கல்பதரு

கல்பதரு

 

எண்ணங்களையும் செயல்களையும் வெற்றிக்காக வரிசைப்படுத்துங்கள்:

Align your thought and action for success

 

ஞான குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மிக அழகாகச் சொல்கிறார், மன் முக் ஏக் கரோ.”

 

உங்களின்  எண்ணம் மற்றும் வார்த்தைகள் – இவற்றை ஒன்றாக்குங்கள்

 

உங்கள்  உள் உரையாடலையும், வெளி உரையாடலையும் ஒருங்கிணைத்தலே ஞானமடைதலாகும். வெறுமனே உங்கள்  உள் உரையாடலையும், நீங்கள் பேசும் வார்த்தைகளையும் ஒன்றாக்குங்கள். உங்கள்  உள் தளத்தில் இருந்து பாசாங்கு தன்மையை அகற்றுங்கள். உங்கள்  உள் தளத்தை ஒருங்கிணைப்பதற்கான முதல்படி இதுவே!

 

உள் உரையாடலும் வெளி வார்த்தைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு உடல் அமைப்பில் வாழ்தலே சொர்க்கமாகும். உள் உரையாடலும், பேசப்படும் வார்த்தைகளும் ஒருங்கிணைந்த ஒரு உடல் அமைப்பில் வாழ்வதைத் தவிர, வேறு ஒன்றும் அதிக இன்பத்தைத் தந்துவிட முடியாது.

எண்ணங்கள், வார்த்தைகள் இவற்றின் செயல்பாட்டால் நீரில் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய சுவையான ஆய்வு ஒன்றை ஜப்பானிய விஞ்ஞானி டாக்டர். மாஸரு இமாட்டோ நிகழ்த்தியுள்ளார்.

 

நீர்கூட நம்முடைய வார்த்தைகள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப பதில் செயல்புரிகிறது என்பதை அவரின் ஆய்வின் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.  நம் உடலானது 70% மேலாக நீரால் உருவாகியுள்ளது. அது போலவே நமது பூமி கோளமானது 70% நீரால் சூழப்பட்டுள்ளது. இதன் மூலம், வார்த்தைகளின் சக்தியை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும்.

 

சுய முரண்பாடுடைய எண்ணங்களை ஒன்று படுத்தும்போது, அவை நிஜமாகின்றன. மேலும்  எந்த ஒரு எண்ணத்தைத் தொடர்ந்து சிந்திக்கிறீர்களோ, அது நிஜமாகிறது. அந்த எண்ணமானது தானாகவே செயல்படத் தொடங்கிவிடுகிறது.

 

சுய முரண்பாடான எண்ணங்கள் என்பவை யாவை?

இரண்டு விஷயங்களில் எந்த ஒன்றைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்ய முடியாத போதும், சிலசமயங்களில் அந்த இரண்டும்  ஒன்றுக்கொன்று எதிரெதிரானவையாக இருக்கும்போதும் நீங்கள் சுய முரண்பாடுகளுக்கிடையில் சிக்கிக் கொள்கிறீர்கள்.

 

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம்.

நீங்கள் செல்வத்தை விரும்புகிறீர்கள். ஆனால் செல்வத்தை அடைவதனால் வரும் பொறுப்புகளை கையாள்வதில் நீங்கள் உறுதியாக இருப்பதில்லை. அதனால் எந்த ஒரு தீர்மானமும் எடுக்காமல், முடிவைத் தள்ளிப் போட்டுக்கொண்டும், காலம் தாழ்த்திக் கொண்டும் இருக்கிறீர்கள்.

 

உங்களை நீங்களே எந்த அளவு மோசமாக ஊனப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வது கூட இல்லை. உங்களிடம் இருக்கின்ற அதிக அளவு சக்தியானது, உங்கள்  வழிகாட்டுதலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள்  விருப்பங்களை எல்லாம் ஒருமுகப்படுத்த வேண்டியது மட்டும்தான். அவை தானாகவே நிறைவேறிவிடும்.

 

அதன்பின் நீங்கள் எதை எண்ணினாலும் சரி, அது உங்கள்  வாழ்வில் நிஜமாகிவிடும்.

 

எனக்கு செல்வம் வேண்டும்,” என்பது உங்கள்  எண்ணமாக இருக்குமேயானால் நீங்கள் செல்வந்தராகிவிடுவீர்கள்.

 

எனக்கு ஆரோக்கியம் வேண்டும்,” என்பது உங்கள்  எண்ணமாக இருக்குமேயானால் நீங்கள் ஆரோக்கியமானவராகிவிடுவீர்கள்.

 

எனக்கு மிக அருமையான உறவுகள் தேவை” என்பது உங்கள்  எண்ணமாக  இருக்குமேயானால் உங்களைச் சுற்றி அருமையான மனிதர்கள் சேர்ந்துவிடுவார்கள்.

 

நான் ஞானமடைய வேண்டும்,” என்பது உங்கள்  எண்ணமாக இருக்குமானால் நீங்கள் ஞானத்தை வெளிப்படுத்தத் தொடங்குவீர்கள்.

 

நீங்கள் எத்தகைய எண்ணத்தைத் தேர்வு செய்கிறீர்களோ, அந்த எண்ணமானது உங்கள்  வாழ்க்கையில் தானாகவே செயல்படத் தொடங்குவதை நீங்கள் பார்க்கலாம். அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும், பாதைகளையும் தானாகவே கண்டு கொள்வீர்கள்.

 

அவை உங்களுக்குள்ளேயே தானாகவே வெளிப்படத் தொடங்கிவிடும். எந்த இலக்கை நீங்கள் விடாமல் மனத்தில் வளர்க்கிறீர்களோ, அவற்றிக்குத் தானாகவே வழிபிறக்கும்.  எந்தவிதமான எண்ணங்களை மனத்தில் வளர்க்கிறீர்களோ, எந்த சுய முரண்பாடான எண்ணங்களை ஒன்றுபடுத்துகிறீர்களோ. அந்த எண்ணங்கள் நிஜமாகின்றன.

 

உங்கள்  உள்ளுலக வாழ்விலும் வெளியுலக வாழ்விலும் பூரணத்துவத்தைத் தரவல்ல குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்தல் என்பது இதுவே!

தேடுதல் உள்ளவரின் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், இது சரிதான் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் தடுமாறுகிறேன்!” என்பதே.

 

நீங்கள் இத்தகைய சோம்பேறித்தனத்தில் சிக்கிக் கொண்டீர்கள் என்றால், உங்களால் எதையுமே சாதிக்கவும் முடியாது, சோம்பேறிதனத்திலிருந்து மீண்டு வரவும் முடியாது. நீங்கள் இந்த ஒரே கருத்திலேயே எப்போதும் சிக்கிக் கொள்வீர்கள்.

 

குழப்பம் ஏற்படுத்தும் பழைய பழக்க வழங்கங்களிலேயே சிக்கிக்கொள்ளும் இதைத்தான் நாம் காரணசரீரம் என்கிறோம். இந்த இடத்தில்தான் நீங்கள் உங்கள்  முழு பிறவியும், இன்னும் சோல்லப்போனால் பல பிறவிகளாகச் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த அடுக்கைவிட்டு வெளியே வருவதற்கு உங்களுக்கு சக்திவாய்ந்த வடிகால் தேவையாக உள்ளது. நீங்கள் பலமான அடியாக எடுத்து முன் வைக்க வேண்டும். உங்கள்  ஆசைகளை ஒன்றுபடுத்தி முழுமையாக்கி அதனை செயல்படுத்துங்கள். முரண்பாடுகள், எதிர்மறைகள் இவற்றிலிருந்து விடுபடுங்கள். அதைத்தான் நான் ஜீவன் முக்தி (ஞான வாழ்க்கை வாழ்தல்) என்கிறேன். இதை பற்றி விரிவாக விளக்கும் தியான முகாம் கல்பதரு.

 

கல்பதரு தியான முகாம் பிரதி வாரம் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பெங்களூரு ஆஸ்ரமத்தில் நடைபெறுகிறது. பௌர்ணமி தோறும் திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் நித்யானந்த தியானபீட ஆஸ்ரமத்தில் நடைபெறுகிறது.
முன்பதவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

Nithyananda Dhyanapeetam

Nithyanandapuri

Girivalapathai

Tiruvannamalai – 606 604

 

Contact no: 072 00 00 33 11 / 22

Landline No: +91 04175 237666

Email ID: [email protected]

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *