பாபா ராம்தேவ் அவர்களின் சீரிய முயற்சிக்கு நன்றி பாராட்டுகிறோம்

பாபா ராம்தேவ் அவர்களின் சீரிய முயற்சிக்கு நன்றி பாராட்டுகிறோம்

பாபா ராம்தேவ் அவர்களின் அறக்கட்டளைகளுக்கு வரி விதித்த மத்திய அரசுக்கு பரமஹம்ஸ நித்யானந்தர் கண்டனம்

பாபா ராம்தேவின் மூன்று அறக்கட்டளைகளுக்கும் அளித்து வந்த வரிவிலக்கினை இரத்து செய்து, அவற்றை வரிக்குப்பட்ட பிரிவின் கீழ் கொண்டுவந்து, அந்த அறக்கட்டளைகளால் 2009 – 2010 ஆண்டில் விற்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகளுக்கான வரியாக, ரூ.58 கோடி வரை வரி விதித்திருக்கும் மத்திய அரசின் முடிவினை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

காலத்தால் போற்றத்தக்க நம் வேத பாரம்பரியத்தை, குறிப்பாக ஆயுர்வேதம் மற்றும் யோகா போன்றவற்றை உலகம் முழுக்கக் கொண்டு சென்று சேர்ப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறார் பாபா ராம்தேவ்.

நாடு முழுக்க ஆயிரக்கணக்கான இலவச யோகப்பயிற்சி மையங்கைளையும், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சாலயங்கள் நடத்திவரும் பாபா ராம்தேவ் அவர்களின் சீரிய முயற்சிக்கு நன்றி பாராட்டுகிறோம். இவற்றின் மூலம், பக்கவிளைவுகள் அற்ற பாதுகாப்பான பாரம்பரிய முறைகள் மூலம் சிறந்த ஆரோக்கிய வாழ்வை ஒவ்வொரு இந்தியனுக்கும் சாத்தியமாக்கியுள்ளார். இந்திய பாரம்பரிய அமைப்பினுடைய ஆரோக்கிய வாழ்வு மற்றும் மருத்துவ உலக மறு சீரமைப்பிற்கு பாபா ராம்தேவின் பங்களிப்பு அளவிடற்கரியது, அவர் மீது இந்த நடவடிக்கை எடுத்திருக்கும் மத்திய அரசின் இந்த செயல் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற முடிவு, ராம்தேவ் பாபா அவர்களின் அறக்கட்டளை நிறுவனங்களுக்கும் மட்டும் மரண அடியல்ல. நம் புனிதமான கலாச்சாரத்தை புனரமைத்து உலகளவில் பிரபலமாக்க முயற்சி செய்து வரும் மற்ற சிறு நிறுவனங்களை வலிமை கொண்டு சிதைக்கவும், தன்னம்பிக்கையை இழக்கவும் செய்கின்ற அறிக்கையாகிவிடும். அதே நேரத்தில் இந்த சிறு நிறுவனங்கள் வளத்தையும் பலத்தையும் லாபத்தையும் தரும். நாட்டிற்கு பெருமையையும் உண்டாக்கும்.

உலகின் மிகவும் பழமை வாய்ந்த இந்து அமைப்பின் தலைவர் என்கின்ற முறையில், நாங்கள்… ராம் தேவ் பாபா அவர்களின் நிறுவனங்களின் மீது நம்பத்தகாத குற்றச்சாட்டுகளை மறு புலனாய்வு செய்ய வேண்டும் என்றும் மேலும் அதற்கு மீண்டும் உதவி அறக்கட்டளை என்கிற தகுதியை வழங்க வேண்டும் என்றும் அரசாங்க அதிகாரிகளை பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். மேலும், பொது மக்களின் அக்கறை கருதி அறக்கட்டளைகளின் சார்பில் பல்வேறு பயனுள்ள செயல்களை செய்வதற்கு தயாராக உள்ள இந்த நிறுவனங்களின் பொருட்டு, ரூபாய் 58 கோடி ரூபாய் வரிவிதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

– நித்யானந்த தியானபீடத்தின் நிறவனர் மற்றும் மதுரை ஆதீனத்தின் 293ஆவது குருமகாசன்னிதானமான தவத்திரு பரமஹம்ஸ நித்யானந்தர் மற்றும் மதுரை ஆதீனத்தின் 292ஆவது குருமகாசன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்.

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *