சீடர்களுக்கு

சீடர்களுக்கு

 

 

[button link=”The URL of the button” variation=”red”]உங்கள் கடமையைச் செய்யாதீர்கள்[/button]

Don’t Do your duty

 

ஒரு முறை, சன்யாசம் பெறுவதற்காக ஒரு மனிதர் புத்தரை அணுகினார். தாம் புத்தரின் சீடராக வேண்டும் என்று அவர் விரும்பினார்.

 

அதற்கு புத்தர் புன்சிரிப்புடன் பதில் சொன்னார், சரி, நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதற்கு முன் ஒரு நிபந்தனை! முதலில் உனது குடும்பத்தினர், நண்பர்களை கொன்று விட்டு அதன் பிறகு என்னிடம் வா,”என்றார்.

 

அந்த மனிதருக்கோ அதிர்ச்சி!

 

புத்தர் சொல்வதின் பொருள் என்ன? புத்தர், அந்த மனிதருடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் உடல்ரீதியாகக் கொல்லச் சொல்கிறாரா?

 

இல்லை! அவர் சொல்வதின் பொருள்: செல்! உனக்குத் தொடர்ந்து அறிவுரைகள் சோல்லிக்கொண்டும், உன்னைத் தொந்தரவுபடுத்திக் கொண்டும் உனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தின் குரல்களைக் கொன்றுவிட்டு வா! அவர்களை மனோரீதியாகக் கொல், உடல் ரீதியாக அல்ல. அவர்களுடைய தாக்கத்தை உன்னுடைய உள் இருப்புத்தன்மையிலிருந்து அகற்றிவிடு, என்பதுதான்.

 

உங்களது வாழ்க்கையைச் சற்று கூர்ந்து கவனியுங்கள்.

எத்தனை மனிதர்கள் உங்களது தலைக்குள் அமர்ந்து கொண்டு, வாழ்க்கையை எப்படி வாழ்வது, வாழ்க்கையில் நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்?

எது சரி, எது தவறு என்று எத்தனை பேர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்?

உங்களது வாழ்க்கையை யார் யாரெல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்?

 

உங்களது பெற்றோர்கள், உங்களது குழந்தைகள், உங்களது வாழ்க்கைத் துணை, உங்களது நண்பர்கள், அறிமுகமில்லாதவர்கள், சமுதாயம், சட்டம், நீங்கள் படித்த நீதிநெறி புத்தக எழுத்தாளர்கள், நீங்கள் இதுவரை கேட்ட மேடைப் பேச்சாளர்கள் இவர்கள் எல்லோருமே உங்களது தலையில் அமர்ந்திருக்கிறார்கள்.

 

யாருக்காக, எதற்காக எதைத் தியாகம் செய்ய வேண்டும் என்று சொல்வதற்குப் போதுமான மனிதர்கள் இருக்கிறார்கள். உங்கள் குடும்பத்திற்காக, உங்கள் பிள்ளைகளுக்காக, உங்கள் தா நாட்டிற்காக உங்கள் கருத்துகளுக்காக, உங்கள் கடவுளுக்காக… என்று நீள்கிறது பட்டியல்!

 

ஒவ்வொரு தேச பக்தருமே, எதிரியைக் கொல்வது தம்முடைய கடமை என்று நினைக்கிறார். ஏன் ஹிட்லர் கூட, இந்த பூமியில் உள்ள யூதர்களைக் கொல்வதை, தம்முடைய புனிதமான கடமையாகத்தான் கருதினார்.

 

போர்க்களத்திலாவது பரவாயில்லை, மக்கள் தங்களுடைய கடமைக்காக எதிரிகளை கொல்கிறார்கள். ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள் தெரியுமா? உங்களை நீங்களே கொன்று கொண்டிருக்கிறீர்கள்!

 

விழிப்புணர்வோடு இந்தக் கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளுங்கள். என்னுடைய கடமையை செய்வதற்கான உண்மையான காரணங்கள் என்ன? யாரையாவது சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஆசையா? ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற பயமா? குற்ற உணர்ச்சியிலா? நீதி  ஒழுக்க நிலைகளில் மிகவும் உயர்ந்திருக்க வேண்டும் என்கிற  கர்வத்தினாலா?

 

கடந்த ஐந்து வருடங்களாக நீங்கள் செய்து கொண்டிருந்த கடமைகளைப் பற்றிய ஒரு பட்டியலைத் தயார் செய்யுங்கள். இப்போது நீங்கள் செய்து கொண்டு இருப்பதையும் குறிப்பிடுங்கள். இவையாவும் தகுதியுடைய செயல்கள்தானா!” என்னும் கேள்வியை உங்களுக்குள் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

 

மிகுந்த இனிமையுடனும், மிகுந்த திருப்தியுடனும் நீங்கள் இருப்பதற்கு அவை உங்களுக்கு உதவி புரிந்துள்ளதா? இல்லையென்றால் அவை உங்களுக்குள் ஏமாற்றத்தையும், வெறுமைத்தன்மையும்தான் விட்டுச்சென்றுள்ளதா?

 

இப்போதே இதனை செய்யுங்கள்! இது மிகவும் முக்கியமானது.

 

ஏதோ  ஒன்றை ஒருவருக்காக செது அது உங்களுக்கு அளவற்ற சந்தோஷத்தை கொடுத்த காலங்களை எல்லாம் பட்டியலிடுங்கள். அந்தக் காலங்கள் எவை? அந்த மக்கள் யார்? என்பதை கவளியுங்கள்.

 

அவை பெரும்பாலும், உங்கள் கவனத்தை உங்களிடமிருந்து திருப்பி மற்றவர்கள் மீது செலுத்தி,  பெரும்பாலும், தன்னலமற்ற ஒரு செயலைச் செத காலங்கள்தான் என்பதைக் கண்டு கொள்வீர்கள்.

 

அவர், உங்களது அன்புக்குரியவர்,  உங்கள் குழந்தை, உங்களது நெருங்கிய நண்பர் என்று யாராக வேண்டுமானாலும் இருக்காலம். எந்த விதமாக எதிர்பார்ப்பும் இல்லாமல், அன்பினால் ஒரு செயல் செயப்படும்போது அங்கு ஏமாற்றம் என்ற உணர்வு ஒருபோதும் ஏற்படுவதே இல்லை.

 

அங்கு, ‘கடமை’ என்பது ஒரு சுமையாக ஒருபோதும் மாறுவதில்லை. கடமை என்னும் சிறையிலிருந்து நீங்கள் விடுபடுவதற்கு அன்புதான் சாவி. இது ஒரு நீதிநெறிமுறை அறிக்கை அல்ல!

 

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நீங்கள் எற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நாம் எல்லோருமே ஆழமாக ஒருவரோடு ஒருவர் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள்தான்.

 

பூமியில் இருக்கும் ஒவ்வொரு அமைப்புமே, ஸ்தூல ரீதியாக பூமியின் உஞிணிண்தூண்ணாஞுட் த்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது போலவே நாமும் ஒருவரோடு ஒருவர் நெருக்கமான முறையில் ஒருங்கிணைப்பட்டவர்களாகவே இருக்கிறோம், நம்முடைய விழிப்புணர்வு இல்லாமலேயே!

 

இதுவே நம் இருப்புத்தன்மையின் நிதர்சனமான உண்மைநிலை. இதை அங்கிகரிப்பதே கூட மனமுதிர்ச்சியின் ஒரு அடையாளம்தான்.

 

ஒரு மனிதர் மீது ஆழமான அன்பை உங்கள் உணரும்போது, இயல்பாகவே நீங்கள் இந்த உணர்வை விழிப்புணர்வுக்குள் உணர்கிறீர்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *