பரமஹம்ஸ நித்யானந்தர்

பரமஹம்ஸ நித்யானந்தர்

[button link=”The URL of the button” variation=”red”] பரமஹம்ஸ நித்யானந்தர்[/button]

பரமஹம்ஸ நித்யானந்தர், ஓர் வாழும் அவதார புருஷர்.

தேடுதல் உள்ள ஒவ்வொருக்குள்ளும் ஆன்மீக உத்வேகத்தை அளிக்கும் ஆற்றல் மிக்க சக்தி… பரமஹம்ஸ நித்யானந்தர்.

[box_dark]
வாழும் உலகத் தலைவர்களின் வரிசை பட்டியலில் பரமஹம்ஸர்:

உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKIN’S) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (–MIND BODY SPIRIT)  பத்திரிக்கை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மீக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராக குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

[/box_dark]

 

ஞான குருவாம் பரமஹம்ஸ நித்யானந்தர் உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுடன், தம்முடைய ஆன்ம அனுபவங்களையும் ஞானக்கருத்துகளையும், தியான நுட்பங்களையும் தினந்தோறும் பகிர்ந்து கொள்கிறார். அதன்மூலம் அவர்களுக்குள் உணர்வு உருமாற்றங்களை நிகழ்த்தி, அவர்கள் ஜீவன் முக்தர்களாக வாழத் தேவையான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கிறார்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தெய்வீக ஆற்றலை உயர்த்தி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்திச் செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஓர் கருணை மிக்க அவதார சக்தி பரமஹம்ஸர்.
அக விழிப்புணர்வை (Inner Awakening) மலர்த்துவதுதான் அதற்கான ஒரே தீர்வு என்பதை நவீன மருத்துவ ஆய்வுகளால் மெய்ப்பித்திருக்கும் மெய்ஞான விஞ்ஞானியாம் பரமஹம்ஸர், தீகை்ஷயின் மூலமாக நமக்குள்ளிருக்கும் அளப்பரிய சக்தி ஆற்றலான குண்டலினி சக்தியை உயிர்ப்பிக்கிறார்.

நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை, உறவுகளிலிருந்து மதம்வரை, வெற்றியிலிருந்து ஸந்யாஸம்வரை, என எல்லாத் துறைகளைப் பற்றியும் நமக்கு தெளிவான அக நோக்குகளையும் ஆன்மீக தீர்வுகளையும் வழங்கும் தரும் ஓர் ஆன்மீக மேதை அவர். நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத் தேவையான புத்தி வளத்தையும், நுட்பங்களையும், நமக்கு வழங்கும் பிறவி யோக புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர்.

உலகெங்கிலும் கோடிக்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு தியான சிகிச்சை அளித்து, அவர்களை மன அழுத்தம், கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோகளிலிருந்து மீட்டெடுத்துள்ளார். அவர்கள் ஆனந்தமான வாழ்வதற்கு வேத வாழ்வியில் முறைகளை தீர்வுகளாக வழங்கிவருகிறார்.

சக்தி மிகுந்த தெய்வீக தியான சிகிச்சையாளர் என்று மக்களால் போற்றப்படும் பரமஹம்ஸர் நவீன ஆன்மீக உலகின் விடிவெள்ளியாக வாழ்கிறார். பரமஹம்ஸர் ஆன்மீக நாட்டம் கொண்ட அனைத்து நாட்டவரின் இதயத்திலும் இடம்பிடித்துள்ளார். தம்முடைய இணையதளத்தில் உள்ள Youtube வீடியோக்களின் மூலமாக அரிய ஆன்மீக சேவையை ஆற்றி வருகிறார். இணையதளத்தில் உள்ள Youtube லேயே உலக அளவில் அதிக மக்களால் பார்க்கப்படும் முதல் ஆன்மீக குருவாய் பரமஹம்ஸர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 200க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள சிறந்த இளம் நூலாசிரியர் பரமஹம்ஸர்.

ஆன்மீகத்தை நம் அன்றாட வாழ்க்கையிலும், இனிமையான முறையில் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஞான குரு நம் பரமஹம்ஸர்.

ஆன்மீகத்தை நம்முடைய அன்றாட நடைமுறை வாழ்வாக வாழும் அளவிற்கு எளிமையாக்கிக் கொடுத்திருப்பது, மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஓர் அரிய பங்களிப்பாகும்.

இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

அவர் அளிக்கும் நுட்பங்களில் உள்ள எளிமைத்தன்மையும், அவருடைய ஆன்மீக அனுபவங்களின் உண்மைத்தன்மையும், ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலகம் முழுக்கப் பரவச் செய்துள்ளன.
பரமஹம்ஸ நித்யானந்தர்… பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நுட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும், பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.

போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன?
ஆக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன?
அதற்கு தனி மனிதன் என்ன செய்ய வேண்டும்?
என்பது போன்ற அடிப்படை கேள்விகளுக்கான விடைகளையும், ஆனந்த வாழ்விற்கான இரகசியங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒர் உலகாளவிய ஆன்மீக இயக்கம்… பரமஹம்ஸ நித்யானந்தரால் நிறுவப்பட்ட நித்யானந்த தியான பீடம்.

ஞான பாதையில் மக்கள் தாம் நம்பும் உயர்ந்த ஆன்மீக சத்தியங்களை தங்கள் வாழ்வாக மாற்றியமைத்து வாழ்வதற்கும் அவர்கள் ஜீவன் முக்தர்களாக மலர்வதற்கும் தேவையான உயர்ந்த சூழலை நித்யானந்த தியானபீடம் உருவாக்கி தருகிறது.

ஒவ்வொரு தனிமனிதரின் விழிப்புணர்வுக்குள்ளும் ஆன்ம எழுச்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வையும் அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் பரமஹம்ஸரின் நோக்கம்.

பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வு அதிகரிக்கும் போது, அது ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் அளவிடமுடியாத அசாதாரணமான உணர்வு உயர்வு எழுச்சியை நிகழ்த்தும். அதன் பலனாக நிகழும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களையும் நன்மைகளையும் நம்மால் அளவிட முடியாது.

நமக்குள் நிகழ்கின்ற உணர்வு மாற்றங்களைச் சரியான முறையில் பக்குவத்துடனும் உறுதியுடனும் நேர்மறையாகவும் கையாளுவதற்கு நமக்கு ஒரு அவதார புருஷரின் வழிகாட்டுதல் அவசியம் வேண்டும்.

வாழும் அவதார புருஷர்கள் கருணையோடு நமக்கு அளிக்கும் ‘தீகை்ஷ’ நேரடியாக நமக்கு வழிகாட்டுகிறது. நீண்ட நாள் பயிற்சிபெற்று பக்குவம் பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய ‘தீகை்ஷ’யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆன்மீக தேடுதல் எனும் ஒரு தகுதியை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு பரமஹம்ஸ நித்யானந்தர்.

admin

One thought on “பரமஹம்ஸ நித்யானந்தர்

  1. yes, my life was totally changed after swamiji’s healing,I am P.A to minister,tamil nadu. at the time of thane storm relief service of nihthyananda thyanapeedam, i got the precious chance,yes i met the world’s best one and only spiritual king.at that time i had severe pain in my heart, swamiji just take 5 mins then the pain should not come again till now, and the major thing is first time i saw the smile of GOD, and also i read the swamiji’s JEEVAN MUKTHI,book,the great swamiji give me the book,i cannot saw no book like this,this book is my guru.now i am so happy.thanks to my GOD NITHYANANDAR.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *