முக்கியத்துவம் ?

முக்கியத்துவம் ?

[button link=”The URL of the button” variation=”red”]அதீத முக்கியத்துவம் – ஒரு நோய்[/button]

Seriousness is sickness

 

அதீத முக்கியத்துவம் என்பது என்ன? மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஏதோ ஒன்றிற்கு தேவையற்ற முக்கியத்துவம் தருவதுதான் அதீத முக்கியத்துவம் எனப்படுகிறது. ‘வாழ்க்கை’ என்பது ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டே இருக்கும் நாடகம்தான் என்ற புரிதல் இன்மையிலிருந்து தோன்றுவது. வாழ்க்கையிலிருந்து அதிகம் எதிர்பார்ப்பதினால் ஏற்படும் விளைவுதான் அதீத முக்கியத்துவம்!

 

ஒரு சின்ன கதை:

கடற்கரையில் இரண்டு பையன்கள் மணற்கோட்டை கட்டி விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் இருவருக்குள் திடீரென சண்டை ஏற்பட்டது. அதில் ஒரு பையன் அந்த மணற்கோட்டையைக் காலால் எட்டி உதைத்து உடைத்துவிட்டான். உடனே மற்றொரு பையன், மன்னனிடம் சென்று முறையிட்டான்.

 

ஒரு மணற்கோட்டைக்காக இவ்வளவு பெரிய சண்டையா என்று அரசன் அவர்களைப் பார்த்துச் சிரிக்கத்தொடங்கினார்!

 

ஆனால் அரசனின் ஆலோசகராக இருந்த ஜென் துறவி, அரசனைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினார்!

 

கற்கோட்டைகளுக்காகச் சண்டை போட்டு நீ இரவில் தூங்காமல் இருக்கமுடியும்போது, இந்த பையன்கள் மணற்கோட்டைகளுக்காகச் சண்டையிடுவதைப் பார்த்து ஏன் சிரிக்கிறா,” என்று  கேட்டார்.

 

நீங்கள் நிதர்சனமாகப் பார்த்தீர்கள் என்றால் நம்முடைய அதீத முக்கியத்துவம் அனைத்துமே மணற்கோட்டைகளுக்காகத்தான்.

 

இளம்பிள்ளை பருவத்தில் மணற்கோட்டைகள் மதிப்புவாந்ததாகத் தெரிகின்றன; நம்முடைய வயதிற்கு கற்கோட்டைகள் மதிப்புவாந்ததாகத் தெரிகின்றன. அவ்வளவுதான்.

 

அது மணற்கோட்டையாக இருந்தாலும் சரி, கற்கோட்டையாக இருந்தாலும் சரி, அதன் பின் இருக்கும் அதீத முக்கியத்துவம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அவ்வளவுதான்! முக்கியத்துவம் தரப்படும் பொருள்தான் மாறி இருக்கிறது.

 

அதனால் குழந்தைகள் மணற்கோட்டைகளுக்காகச் சண்டையிடுவதைப் பார்த்துச் சிரிக்காதீர்கள். அதீத முக்கியத்துவம் விடுதலை மற்றும் திறந்த தன்மைக்கு வழி வகுக்காமல், உங்கள் மனத்தை மூடச்செது விடுகிறது. அது உங்களை மந்தமானவராகவும், உயிரற்றவராகவும் செய்து விடுகிறது. உங்களது எண்ணங்களைத் தடுத்து, உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த செயல்முறைகளிலேயே உங்களை ஒட்டிக்கொள்ளச் செதுவிடுகிறது.

 

மிதமிஞ்சியகவனம், படைப்பாற்றலைக்  கொன்றுவிடுகிறது. யதார்த்த தன்மையை அழித்துவிடுகிறது. ஒரு செயலைச் செய்யும்போது, தளர்வாகவும் லேசான மன அமைப்புடனும் செய்யும்போது உங்களது சிந்தனையும் முடிவு எடுக்கும் திறனும் இயல்பாகவே மேம்படுகிறது என்பதை விஞ்ஞானம் நிரூபித்து இருக்கிறது.

 

அதே செயலை அதீத முக்கியத்துவத்துடன் செய்யும்போது, அது உங்களது மனத்தைச் சோர்வடையச் செகிறது. நம்முடைய எல்லா அதீதமுக்கியத்துவமுமே நோய்கள்தான். நான் ‘எல்லாம்’ என்று சொல்லும்போது, எல்லா விஷயங்களையும் சேர்த்துத்தான் சோல்கிறேன். நம்முடைய நோய்கள் எல்லாமே, நமது அதீத முக்கியத்துவத்திலிருந்தே ஆரம்பமாகின்றன. அதீத முக்கியத்துவம் நோயைத் தருகிறது; நோய் அதீத முக்கியத்துவத்தைத் தருகிறது.

 

ஒரு நாள் இரவு நேரத்தில், ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து அழத்தொடங்கினார். அவர் சொன்னார், சுவாமிஜி! நான் உங்களது காலில் விழுந்து கேட்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள். நான் மிகவும் மனச்சோர்வில் இருக்கிறேன். நான் என்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளப்போகிறேன்!” என்றார்.

 

நான் அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்தேன். அவர் தொடர்ந்து இதையே சோல்லிக் கொண்டிருக்க, நான் கடைசியில், நீங்கள் நாளை காலை ஆஸ்ரமம் வந்து, என்னுடன் சில நாட்கள் தங்குங்கள். அதற்குரிய தீர்வைக் காணலாம்,” என்று சோன்னேன்.

 

அதற்கு அவர், நாளைக்கா சுவாமிஜி? நான் அலுவலகம் செல்லவேண்டுமே! இந்த வாரக் கடைசியில் வரட்டுமா?” என்று கேட்டார்.

 

நம்மில் பலபேரும், இதைப்போன்றுதான் நம்முடைய பிரச்சினைகளுக்குத் தேவையில்லாமல், பரபரப்பு கொள்கிறோம். ஒரே ஒரு அறை அல்லது அடி போதும், நம்முடைய அதீத முக்கியத்துவம் உதிர்ந்துவிடும். நாம், நம்முடைய விழிப்புணர்வை நிதர்சன நிலைக்கு உயர்த்தினோமேயானால், நம்முடைய பிரச்சினைகள் எல்லாமே உண்மையில் தேவையற்றவை என்பது நமக்குப் புரியும்.

 

ஒரு அதீத முக்கியத்துவத்துடன் அல்லது அதன் முடிவுகளைப் பற்றிய மித மிஞ்சிய கவலையில் ஒரு காரியத்தைச் செய்தீர்கள் என்றால், உங்களால் அந்தச் செயலைச் சிறப்பாகச் செய முடியாது.

 

ஆனாலும் திட்டங்கள் போடவேண்டுமானா,  நீங்கள் அதனைப் பற்றி முன்கூட்டியே சிந்திக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சிந்தியுங்கள் – உங்கள் சிந்தனையில் சிரத்தை இருக்க வேண்டுமே தவிர அதீத முக்கியத்துவம் அல்ல. அதீத முக்கியத்துவமும் சிரத்தையும் ஒன்று அல்ல.

 

உற்சாகத்தோடும், துடிப்புடனும். ஒரு செயலில் முனைப்பாக ஈடுபடுவது சிரத்தை!

கொடுக்கப்பட்ட செயலின் இறுதி பலன்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படாமல், அந்தச் செயலைச் சிறந்த முறையில் செய்வது சிரத்தை!

 

அதீத முக்கியத்துவத்தோடு செயல்படும்போது, நீங்கள் உற்சாகத்தோடு இருக்கமாட்டீர்கள், சிரிக்க மாட்டீர்கள். கடுமைத்தனத்துடன் இருக்கும்போது எப்படி உங்களால் சிரிக்கமுடியும்? ஒன்று, நீங்கள் கடுமைத்தனத்துடன் இருப்பீர்கள் அல்லது சிரித்துக் கொண்டு இருப்பீர்கள்.

 

இரண்டையும் நீங்கள் ஒரேசமயத்தில் செய்யமாட்டீர்கள். ஏனென்றால் அதீத முக்கியத்துவத்தின் தன்மை அது. சிரத்தையுடன் இருக்கும்போது நீங்கள் சிரித்துக்கொண்டும் விளையாட்டுதனமாகவும் இருப்பீர்கள். செயலைச் செது முடித்த பின்பும், நீங்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்டும் விளையாட்டுத்தனத்துடனும் இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் சிரத்தையுடன் இருந்ததற்காக, நீங்கள் வேலையைச் சிறப்பாக முடித்ததற்காக! சிரத்தையுடன் இருக்கும்போது கவலைகள் இருக்காது; உற்சாகம் மட்டும்தான் இருக்கும்.

 

அதீத முக்கியத்துவத்தோடு இருக்கும்போது நீங்கள் அஹங்காரம் கொண்டவராகி விடுகிறீர்கள். ஏனென்றால் மொத்த விஷயமுமே அந்தப் பிரபஞ்ச சக்தியின் நாடகம்தான் என்பதை நீங்கள் பார்க்கத் தவறிவிடுகிறீர்கள். ‘நான்’ என்னும் முனைப்பு அதிகமாக இருப்பதால், நீங்கள் உங்களை ஒரு தனிஅடையாளமாக உணர்வதனால், நீங்கள் அதீத முக்கியத்துவத்துடன் இருக்கிறீர்கள். இந்த முழுவிஷயமுமே ஒரு நாடகம்தான் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களானால், உங்களால் அதீத முக்கியத்துவதுடன் இருக்கமுடியாது.

 

இந்தப் புரிதல் ஆழமான நிலையில் நிகழ்ந்தவுடனேயே, பிரபஞ்ச இருப்பின் நாடகத்தோடு இயைந்து செல்லும் ஒரு கொண்டாட்டத்திற்காகவே, மகிழ்ச்சிக்காகவே நீங்கள் செயல்களைச் செயத் தொடங்குவீர்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *