யோகம் இன்றைய யுக மனிதருக்குத் தேவைதானா?

யோகம் இன்றைய யுக மனிதருக்குத் தேவைதானா?

[button link=”The URL of the button” variation=”red”]யோகம் இன்றைய யுக மனிதருக்குத் தேவைதானா?[/button]

 

மிக முக்கியமான கேள்வி…

நம் எல்லோர் மனத்திலும் வருவது…உண்மையில் யோகம் இன்றைய மனிதருக்குத் தேவைதானா?

பல பேர் என்னிடம் கேள்வி கேட்பதுண்டு…

எங்களுக்கு ஏற்கனவே இருக்கிற பிரச்சினைகளுக்கு நடுவில் இந்தத் தியானமெல்லாம் வேண்டுமா?

எங்களுடைய நடைமுறை வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான உணவு, உடை, பணத்தைச் சம்பாதிப்பதற்கே  அல்லாட வேண்டியிருக்கிறது. எத்தனையோ வேலைகளுக்கும், வேதனைகளுக்கும் இடையில் இந்தத் தியானம், யோகம் இவையெல்லாம் தேவைதானா?

இது மிகவும் அற்புதமான ஒரு கேள்வி. மேம்போக்காகப் பார்த்தால் மிகப் பெரிய கேள்வியாகத்தான் தெரியும்.

உண்மையில் இந்தத் தியானங்களை நாங்கள் பயிற்சி செய்வதினால் எங்களுடைய வாழ்க்கையில் என்ன நன்மை நிகழப்போகிறது  என்கிற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது.

ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்று, அய்யா, எனக்கு மிகவும் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறது, பல நோய்கள் இருக்கின்றன. நான் மருந்து சாப்பிட வேண்டுமா?” என்று கேட்பது எந்த அளவுக்கு முட்டாள்தனமோ, அதுபோல்தான் இது இருக்கிறது என்றுகூட ஒரு சிலருக்குத் தோன்றும்.

வியாதி இருப்பவருக்குத்தான் மருந்து வேண்டும். மன உளைச்சலும், துக்கமும், பல்வேறு பிரச்சினைகளும் இருப்பவர்களுக்குத்தான் தியானமும், யோகமும் வேண்டும்.

‘நடைமுறை வாழ்க்கையில் எந்தப் பிரச்சினைகளும் இன்றி நிம்மதியாக இருக்கிறேன்’ என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு யோகமோ, தியானமோ வேண்டாம்.

ஏதோ ஒரு விதத்தில் உங்கள் வாழ்க்கையில் யோகமும், தியானமும் முதலிலேயே நடந்து விட்டன என்று பொருள்.

நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளுடன் நிம்மதி இல்லாமல் இருப்பவர்களுக்குதான் யோகமும், தியானமும் தேவை. எப்படி உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு மருந்து அத்தியாவசியமாக வேண்டுமோ, அதேபோல் நிம்மதி இல்லாதவர்களுக்கும், வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களுக்கும் யோகமும், தியானமும் அத்தியாவசியமான தேவைகள்.

யோகம் நம்முடைய வாழ்க்கையைத் தூய்மைப்படுத்தும் ஒரு ரசவாதக் கல்.

ரசவாதக் கல்லை இரும்பின் மேல் வைத்தோமானால் இரும்பு தங்கமாகி விடும் என்று ஒரு நம்பிக்கை. அதேபோல், யோகத்தை நம்முடைய வாழ்க்கையில் வைத்தோமானால் நம் வாழ்க்கை முழுமையாக மாறி விடும்.

 

tamil

One thought on “யோகம் இன்றைய யுக மனிதருக்குத் தேவைதானா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *