யாத்திரை – கைலாஷ்

யாத்திரை – கைலாஷ்

[button link=”The URL of the button” variation=”red”]கைலாயம் – பிரபஞ்ச சக்திகளின் சங்கமம்[/button]


கண்கள் இருக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய புண்ணிய கே்ஷதரம் … கைலாயம்.

தன்னுடைய ஆற்றலை, எல்லையில்லா அதிசயங்களை… தன்னுடைய மகிமையை உணர்த்த… பிரபஞ்சம் விடுக்கும் அறிக்கைதான்… இந்த கைலாயம்.
கைலாயம் வாழும் சக்திகளின் சங்கமம்.

எம்பிரான் ஈசன்… பிரபஞ்ச பேரூணர்வின் ரூப வெளிப்பாடாகவும், அண்னை பார்வதி தேவி… பிரபஞ்ச பேரூணர்வின் சக்தி வெளிப்பாடாகவும் இணைந்து… தங்களை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள்.

ரிஷிமார்களும், இம்புரூடர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், யோகிகளும், வேதாந்திகளும், சன்யாசிகளும் வாழும் இடம் கைலாயம். அதனால்தான் கையாலம் ஓர் வாழும் ஆன்மிக அணுமின் நிலையம் என்பார்கள்.

ஒரு கரித்துகள் நிறைந்த அறைக்குள் சென்று வந்தால்… நாம் விரும்பாவிட்டாலும் கரித்துகள்கள் எப்படி நம் உடல்மீது நிச்சயம் படிகின்றதோ… அதுபோல்…கைலாயத்திற்கு வெறுமனே சென்று வருவதனாலேயே… நாம் விரும்பாவிட்டாலும் ஜீவன் முக்திக்கான, ஞானத்திற்கான ரசவாதம் நம் உணர்விற்குள், ஜீவனுக்குள் நிச்சயம் பதிகின்றது.

மானசரோவரம்


அன்னை பார்வதிதேவியின் , பிரபஞ்ச பேராற்றலின் பெண்மை வெளிப்பாடு மானசரோவரம். மானஸரோவரம்… கங்கை, யமுனை ,சரஸ்வதி, பிரம்மபுத்திரா ஆகிய நதிகளின் தாய். 90 கிலோமீட்டர் பெரியது. இப்புனித தீர்த்தத்தில் முழ்கி எழுவது புண்ணியம் சேர்க்கும்.

மாந்தாதா மலை


முருக பெருமான் தனக்கு மாம்பழம் கிடைக்கவில்லை என்று கோபித்துக் கொண்டு கைலாயத்தைவிட்டு சென்றபிறகு இந்த மலைக்குதான் சென்றார். மகன் முருக பெருமான் தவமிருந்த இம்மலை… தந்தை வீற்றிருக்கும் கைலாயத்தைவிட 1200 மீட்டர் உயரமானது.

 

ராக்ஷஸ்தல் ஏரி


பார் கடலை கடைந்தபொழுது வெளிப்பட்ட விஷத்தை கைலாயத்திற்கு எடுத்து வந்தபொழுது…ஒரே ஒரு துளி இந்த ஏரிக்குள் விழுந்தது. அந்த ஏரியின் விஷத்தன்மை எத்தகையது என்றால்…அந்நீரை பருகுபவரை அழித்துவிடும். ரக்த பீஜ வரம் பெற்று அட்டகாசம் செய்துக் கொண்டிருந்த சண்டா மற்றும் முண்டா எனும் அரக்கர்களை பார்வதி தேவி இந்த எரியில்தான் வதம் செய்தாள்.

யமதுவார்


சிவ பக்தனான மார்கண்டேயனின் உயிரை யமன் தன் பாசக்கயிற்றால் கட்டி சிறைபடுத்தி இழுத்துச் செல்ல எத்தனித்த பொழுது …அதை தடுத்து நிறுத்திய ஈசன்… யமதர்ம ராஜனுக்கு ஒரு கட்டளையை விடுத்தார்…அது …இனி நீ இந்த எல்லையை தாண்டக் கூடாது என்பதாகும்.அதுமட்டுமல்லாமல் பரிக்கிரமத்தின்போது இந்த எல்லையை தாண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் என்னை நேரடியாக வந்தடைவார்கள் என்று ஆசிர்வாதமும் வழங்கினார். அந்த முக்கியத்துவம் வாய்ந்த இடம்தான் யமதுவார். இங்கு 84 சித்தர்களின் ஜீவ சமாதி உள்ளது.

அஸ்டபத்


இங்குதான் கைலாயத்தை மிக அருகில் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கிறது. பிரபஞ்சத்தை காக்கும் அஷ்ட காவல் சக்திகள்… பிரபஞ்சத்தின் எட்டு திசைகளையும் இங்கிருந்து காப்பதாக சொல்வார்கள்.

கைலாயம் ஓர் வாழும் அதிசயம்.
மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் தம் வாழ்வில் அற்புதங்கள் நிகழ … தவறாமல் காண வேண்டிய அதிசயம் கைலாயம்.

முன்பதிவிற்கு தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்… [email protected] & +91 9886092245

நாள்: ஜூலை 27, 2012 முதல் ஆகஸ்ட் 14, 2012
முதல் பயணம் ( Trip A ) : 27th July – 14th Aug (Full Trip Travelling with Swamiji)

நன்கொடை : Rs 5,00,000 (approx. USD$10,000 depending upon currency exchange rates)

இரண்டாம் பயணம் ( Trip B ) 23rd July – 9th Aug (Spending 2 days with Swamiji in Kailash)

நன்கொடை : Rs 2,00,000 (approx. USD$4,000 depending upon currency exchange rates)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *