்து, வருவாய்க்கேற்ற வகையில் செலவினங்களைச் செய்ய வேண்டும். உங்களின் சகல விதமான தேவைகளும் நிறைவேறி, நிலுவையில் இருந்த கடன்கள் வசூலாகி நன்மை பெறுவீர்கள்.

விளையாட்டுத் துறையினருக்கு: அரிய வெளிதேச வாய்ப்புகள் தேடிவரும். பந்தய விவகாரங்கள் பிரச்சினையைக் கொடுப்பதாக இருந்தாலும், வெற்றி நிச்சயம். மருத்துவ செலவுகள் இருக்கும்.

பரிகாரம்: திருவண்ணாமலை அண்ணாமலையாரை வணங்கி (அல்லது) ஏதாவதொரு சிவன் கோவிலில் திங்கட்கிழமை சந்திர ஹோரையில், புன்னை மரக்கன்றை நட்டு, தேங்காயில் தீபமேற்றி வழிபட, நன்மைகள் பெருகும்.

 

[button link=”The URL of the button” variation=”red”]மீனம்[/button]

வாக்கு வன்மையும் கல்வியில் தேர்ச்சியும் உடைய மீன ராசி நேயர்களே!

எதிலும் விடாமுயற்சியுடனும் உறுதியான உழைப்பும் உடைய உங்களுக்கு

 

21-12-2011-ல் சனி பகவான்  பெயர்ச்சியானது 8-ம் இடம்.

எனவே அஷ்டமச் சனி வீண் அவமானங்களையும், கடன்படுதலையும், கஷ்டத்தையும், மற்றவர்களால் இடையூறுகளையும் உண்டாக்கும். எதிலும் யோசித்து பெரியோர்களின் ஆலோசனையுடன் செயல்படுவது நல்லது. திருமண வாய்ப்புகள் கைகூடும். குழந்தை பேறு கிட்டும்.

 

17-05-2012 குரு பகவான் 3-ல் பெயர்ச்சியாவது

அநாவசிய மனக் குழப்பங்களைத் தவிர்த்து சிந்தித்து செயல்பட வேண்டும். தான் தனியாக இருக்கிறோம் என்ற எண்ணத்தை விடுத்து, எதிலும் விடா முயற்சியுடன் செயல்படுவது நல்லது. அந்தரங்க சுத்தி உடைய உங்களுக்கு தெய்வ கடாட்சம் உண்டு.

 

2-12-2012 – வரை ராகு பகவான் 9-லும் கேது பகவான் 3-லும் அமைந்திருப்பது

யாருக்கும் கிடைக்காத பல அரிய வாய்ப்புகள் தேடி வரும். ஆனால் அதனை கோட்டை விட்டுவிடுவீர்கள். நெருக்கடியில் பல நண்பர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். தொழில் மாற்றங்கள் ஏற்படும்.

பெண்களுக்கு: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். சுறு சுறுப்பு அவசியம். அளவுக்கு மீறின தாராள மனத்தைக் குறைத்து சேமிப்பைக் கடைபிடிக்க வேண்டும். சரளமாகப் பேசும் உங்களுக்கு சில சோதனைகள் காத்திருக்கின்றன.

மாணவர்களுக்கு: முயற்சித்து படிக்க வேண்டிய காலம் இது. போட்டிகளும் பொறாமைகளும் அதிகரிக்கும். கேளிக்கைகளைக் குறைத்து, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சித்தால் 45% பலனைப் பெறலாம். வாகன வகையில் கவனம் தேவை.

வியாபாரிகளுக்கு: பண வரவுகள் அபரிமிதமாக இருந்தாலும், எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். கை எழுத்து போட்டுவிட்டு காலை வாரி விடுவார்கள். உடல் நலனிலும் மன நலனிலும் அக்கறை தேவை. குடும்ப செலவுகள் கூடும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து வழிபாட்டினால் வெற்றி பெறலாம்.

விளையாட்டு துறையினருக்கு: தேவையற்ற வீண் குழப்பங்களைத் தவிர்த்து, முழுமையான பயிற்சியில் ஈடுபட வேண்டும். தீவிர முயற்சியால் 50% வெற்றிகளைப் பெறலாம். வாகன வகையில் பழுது பார்க்கும் செலவினங்கள் கூடும். எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபடுவது (அல்லது) ஏதாவதொரு நவகிரக சன்னதியில், சனிக்கிழமையன்று சனி ஹோரையில், சந்தன மரக்கன்றை நட்டு, எள் தீபமேற்றி வழிபட, நன்மைகள் உண்டாகும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *