பொய் வழக்கு தொடர்ந்த குணசேகரன் மீது நடவடிக்கை வேண்டும்

பொய் வழக்கு தொடர்ந்த குணசேகரன் மீது நடவடிக்கை வேண்டும்

சீராகாபாடி ஆஸ்ரமத்தை அபகரிக்க பொய் வழக்கு தொடர்ந்த குணசேகரன் மீது நடவடிக்கை வேண்டும்

– 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் மனு

சீராகாபாடியில் இருக்கும் நித்யானந்த தியானபீடத்திற்கு சொந்தமான நிலத்தை குணசேகரன் என்பவர் அபகரிக்க நினைத்து தொடர்ந்த பொய்யான வழக்கு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சீரகாபாடி ஆஸ்ரம பொறுப்பாளர்களும் 100 க்கும் மேற்பட்ட பக்தர்களும் இணைந்து ஆட்டையாம்பட்டி காவல் துறை ஆய்வாளரிடம் மனு அளித்தார்கள். நித்யானந்த தியானபீடத்திடமிருந்து நிலத்தையும், அதை வைத்து பணத்தையும் அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் பொய்யான நில அபகரிப்பு வழக்கை குணசேகரன் தொடர்ந்திருக்கிறார் என்பதற்கான சட்டப்பூர்வமான நிலப்பத்திர ஆவணங்கள் ஆட்டையாம்பட்டி காவல் துறை ஆய்வாளர் அவர்கள், உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்-சேலம், உயர்திரு. காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்-சேலம் ஆகியோரிடம் அளிக்கப்பட்டுள்ளன.

[box_dark]விரிவான செய்திகள்:[/box_dark]

சீராகாபாடி ஆஸ்ரமம் நித்யானந்த தியானபீடத்திற்கு சொந்தமான 50 செண்ட் நிலமாகும். சீராகாபாடியில் வசிக்கும் குணசேகரன் அவர்கள் நித்யானந்த தியானபீடத்திற்கு நில ஒப்பாவணை மூலம் 1.12.2006 ஆண்டு நிலத்தை கிரயம் செய்து முறையாக விற்பனை செய்தார். குணசேகர் மற்றும் அவரது மனைவி திருமதி. விஜயா அவர்கள் இருவருமே கிரயப்பத்திரத்தில் கையெழுத்திட்டுத் தந்தார்கள். சட்டரீதியாக நிலம் நித்யானந்த தியானபீடத்தால் பெறப்பட்டது.

குணசேகர் அவர்களின் சகோதரி-பெயர்:  விஜயா கருப்பன்னண் அவர்களால் சாட்சி கையெழுத்திடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலத்தை கிரயம் செய்த பொழுது குணசேகரும், அவருடைய மனைவியும் சேர்ந்து தங்களுடைய மகள்களின் (மைனர் குழந்தைகள்) நிலப்பகுதியையும் சேர்த்து விற்பனை ஒப்பாவணை மூலம் தியானபீடத்திற்கு விற்பனை செய்திருக்கிறார்கள். 2010 ஆண்டு மேஜரான குணசேகரின் மகள்கள், தங்கள் பகுதி நிலம் தங்கள் பெற்றோர்களால் விற்பனை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குணசேகரன் மீது சிவில் வழக்கு தொடுத்தனர். 2010 ஆண்டிலிருந்து இந்த சிவில் வழக்கு குணசேகரன் மீது அவருடைய மகள்களால் தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது.

குணசேகரன் தம் மீது இருக்கும் சிவில் வழக்கை மறைத்து, ஜூலை 2011 -ல் நித்யானந்த தியானபீடம் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு சுமத்தினார்.

உடனடியாக இந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீரகப்பாடி பொறுப்பாளர்கள் ஆட்டையாம்பட்டி காவல் துறை ஆய்வாளர் அவர்களை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்கள்.அம்மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு (எண்: 3047691), புகாராகப் பதிவு செய்யப்பட்டது. (எண்: 241/11)

இதனை விசாரணை செய்த காவல்துறை ஆய்வாளர் அவர்கள்…இந்த நிலம் நித்யானந்த தியானபீடத்திற்கு சுத்த கிரயமாக அளிக்கப்பட்டிருப்பதால் நீங்கள் தொடர்ந்து உங்களின் வழிபாடுகளைத் தொடர்ந்து செய்திடுங்கள் என்று உத்தரவு பிறப்பித்தார்கள். அவர்களுடைய உத்தரவையும் மீறி குணசேகரன் சில குண்டர்கள் துணையுடன் சிவ வழிபாட்டிற்காக வரும் பெண்களையும் பக்தர்களையும் மிரட்டி, தகாத வார்த்தைகளால் திட்டி, எல்லோரும் இங்கிருந்து ஓடிவிடுங்கள். இல்லையென்றால் பணம் கொடுங்கள் என்று மிரட்டி வந்தார்.(ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது)

இந்த நிலையில் நேற்று (நவம்பர் 3, 2012 ) குணசேகரன் அவர்கள் திடீரென்று ஒரு பொய்யான நில அபகரிப்பு வழக்கை நித்யானந்த தியானபீடத்தின்மீது பதிவுசெய்துள்ளார்.

நித்யானந்த தியானபீடத்திடமிருந்து நிலத்தையும், அதை வைத்து பணத்தையும் அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்ததோடு நவம்பர் 3, 2012 அன்று இந்த பொய்யான நில அபகரிப்பு வழக்கை குணசேகரன் தொடர்ந்திருப்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சீராகாபாடி ஆஸ்ரம பொறுப்பாளர்களான திரு. கே.சென்னாகிருஷ்ணன், ஏ.செல்வம் , ஆர். சக்திவேல், எம். செல்வக்குமார், ஆர்.ஆர். கண்ணன் ஆகியோர் இன்று ஆட்டையாம்பட்டி காவல்துறை ஆய்வாளரை சந்தித்து இந்த மனுவை அளித்தார்கள்.

குணசேகரன் தங்கள் மீதிருக்கும் குடும்ப வழக்கை – நித்யானந்த தியானபீடத்தின் மீதான நில அபகரிப்பு வழக்காக கெட்ட நோக்குடன் இப்பொழுது திசை திருப்பியிருக்கிறார்.

குணசேகரன் அவர்கள் சொல்வது எல்லாமே பொய் என்பதை நித்யானந்த தியானபீடத்திடம் இருக்கும் சட்டரீதியான நியாயமான எல்லா நிலப்பத்திரங்களும் ஆவணங்களும் நிரூபிக்கிறது.

[box_dark]சீராகாபாடி ஆஸ்ரமம்:[/box_dark]

சீராகாபாடி ஆஸ்ரமத்தில் தினந்தோறும்…

1. அன்னதானம் வழங்கப்படுகிறது.

2. அந்தக் கிராமத்தில் வாழும் பக்தர்களும் பொதுமக்களும் தியானமும் யோகப்பயிற்சிகளும் செய்து பயன் பெறுகிறார்கள்.

3. அங்கு வரும் சன்யாசிகளுக்கும் சாதுக்களுக்கும் அங்கிருக்கும் முழுநேர சேவையாளர்கள் சேவை செய்து வருகிறார்கள். ஜெயின் சாதுக்கள் சீராகாபாடி ஆஸ்ரமத்தைத் தேர்ந்தெடுத்து தங்கிச் செல்கிறார்கள்.

4. சீரகாபாடியில் வசிக்கும் பொதுமக்கள் சீராகாபாடி ஆஸ்ரமத்தில் இருக்கும் சிவ லிங்கத்தை குல தெய்வமாக வழிபாடு செய்து தரிசனம் செய்கிறார்கள். திருமண நிகழ்ச்சிகள் , காது குத்து விழாக்கள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் போன்றவை இங்கு இலவசமாக நடத்தி தரப்பட்டு வருகின்றன.

http://www.nithyananda.org/news/grabbing-nithyananda-ashram-property-devotees-submit-petition

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *