நித்யானந்த வேத கோயில்களின் தனித்துவம்

நித்யானந்த வேத கோயில்களின் தனித்துவம்

[button link=”The URL of the button” variation=”red”]நித்யானந்த வேத கோயில்களின் தனித்துவம்:[/button]

 

 

நித்யானந்த வேத கோயில்களில், ஞான குருவாகிய ஆதி சங்கரர், 8-வது நூற்றாண்டில் நிறுவிய ‘ஷண்மத’சம்பிராயத்தின்படி, கணேசர், சிவன், தேவி, விஷ்ணு, சுப்ரமண்யர், சூரியன்-ஆகிய ஆறு மிக முக்கியமான பெரிய கடவுள்களும், வாழும் ஞான குருவால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு, சக்தியூட்டப்பட்டு, சமமான மரியாதையுடன் வழிபடப்படுகிறார்கள்.

அங்குச்  செய்யப்படுகின்ற எல்லா பூஜைகளும் ஹோமங்களும் அங்கு வருகின்ற பக்தர்களின் தேவைகளையும், பிராத்தனைகளையும் நிறைவேற்றுவதற்காகவே நடத்தப்படுகின்றன். பண்டிகை நாட்களில், அங்கு பக்தர்களே அபிஷேகம் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

பிரம்மோத்சவம் என்னும் சிறப்பான விழாக்கள், ஆறிலிருந்து பத்து நாட்களுக்கு நீடிக்கின்றன.

நமது மனித உடலிலுள்ள ஏழு சக்தி மையங்களின் தெய்வீக சக்திகளைக் குறித்து, அந்தந்த தெய்வீக சக்திகளின் உருவகமாகத் திகழும் ஏழு தெய்வங்களைப் போற்றும் விதத்தில் பிரம்மோத்சவங்கள் கொண்டாடப்படுகின்றன.

பிடதியிலிருக்கும் ஆனந்தேஸ்வரர் கோயில், 600 ஆண்டுகள் பழமையான புனிதம் வாய்ந்த ஆலமரத்தைப் பெற்றிருப்பது இன்னும் மிகச் சிறப்பானது.

ஒரு ஞானமடைந்த குரு, தமது பூத உடலை நீத்து, ஜீவ சமாதியான இடமான அந்த ஆலமரத்தினடியில் கண்டெடுத்த சுயம்பு லிங்கமானது, கடந்த 1000 வருடங்களாகத் தெய்வீக சக்தியைப் பரப்பிவரும் பழம் பெருமைவாய்ந்த லிங்கமாகத் திகழ்கிறது.

ஒரு குரு ஜீவ சமாதியாகிறார் என்றால், அவர் சூட்சுமமான ‘வெளி’தளத்திலிருந்தவாறே தன் சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் குணமளிக்கும் சிகிச்சைகளை அளித்தும், அவர்கள் நல் வாழ்வுக்கு வழிகாட்டியும் உதவி வருகிறார் என்று பொருள்.

அந்த ஆலமரம், தன்னருகிலேயே அத்திமரத்தையும், அரசமரத்தையும் கொண்டிருக்கிறது.  இந்த மூன்று மரங்களும் சேர்ந்திருப்பதால், இங்கு ஒரு அற்புதமான, குணமளிக்கும் சக்தி வெளிப்படுகிறது.  இந்த இடத்தில் ஒரு அதீதமான மௌனம் நிலவுகிறது.

ஞானகுருவின் நேரடி மேற்பார்வையில், சிற்ப வல்லுனர்களால் செதுக்கிச் செய்யப்பட்ட பல சிற்பங்களை உலகம் முழுவதும் உள்ள நித்தியானந்த வேத கோயில்களில் பிரதிஷ்டை செய்திருப்பதன் மூலம், தெய்வீக விக்ரகங்களைச் செதுக்கும் கலையை மீண்டும் உயிர்த்தெழச் செய்திருக்கிறது.

 

இந்தக் கோயிலின் தனிப்பெருஞ்சிறப்பு என்னவென்றால், ஒரு பிரத்யக்ஷ மூர்த்தியான, ஒரு வாழும் அவதாரப் புருஷரின் ஜீவனுள்ள சக்தியைப் பெற்றிருப்பதுதான். குருவோடு ஆழமாகத் தொடர்புகொள்ள விரும்புவர்கள் அனைவருக்குமே இச்சக்தி கிடைக்கிறது.

 

இங்கு ஞானத்தேடல் உள்ளவர்களுக்கும் பக்தர்களுக்கும், நேரிடையாக சுவாமிஜியாலும், அவரால் பயிற்றுவிக்கப்பட்ட பூஜாச்சாரியார்களாலும்  ‘தீகை்ஷ’ அளிக்கப்படுகிறது.

 

இங்கு நடக்கும் பல நிகழ்ச்சிகளுள், நாமகரணம் என்னும் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டல் விழாவும், அன்ன ப்ரஷனா என்னும் முதல் சாதமூட்டல் விழாவும், காயத்ரி ‘தீகை்ஷ’ அளிக்கும் சடங்குகளும், திருமணச் சடங்குகளும் முக்கியமானவையாகும்.

எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கும் ‘ஆரதி’ என்னும் பூஜை முறை, ஒவ்வொரு நாளும் 21 வகை உபசாரங்களுடன் இருவேளையும் செய்யப்படுகிறது.

இங்குக் கோயிலில் ‘பூஜை ஆச்சாரியார்’களுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.  அவர்கள், பக்தர்களின் விருப்பங்களின்படி அவர்களின் வீடுகளுக்கே சென்று ஹோமங்களையும், பூஜைகளையும் செய்து தருகிறார்கள்.

இந்த வேதக் கோயிலுக்கு அருகில் இருக்கும் அன்ன மந்திர் என்னும் சமையல் கூடத்தில், இங்கு வரும் பக்கர்களுக்கு, கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவு வகைகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *