மிகச்சிறந்த முதலீடு

மிகச்சிறந்த முதலீடு

பொறுப்பான ஒரு இளைஞர் 100 பொறுப்பில்லாத இளைஞரைவிடவும் மேலானவர்.

உலகின் பெரும் பணக்காரராகவே இருந்தாலும் சரி அல்லது ஒரு சாமான்ய மனிதராக இருந்தாலும் சரி, அவருக்கு ஒரு நாளின் 24 நேரத்தில் தனக்கென அரைமணி நேரத்தை ஒதுக்கிக் கொள்ளக்கூட நேரம் கிடைப்பதில்லை.

ஆனால் ஆனந்தயோகத்தைப் பயிலும் ஒரு இளைஞருக்கு, ஒரு நாளில் 5 மணி நேரம் தமக்கென ஒதுக்கி, யோக உடலையும் வேத மனத்தையும் உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது.

[button link=”The URL of the button” variation=”red”]யோக உடலும் வேத மனமும்[/button]

இன்றைய இளைஞர்களுக்கு யோக உடல் , வேத மனம் மற்றும் ஞானம்சார்ந்த வாழ்க்கை பற்றித் தெரிவிக்கப்படாததினாலும், அது மட்டுமல்ல, இன்றைய இளைஞர்கள் அதைத் தெரிந்து கொள்ள விரும்பாததினாலும் அதிகமாகப் பிரச்சினைகளை சந்திக்கின்றார்கள், சந்திக்கப் போகின்றார்கள்.

தம் வாழ்வின் லட்சியத்தைப் பற்றிய தெளிவு இல்லாதிருக்கும் ஒருவர்தான் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் உள்ளாகிறார். தெளிவு அற்ற நிலைதான் எல்லாக் குழப்பங்களுக்குமான மூலவேர்.

தம் வாழ்வின் உயர்ந்த நோக்கத்தைப் புரிந்துகொண்ட, ஆன்மபலம் பெற்ற ஒருவரைச் சுற்றி பிரச்சினைகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டாலும், அவரைச் சிறையில் அடைக்க முயற்சி செய்தாலும், எவ்வளவுதான் அவதூறு செய்தாலும் அதையெல்லாம் தூசு என புறந்தள்ளி, தம்முடைய ஆன்ம பலத்தால் வெற்றியடைவதை எவராலும் தடுக்க முடியாது. அவரை எதனாலும் பாதிப்படையச் செய்ய முடிவதில்லை. வீழ்த்த முடிவதில்லை.

இளைஞர்களே விழித்துக்கொள்ளுங்கள்!

இளைஞர்களே சிந்தியுங்கள்.

நீங்கள் ஆன்மபலம் பெற்று எவராலும் அசைக்க முடியாத நிஜமான வெற்றியை உங்கள் வாழ்வில் கொண்டாட விரும்புகிறீர்களா?

உங்களுக்காக வழங்கப்படும் ஓர் அரிய வாய்ப்பு இந்த ஆனந்த யோகம்.

எங்குச் செல்கிறோம், எதற்காகச் செல்கிறோம் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை எதுவுமே தெரியாமல், இரயிலில் பயணம் செய்வது போன்று, ஒரு தெளிவு இல்லாத அபாயகரமான வாழ்க்கைப் பயணத்தைத்தான் இப்போது நாம் மேற்கொண்டு இருக்கிறோம். இரயில், எந்தத் திசையில் எவ்வளவு நேரம் போக விரும்புகிறதோ, எங்கு நிற்க விரும்புகிறதோ அங்குதான் நம் பிரயாணம் முடியும். இரயில் போகும் போக்கில் பயணம் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது நீங்கள் விரும்புவது போன்று யாத்திரை செல்ல விரும்புகிறீர்களா?

எதை அடைவதற்காகப் பிறப்பெடுத்திருக்கிறோம் என்று எந்தத் தெளிவுமே இல்லாமல் வாழ்வது மிகவும் அபாயகரமான இரயில் பயணத்தைவிட மோசமானதுதான். பயண இலக்கைப் பற்றிய தெளிவில்லாமல் செய்யப்படும் இரயில் பயணமும், வாழ்வின் இலக்கைப் பற்றிய தெளிவில்லாமல் செய்யப்படும் வாழ்வுப் பயணமும் நம் கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. அவை நம்மைக் கட்டுப்படுத்தும் பயணம்.

இளைஞர்களே! உங்கள் தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்த உங்கள் வாழ்வின் நிஜமான நோக்கத்தை கண்டுபிடியுங்கள். உங்களுடைய வாழ்வின் அஸ்திவாரத்தைப் பலமாக்குங்கள். உங்கள் வாழ்வை பலமாக்குவதற்காக, உங்கள் வாழ்வின் சில வருடத்தையாவது ஒதுக்குங்கள். உங்கள் வாழ்வின் தரத்தை உயர்த்தும் ஆன்மீகக் கல்வி கற்க காலம் தாழ்த்தாதீர்கள்.

ஆரோக்கியமான உணவு உட்கொள்ளாவிடில், ஆரோக்கியமான உடல் எப்படி உருவாகமல் போகுமோ, அதேபோல் ஆனந்தமான வாழ்வைத் தரும் ஆன்மீகக் கல்வியை கற்காமல் போனால், ஆனந்த வாழ்வு உருவாகாது.

தீரர்களே!

பொறுப்பெடுங்கள். உங்களுடைய முன்னேற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பொறுப்பெடுங்கள்.

அதற்காக உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், நீங்கள் வாழும் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் நன்மை தரும் ஆன்மீக கல்வியைப் பயிலுங்கள். உங்களின் உணர்வை எவராலும் அழிக்க முடியாத மேலான நிலைக்கு உயர்த்துங்கள். உலகையே அசைக்க வல்ல ஆன்மீகச் சிங்கங்களாக உங்களை உருவாக்கும் கல்வி இந்த ‘ஆனந்த யோகம்’.

 

[box_dark]

வாழ்க்கையில் நான்கு விஷயங்கள் மிக முக்கியமானவை.

முதலாவது: நீங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கின்ற கருத்து.

இரண்டாவது, நீங்கள் உலகத்தைப் பற்றி வைத்திருக்கின்ற தெளிவு.

மூன்றாவது, நீங்கள் மனித சமுதாயத்தைப்பற்றி வைத்திருக்கின்ற கருத்துக்கள்.

நான்காவது, நீங்கள் இந்தப் பிரபஞ்ச சக்தியான கடவுளைப் பற்றி வைத்திருக்கின்ற கருத்து.

இந்த நான்கும் தெளிவாக இருக்குமானால் வாழ்க்கையை வாழுகின்ற ஸ்திரம் நமக்கு இருக்கும்.

உங்களுக்குள் தெளிவு இல்லாததினால்தான் வாழ்க்கையின் அடிப்படை பிரச்சனையில் சிக்கி தவிக்கிறீர்கள்.

[/box_dark]

 

நீங்கள் பணம் சம்பாதிப்பதற்காகக் கல்வியை எத்தனை ஆண்டுகள் செலவு செய்து கற்றுக் கொள்கிறீர்களோ, அதில் ஒரு சதவீத நேரத்தையாவது செலவு செய்து வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள்ளும் கல்வியைப் பெறவேண்டும்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் வயதில் அதிகபட்சமாக 50 வருஷம் சாம்பாதிப்பீர்கள்.

அந்த 50 வருஷம் சம்பாதிப்பதற்கு 25 வருஷம் படிக்கறீர்கள்.

ஆனால் உங்கள் மொத்த 100 வருஷ வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான படிப்பை ஒரு வருஷம்கூட நீங்கள் படிப்பது இல்லை.

உங்கள் மொத்த வாழ்க்கையையும் வாழ்வதற்கு, ஒரே ஒரு வருடமாவது உங்கள் வாழ்க்கையைப் பற்றிய கல்வியை தெரிந்துகொள்ள வேண்டும், படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆனந்த யோகம் என்கின்ற ஓர் ஆண்டு வாழ்க்கைக் கல்வியை, இலவச உடை உணவு தங்குமிடம் பாடப்புத்தகங்கள் அளித்து ஓராண்டு இலவச கல்வி நிகழ்ச்சியாக திருவண்ணாமலை தியானபீடத்தில் நாங்கள் நடத்துகின்றோம். ஆழமான துக்கங்களிலிருந்து நீங்கள் வெளிவருவதற்கான ஒரே வழி. . .

உங்களுடைய மொத்த உணர்வையும் சரி செய்து வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டும்தான்.

ஒரு ஆண்டாவது உங்களுடைய வாழ்க்கையைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்காகச் செலவிடுவது என்று தீர்மானியுங்கள்.

நிச்சயமாக உங்களுடைய மீதி மொத்த வாழ்க்கையும் ஆனந்தமயமாக இருக்கும் என்பதற்கு நான் உறுதி அளிக்கின்றேன்.

ஒரு ஆண்டாவது உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு கற்றுக்கொள்ளுங்கள். மற்ற எல்லாப் பரிமாணங்களிலும் உங்கள் வாழ்க்கை முழுமையாக மலர்வதற்கான  இனிமையான வாய்ப்பு இந்த ஆனந்த யோகம்.

எஞ்சியுள்ள 75 ஆண்டு வாழ்க்கையை ஆனந்தமாக வாழ இந்த ஓராண்டையாவது செலவு செய்யுங்கள்.

இது செலவு அல்ல.

முதலீடு. . .

[one_third]மிகச்சிறந்த முதலீடு[/one_third]

 

[box_dark]

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளும் மிகச்சிறந்து முதலீடு இந்த ஆனந்த யோகம்.

இளைஞர்களே!உங்களைப் பற்றி உங்களுக்குள்ளே வைத்திருக்கும் கருத்துகளை ஆராயுங்கள்.

உடலை யோகத்தாலும் மனத்தை தியானத்தாலும் வளர்த்துக்கொள்ளுங்கள். இதனால் உண்மையிலேயே உங்கள் வாழ்க்கை மேம்பாடு அடையும்.

ஆனந்தமாக வாழ்க்கையை வாழும் வாழ்க்கைக் கல்வியைப் பயில்வது மிகப்பெரிய திருப்புமுனையைத் தரும்.

நீங்கள் இளைஞராக இருந்தால் ஆனந்த யோகக் கல்வி பயில்வதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை எடுத்து வரலாம்.

[/box_dark]

 

ஆனந்த யோகம் உங்களுக்கு அந்த மிகப்பெரிய வாய்பை வழங்குகிறது.

உங்கள் வாழ்வை மேம்பாடு அடையச்செய்யுங்கள்.

tamil

One thought on “மிகச்சிறந்த முதலீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *