மீடியா வாய்ஸ் ( Media voice )

மீடியா வாய்ஸ் ( Media voice )

மீடியா வாய்ஸ்க்கு பரமஹம்ஸ நித்யானந்தர் அளித்த பதில்கள்.

…24.03.2011பிரசுரிக்கப்பட்டது…

 

 

 

    1. ஆன்மீகவாதிகள் மட்டும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறார்களே ஏன்?

ஆன்மீக வாதிகள் சர்ச்சையில் சிக்குவதில்லை, சிக்க வைக்கப்படுகிறார்கள்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, பண மோசடி வழக்கு ஆகிய பல்வேறு வழக்குகளில் வசமாகச் சிக்கிய கலாநிதி மாறனும் தயாநிதி மாறனும், இந்த விஷயங்களின்மீது மக்கள் கவனம் திரும்பாமல் இருக்க, எங்களைப் போன்ற ஆன்மீகவாதிகளை அவதூறு செய்து, அந்த சர்ச்சைகளை உபயோகித்து, தங்களை பாதுகாத்து கொள்கிறார்கள்.

 

இழிவாகத் தங்களின் பெயர் மக்கள் மத்தியில் பேசத் துவங்கப்பட்டவுடன், மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும், தன் பெயரையும் புகழையும் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், ஆன்மீக துறையில் மக்கள் மத்தில் பிரபலமாக இருந்த என்னைப் பற்றி ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோவைத் தன் சன் குழுவினரோடு சேர்ந்து தயாரித்து வெளியிட்டு, என்னை சர்ச்சையில் சிக்க வைத்தார்கள்.

 

சர்ச்சையில் சிக்க வைத்ததோடு நிறுத்தாமல் எங்களை மிரட்டி பணம் பறித்தார்கள்.

 

தங்கள் மீது குவியும் வழக்குகளிலிருந்து மக்களின் கவனத்தை முழுவதுமாகத் திசை திருப்ப, தன் போலித்தனம் வெளியில் தெரியாமல் இருக்க, ஆன்மீகவாதிகளை திட்டமிட்டு இவர்கள் சர்ச்சைகளில் சிக்க வைக்கிறார்கள்.

 

சமீபத்தில், அமலாக்கப் பிரிவினர் (Enforcement Directorate)

, சட்டத்திற்குப் புறம்பான முறையில் சொத்துக்களைச் சேர்த்துள்ளார்,” என்று சொல்லி,  கலாநிதி மாறன் மீது இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தார்கள். சுமார் ரூ.550 கோடி வரை, அவர் சட்டத்திற்கு புறம்பான வகையில் பணம் பெற்றுள்ளார் என்று அவர்மீது ஒரு மிக வலிமையான  குற்றப்பதிவைப் பதிவு செய்தனர்.

 

உடனே அவர், தன் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் குற்றங்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, மீண்டும் தங்கள் மீடியா பலத்தை உபயோகித்து, சர்ச்சையை துவக்கினார்கள். நித்யானந்த தியானபீடம் நிகழ்த்திய சிவராத்திரி நிகழ்ச்சி பற்றிய விபரங்களைத் தெரிவிக்கும் சுவரொட்டிகளை, சில ரௌடிகளை அனுப்பிக் கிழிக்கச் செய்து, அந்த இடத்தில் சில மணித்துளிகள் வீடியோவிற்கு ஆர்ப்பாட்டம் செய்வது போன்று அவர்களை நடித்து காண்பிக்க செய்து, அந்த காட்சியை தங்கள் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப தலைப்புச் செய்தியாகக் காண்பித்தார்கள்.

 

இவர்கள் தங்களின் போலித்தனம் மக்களுக்குத் தெரியாமலிருக்க, மக்களின் நலனுக்காக உழைக்கும் எங்களைப் போன்ற ஆன்மீகவாதிகளைப் பற்றி போலியான சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள். அதோடு மட்டும் நிறுத்தாமல், நாங்கள் மக்களின் நலனுக்காக அளிக்கும்  தியானத்தைப் பற்றியும், தியான சிகிச்சையைப் பற்றியும் அவதூறு செய்திகளை வெளியிடுகின்றார்கள்.

 

அதனால் என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து தெளிவாகச் சொல்கிறேன்…ஆன்மீகவாதிகள் சர்ச்சையில் சிக்குவதில்லை, சிக்க வைக்கப்படுகிறார்கள்.

 

 

 

2. கருப்பு பண ஒழிப்பில் பாபா ராம்தேவின் கொள்கைக்கு உடன்படுகிறீர்களா?

 

முழுமையக உடன்படுகிறேன்.

 

நம் நாட்டில் அதிகரித்துவரும் கிரிமினல் நடவடிக்கைகளுக்கும், தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கும், மதத்தீவிரவாதத்திற்கும் காரணம், பல லட்ச கோடிகள் கருப்பு பணமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதுதான்.

 

நம் நாட்டு மக்கள் அயராது உழைத்து உருவாக்கிய செல்வத்தை, தங்கள் அதிகார பலத்தாலும், செல்வாக்காலும், மீடியா பலத்தாலும் கொள்ளையடித்து, கருப்பு பணமாக மாற்றி வெளிநாடுகளில் முதலீடு செய்து வாழ்கிறார்கள். வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கணக்கிலடங்காத, கணக்கிடமுடியாத பணத்தை மீண்டும் இந்தியாவிற்குள் எடுத்துவந்தால் போதும், நம் தேச மக்கள் வாழ்வாதார தேவைகளுக்காகப் போராட வேண்டிய அவசியம் இருக்காது. அவர்களின் போராடும் வாழ்க்கை முறை மாறிவிடும். அதனால் உருவாகும் மன உளைச்சல் குறையும்.

 

சட்டத்திற்குப் புறம்பான முறையில் பணம் சேர்க்கப்பட்டிருப்பது தொடர்பான வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

மக்களின் நலனில் துளியும் அக்கறை இல்லாத இவர்களால், உண்மையில் மக்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களின் செயல்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் கருப்பு பணத்திற்கு கண்டிப்பாக முடிவு கட்ட வேண்டும். அப்பொழுதூன் ஆன்மீகவாதிகள் மீது நடத்தப்படும் மதத்தாக்குதல்களும் முடிவுக்கு வரும்.

 

கருப்பு பண கொள்ளையர்களின் கொட்டமும் அடங்கும்.

 

 

3. தானே புயல் பாதிப்பிற்கு தாங்கள் என்ன செய்தீர்கள்?

 

புதுவையிலிருக்கும் நித்யானந்த தியான பீடம் – ஏம்பலம் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்து நிவாரணப் பணிகளை செய்தோம். என்னுடன், என் சன்யாசிகளும், பிரம்மச்சாரிகளும், பிரம்மச்சாரிணிகளும், ஆஸ்ரமவாசிகளும், எங்களின் தன்னார்வத் தொண்டர்களும் சேர்ந்து (800 பேர்) இரவு பகல் என்று பாராமல் ஜனவரி 2 முதல் 7, 2012 வரை  ஏம்பலம் ஆஸ்ரமத்திலேயே தொடர்ந்து ஆறு நாட்கள் தங்கி புயல் நிவாரணப்பணிகளைச் செய்தார்கள்.

 

அதன் பலனாக …

 

தினந்தோறும் 1 லட்சம் வீதம், ஆறு நாட்களில் ஆறு லட்சம் பேருக்கு உணவு வழங்கினோம்.

 

தினந்தோறும் 25,000 வீதம், ஆறு நாட்களில் 1,50,000 பேருக்கு மருத்துவ உதவிகளை வழங்கினோம்.

 

தினந்தோறும் 25,000 வீதம், ஆறு நாட்களில்  1,50,000 பேருக்கு உடைகள் வழங்கினோம்.

தினந்தோறும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சாலைகளில் புயலால் ஏற்பட்டிருந்த இடர்பாடுகளை JCP யினால் அகற்றித் தந்தோம்.

 

மின்சாரம் தடைபட்ட கிராமங்களில் நிலவிய குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஜெனரேட்டர்களை அனுப்பிவைத்தோம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஆறு கிராமங்கள் வீதம், ஆறு நாட்களில் 36 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தோம்.

 

இந்தப் பணிகள் அனைத்தும் மக்களுக்குச் சென்றடைகின்றனவா என்பதை நானே நேரடியாக, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு உறுதிசெய்தேன். மொத்தமாக, தானே புயலால் பாதிப்படைந்த மக்களுக்காக, புயல் நிவாரணப் பணிகளுக்காக நாங்கள் ரூ.96 லட்சம் செலவுசெய்தோம்.

 

 

                4. நடிகை ரஞ்சிதாவுடனான வீடியோ காட்சிகளின் பரபரப்பின் பின்னனிதான் என்ன?

 

தங்களின் பார்வை யார்மீது பட்டாலும், அவர்களிடமிருந்து சொத்துக்களை மிரட்டி வாங்குவதில் வல்லவர்கள் கலாநிதி மாறனும் நக்கீரன் கோபாலும்.

 

முதலில் அவர்கள் நித்யானந்த தியான பீடத்திற்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்க  முயன்றார்கள். அதற்கு நாங்கள் இணங்காததால் எங்களை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சித்தார்கள். அதற்கும் நாங்கள் இடம் தராததால், எங்கள் இயக்கம் மீதும், என்மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு,  சில சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை உருவாக்கி ஒளிபரப்பினார்கள்.

 

இந்தச் செயல்களை கலாநிதி மாறனின் கைக்கூலியாக இருந்து சக்சேனாவும், ஐயப்பனும், நக்கீரன் கோபாலும் செய்து முடித்தனர்.

 

அவர்கள் சித்தரித்து உருவாக்கிய சி.டி. -யின்  தன்மையைப்பற்றி விலாவரியாக அமெரிக்காவின் தடயவியல் நிபுனர்  (Forensic Expert) Mr. Edward John Primeau தம் அறிக்கையின் முடிவாக வெளியிட்டுள்ளார்.

 

இவர் அளிக்கும் முடிவுகள், அமெரிக்க நீதிமன்றங்களாலும், நீதித்துறையில் இருக்கும் வழக்கறிஞர்களாலும், அரசாங்க ஏஜென்ஸிகளாலும் முக்கியமான அத்தாட்சியாகவும், சாட்சியாகவும் ஏற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவர் Pelco Global Training Institute’s னால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைசிறந்த டிஜிட்டல் வீடியோ நிபுணர் (Digital video Expert ) .மேலும் இவர், LEVA   எனும் சட்ட அமலாக்கத் துறையிலும் உறுப்பினராக உள்ளார். ஆடியோ, வீடியோவின்  நம்பகத் தன்மையை காண்பித்து வெளியிடும் அமெரிக்காவிலிருக்கும் கூஅகுஅ விலும் உறுப்பினராக உள்ளார்.

 

Mr. Edward John Primeau சித்தரிக்கப்பட்ட வீடியோவைப்பற்றி அளித்த அறிக்கை….

 

இந்த வீடியோவிலிருக்கும் சட்டங்களின் விகிதம் வழக்கத்திற்கு மாறாக 12.04 2.04 FPS (Frames Per Second)  ) ஆக உள்ளது. வீடியோவில் வரும் உருவப்படங்கள், பிம்பங்கள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போன்று காட்சியளிக்கிறது. நிஜ வீடியோ கிடைத்தால் என்னால் தொழில் கோணத்திற்கு அப்பாற்பட்டு எவ்வாறு இந்த உருவங்களை இணைத்து வீடியோவாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை தெளிவாகச் சொல்லிவிட முடியும். இந்த வீடியோ, பல அடுக்குகள் உடையதாக உள்ளது. திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை என்னால் நிரூபிக்க முடியும். இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டதுதான் என்பதை ஒரு தடயவியல் நிபுணர் என்ற முறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்,” என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கு வந்து, நீதிமன்றத்திலும் தம் அறிக்கையைப் பதிவு செய்ய உள்ளார்.

 

இவ்வளவு தூரம் நாங்கள் பொறுமையாக இருந்து, எல்லா உண்மைகளையும் ஆதாரத்தோடு வெளியிட்டு வருகிறோம், வெற்றிபெற்று வருகிறோம்.

 

எங்களை அழிக்க நினைத்தவர்களின் நிலை தற்பொழுது என்னவாகிறது என்பதை நாங்கள் சொல்லவே தேவையில்லை.

 

 

 

   5. நடிகை ரஞ்சிதாவுடனான வீடியோ காட்சிகள் பற்றிய வழக்கின் தற்போதைய நிலை என்ன?

 

எனது சீடரான ஸ்ரீ நித்ய ஆத்ம ப்ரபானந்தா அவர்களும், எனது பக்தையான மா ரஞ்சிதா அவர்களும் தனித்தனியாக சன்டிவி மீதும், கூட்டாக செயல்பட்ட சதிகாரர்கள் மீதும் தொடுத்த வழக்குகள் தமிழ்நாட்டின் சி.பி.சி.ஐ.டி-யினரால் புலன் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

 

இந்த வழக்கின் விசாரணைக்காக, சன் டிவியின் சக்சேனாவும், ஐயப்பனும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, தீவிரமாக விசாரிக்கப் பட்டார்கள். போலீஸ் விசாரணையின் போது அவர்கள் தாங்கள் மிரட்டி பணம் பறித்த குற்றத்தையும், வீடியோவை மார்பிங் செய்த குற்றத்தையும் போலீஸாரிடம் நேரடியாக ஒப்புக் கொண்டு, தங்கள் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளார்கள்.

 

லெனின் கருப்பனின் சதி செயல்களுக்கு உடந்தையாக இருந்த பிரசன்னாவின் முன்ஜாமீன் மனு உயர் நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டதும், பிரசன்னாவைப் போலீஸார் உடனடியாகக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையின்போது பிரசன்னா தான் செய்த குற்றங்களை, குறிப்பாக 35 கோடி பணம் கேட்டு மிரட்டிய குற்றத்தை ஒப்புகொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

இந்த வழக்குகளின் முக்கிய குற்றவாளிகளான லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ் இருவரு தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்ததால், அவர்கள் பல மாதங்களாகத் தலைமறைவாக உள்ளனர். ‘CB-CID’ போலீஸார், இந்த இரண்டு முக்கிய குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

 

இது நாங்கள் தொடுத்திருக்கும் வழக்குகளின் தப்போதைய நிலை.

 

 

 

 

6. நடிகை ரஞ்சிதாவுடனான வீடியோ காட்சி பரபரப்பிற்குப் பின் தங்களுக்கு செல்வாக்கு குறைந்துள்ளதா? அல்லது பக்தர்கள் குறைந்துள்ளார்களா?

 

இல்லை.

 

எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், தங்களுடைய  பண பலம், அதிகார பலம், மீடியா பலம் என எல்லா பலத்தையும் உபயோகித்து, எங்களை எல்லாக் கோணத்திலிருந்தும் தாக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் எங்களைத் தாக்க முடியவில்லை. எங்களின் ஆன்மீக பலத்தால் அவர்கள் நிகழ்த்திய அத்துணை தாக்குதல்களையும் தாங்கி நின்றோம்.

 

இத்தனைக்கு பிறகும், உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKIN’S) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிக்கை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மீக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராக என்னைக் குறிப்பிட்டுள்ளது.

தலாய்லாமா, நெல்சன் மண்டேலா, ஓப்ரா வின்பிரோ, பால் ச்சோல்ஹோ போன்ற வாழும் உலகத் தலைவர்களின் வரிசை பட்டியலில், அவர்களின் பெயர்களுக்கு அருகில் என்னுடைய  பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த வரிசைப்பட்டியலை வெளியிட்டிருக்கும் பத்திரிக்கை, 100 ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனிலிருந்து வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

           7. அன்னா ஹசாரே பற்றிய தங்களது நிலைப்பாடு என்ன?

அன்னா ஹசாரே மக்களின் நலனுக்காகப் போராடும் தியாகி. அவர் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் விழிப்புணர்வு அபாரமானது. தேச நலனுக்காக நேர்மையாக உழைக்கும் அன்னாவின் எல்லா தேச நலச் செயல்களையும் முழுமையாக ஆதரிக்கிறேன்.

 

 

   8. தமிழகத்தில் கூடன்குளம் அணுமின் நிலையும் ஆரம்பிப்பது பற்றி தங்களது கருத்து என்ன?

 

தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் கிடைப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் கூடன்குளம் அணுமின் நிலையம். ‘இது பாதுகாப்பானதுதான்’ என்று விஞ்ஞானிகள் உறுதியளித்திருக்கும் நிலையில்,  மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மக்களின் நலன் கருதி திறக்கப்பட வேண்டும்.

 

தங்களின் சுய லாபத்திற்காகத் தவறான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பும் சதிகாரர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

                9. கவலை என்பதே இல்லாமல் வாழ விழி உண்டா?

 

வழி உண்டு,

அதற்கான வழி தியானம்.

 

 

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *