நித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்

நித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்

[box_dark]நித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்[/box_dark]

திருவண்ணாமலையில் இருக்கும் நித்யானந்த தியானபீடம் இந்து கோவிலாக இருப்பதால் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்கு கீழ் எடுக்கப்படுவதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்ற மாதம் வழங்கப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையதுறை அளித்திருந்த அறிவிப்பிற்கு நித்யானந்த தியானபீடம் சட்ட ரீதியாக பதிலளித்து நேற்று ரிட் மனு தாக்கல் செய்தது.

திருவண்ணாமலை நித்யானந்த தியானபீடம் ஒர் இந்து கோவில் மட்டும் அல்ல. பல மதங்களுக்கும் உள்ள இயல்பான நம்பிக்கைகள் தியானமாகவும் யோகமாவும் பயிற்சி செய்யப்படும் உலகாளாவிய வழிபாட்டு தலம் என்று அந்த ரிட் மனுவில் உரித்தான பதில் அளிக்கப்பட்டிருந்தது.

இன்று இந்த வழக்கு மீதான விசாரணை நடைப்பெற்றது. அதன்பிறகு, மற்றொரு நாளுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

[box_dark] விரிவான செய்திகள்:[/box_dark]

1. இந்து அறநிலையதுறையின் கட்டுப்பாட்டிற்கு கீழ் எடுக்கப்படுவதற்கு திருவண்ணாமலையிலிருக்கும் நித்யானந்த தியானபீட ஆஸ்ரமம் ஒரு கோயிலோ அல்லது ஒரு வழிபாட்டு ஸ்தலமோ அல்லது இந்து அறநிலயத்துறையின் சட்டத்திற்குட்பட்ட ஒரு இந்து மத நிறுவனமோ அல்ல. குஞுஞி 6 (16) ன் சட்டப்படி இந்து மத அறக்கட்டளை என்றால் அங்கு ஆஸ்ரமம் அல்லது கோயில் தொடர்புடைய இந்து மத விழாக்களோ அல்லது மத சம்பந்தப்பட்ட விழாக்களோ நடைபெற வேண்டும். ஆனால் இந்த வளாகத்தில் ஸ்வாமிஜி நித்யானந்தாவின் பிறந்தநாள் விழாவான ஜெயந்தி விழாவைத்தவிர வேறு எந்தவித இந்துமத விழாவோ அல்லது மத சம்பந்தப்பட்ட விழாக்களோ நடைபெறுவதில்லை.

2. நித்யானந்த தியானபீடம் அனைத்து மதத்தவரின் நம்பிக்கைகளுக்கும்  விருந்தோம்பல் நல்கும் பொது நிறுவனம். யோகம் மற்றும் தியான பயிற்சிகளால் விளையும் பயன்களைப் பற்றி உலகளாவிய அளவில் அனைத்து தரப்பு மக்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்திற்காக நிறுவப்பட்ட இந்த நித்யானந்த தியான பீடம், ஓர் பொது அறக்கட்டளை நிறுவனமாகும்.அது இந்து மத வழிபாட்டுத் தலம் மட்டும் அல்ல – ஒரு உலகளாவிய வழிபாட்டுத் தலம். அங்கு இருக்கும் தெய்வ மூர்த்திகளும் லிங்கங்களும், தியானம் மற்றும் யோக முகாம்களில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்டவை.  நட்சத்திர கற்சிலைகள் வைக்கப்பட்டிருந்த காரணமே தியான முகாமில் பங்கேற்பவர்கள் தங்களுக்குரிய நட்சத்திரங்களுக்கு அருகில் அமர்ந்து தியானம் செய்வதற்காகதான். அந்த வளாகத்தில் எந்தவித இந்து மத பூஜைகளும் நடைபெற்றதில்லை.

3. மேலும் அங்கு இருக்கும் சிலைகள் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டவை அல்ல. அந்த சிலைகள் எல்லாமே நுன்மையாக செதுக்கப்படுவதற்காகவும், இறுதி வேலைகள் முடிக்கப்பட்டு உலகம் முழுவதும் நிறுவப்பட்டிருக்கும் நித்யானந்த தியான மையங்களுக்கு அனுப்பப்படுவதற்காக ஒன்றாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன.

4. பொதுமக்கள், அங்கு ஸ்வாமி நித்யானந்தரின் சத்தங்கங்களைக் கேட்பதற்காகவும் அவரை ஒரு குருவாகக் கருதுவதால் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுச் செல்லவும் மட்டுமே வருகிறார்கள்.

5. பிற மத நம்பிக்கை உடையவர்களுக்கும்  பாரபட்சமின்றி தனது அனைத்து விதமான சேவைகளையும் நித்யானந்த தியானபீட டிரஸ்ட் செய்கிறது. அறக்கட்டளையின் நோக்கமான அன்னதானமும், இலவச மருத்தவமுகாமும் அங்கு வழக்கமாக நடைபெற்று வந்தன. இந்த இரு நிகழ்வுகளிலும், யார் வேண்டுமானாலும் ஜாதி மத இனம் என எந்தவித வேறுபாடும் இன்றி பாகுபாடுகளும் கட்டுப்பாடுகளும் இன்றி கலந்து கொள்கிறார்கள்.  இந்த பொது சேவை கூட இந்து அறநிலயத்துறையின் சட்டத்திற்குட்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.

6. வளாகத்தில் கொடிமரம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்து ஆகமப்படி, கொடிமரம் என்பது மரத்தால் செய்யப்பட்டு, தாமிரக்கவசம் பூட்டப்பட்டதாகவோ அல்லது தங்கமுலாம் பூசப்பட்டோ அல்லது பூசப்படாமலோ இருக்க வேண்டும். கொடிமரத்தில் பறக்கவிடப்படும் கொடியில் – அது சிவன் கோயிலாக இருந்தால் நந்தியும், விஷ்ணு கோயிலாக இருந்தால் கருடவாகனமும் பொறிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இந்த வளாகத்தில் இருக்கும் இரும்பு கொடிமரத்தில், வருடம் முழுவதும் நித்யானந்த தியானபீட கொடி மட்டுமே பறக்கவிடப்படுகிறது. இது கொடி மரம் அல்ல…கொடி கம்பம்.

7. அங்கு காட்டப்படும் ஆரத்தி புனிதமான அருணாச்சலமலைக்கு தவறாமல் காண்பிக்கப்படுவதாகும்.

8. ஹந்து மதம், புத்த மதம், ஜெயின மதம், கிருஸ்துவம், சொளராஸ்ட்ரிசம், ஜூடாயிஸம், சாவோ டாய்,பஹியா, கன்ப்பூயிஸம், தாவோயிஸம், இஸ்லாம், சின்டோ போன்ற மதங்களை சார்ந்த பரமஹம்ஸரின் பக்தர்களும் சீடர்களும் பரமஹம்ஸ நித்யானந்தரை வாழும் அவதார புருஷராக வழிபடுகிறார்கள். திருவண்ணணாமலை – பரமஹம்ஸ நித்யானந்தர் அவதரித்த ஸ்தலமாவதால், அங்கு அமையப்பெற்றிருக்கும் தியானபீட ஆஸ்ரமம் பரமஹம்ஸரின் அனைத்து பக்தர்களாலும் மிகவும் புணிதமாக உணரப்பட்டு வழிபடப்படும் தலமாகும்.

அவசரமாகவும், சரியான விசாரணை மேற்கொள்ளப்படாமலும், ஆய்வாராய்வுகளும் முழுமையாக செய்யப்படாத நிலையிலிருந்து இந்து அறநிலையத்துறையால் அளிக்கப்பட்டிருந்த அறிவிப்பில் இருந்த அனைத்து குறைகளும், விபரமாக இந்த ரிட் மனுவில் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *