பிரத்யக்ஷ பாத பூஜை

பிரத்யக்ஷ பாத பூஜை

பிரத்யக்ஷ பாத பூஜை

நமது வேத பாரம்பரியத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு ஞான நுட்பங்களுள், குருவுக்குப் பாத பூஜை செய்வது என்பது முக்கியத்துவம் மிக்க தலையாய நுட்பமாக திகழ்கிறது. பாரம்பரியம் பாரம்பரியமாக ரிஷிமார்களுக்கும் ஞான குருமார்களுக்கும் பாத பூஜை செய்து வழிபடும் முறை நம் கலாச்சாரத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது.

 

நமது வேத கலாச்சாரப்படி, ஒரு குழந்தை, தன் வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும், அது உள் உலக விஞ்ஞானமாகட்டும் அல்லது வெளி உலக விஞ்ஞானமாகட்டும், குருவின் காலடி அருகில் அமர்ந்துதான் கற்றுக்கொள்கிறது. தன் விழிப்பணர்வு நிலையை உயர்த்திய ஞான குருநாதருக்கு சீடர் செலுத்தும்நன்றியுணர்வுதான் பாத பூஜை. இவ்வுலகில் பெற்றிருக்கும் அனைத்திற்குமே நாம் தகுதியானவர்கள் இல்லை, நாம் பெற்றிருக்கும் அனைத்துமே பரிசுகளாக நம்மீது பொழியப்பட்டவைதான் என்பதைப் புரிந்துகொண்டு, நன்றியுணர்வை குருவின் பாதங்களில் சமர்ப்பியுங்கள்.

 

நன்றியுணர்வு, இந்த ஒரு குணம் போதும், இது நம்மை எல்லாத் துக்கங்கங்களிலில் இருந்தும், பந்தங்களில் இருந்தும் விடுபடுத்திவிடும்.

 

ஆதிசங்கரர் தம்முடையகுரு அஷ்டகத்தில் மிக அழகாகச் சொல்கிறார்: குருவின் பாதங்களில் சரணாகதியடைவதுதான், நம் வாழ்வில் நிகழும் உச்சபட்ச மிக அழகான ஒரு நிகழ்வாகும். சரணாகதித்துவம் நிகழாத நிலையில், நம் வாழ்வில் பெற்றிருக்கும் எதனாலும் பயன் இருக்கப்போவதில்லை.

 

ரீரம் ஸுரூபம் ததா வா கலத்ரம்

யசச்சாரு சித்ரம் தனம் மேரு துல்யம் /

மனச்சேன்ன லக்னம் குரோரங்க்ரி பத்மே

தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் //

 

அழகும், அன்பும் கொண்ட மனைவியைப் பெற்றிருக்கும் அதிர்ஷ்டசாலிகளாக நாம் இருந்தாலும் சரி, நமது புகழ் பாரெங்கும் பரவியிருந்தாலும் சரி, மிகுந்த செல்வம்  நம்மிடம் மேருமலை போன்று நிலைபெற்றிருந்தாலும் சரி, மனமானது குருவின் தாமரைப் பாதங்களின் மீது நிலை பெற்றிருக்காவிட்டால், இவற்றால் எல்லாம் விளையப்போகும் பயன்தான் என்ன? உண்மையிலேயே, பயன்தான் என்ன, பயன்தான் என்ன?” என்று குருவின் பாதங்களில் சரணாகதி அடைவதைப் பற்றி விளக்கியுள்ளார்.

 

          ஒரு அவதாரப்புருஷர், பிரபஞ்சத்தின் வெளிப்பாடாக இருப்பதால், நமது எல்லாவித கர்மங்களையும் நீக்கிவிடுகிறார். பிரத்யக்ஷ பாத பூஜை  என்பது, பக்தர் ஒருவர், குருவின் ஸாந்நியத்தினாலும் ஆசீர்வாதத்தினாலும் தம் வாழ்வில் தமக்குக் கிடைத்த ஆரோக்கியம் செல்வம், சக்தி, உணர்வுப்பெருமாற்றம் ஆகியவற்றுக்காகத் தம் உள்ளம் நிறைந்த நன்றியைச் செலுத்தும் ஒரு நிகழ்வு.

 

பிரத்யக்ஷ பாத பூஜைநன்றியுணர்வையும்சரணாகதி உணர்வையும் நாமே நேரிடையாக குருவின் பாதங்களில் சமர்ப்பிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பு. இது நமது வாழ்நாளில் கிடைக்கும் மிக மிக அரிய சந்தர்ப்பம்.

 

பிரத்யக்ஷ பாத பூஜை எப்பொழுது நடக்கிறது?

தினமும் காலை 7 மணிக்கு(இந்திய நேரப்படி); தயவு செய்து முன்னதாகவே உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

 

எங்கு நடக்கிறது?

நித்யானந்த தியான பீடம், பிடதி, பெங்களூரு

 

நீங்கள் வலைதளத்தின் மூலமாகவும் பதிவு கொள்ளலாம்.

 

Creditcard மூலம் வலைதளத்தில் பதிவு செய்துகொள்ள முடியாதவர்கள், Welcome center தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி எண்: +91 – 9742203311    


 

admin

One thought on “பிரத்யக்ஷ பாத பூஜை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *