நித்யானந்த குருகுலம்

நித்யானந்த குருகுலம்

[button link=”The URL of the button” variation=”red”]உங்களுடைய விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள்:[/button]

EnhanceYour Awareness

 

சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் வெளி வந்த செய்தியை படித்து அதிர்ந்து போனோம். பள்ளி மாணவர் தன் ஆசிரியையை பள்ளி வளாகத்திலேயே, அதுவும் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொன்றார் என்று. இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் நடைபெறுவதை கேட்கும் பொழுது, நம் தேசம் எதை நோக்கி போகின்றது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

சிலமாதங்களுக்கு முன்பு, தம்முடைய 14 வயது நிரம்பிய மகனை அழைத்துக்கொண்டு ஒரு பக்தர் என்னிடம் வந்திருந்தார்.

அவருடைய மகன், மற்றொரு பையனைக் கண்ணாடி துண்டினால் மோசமாகத் தாக்கியதற்காக,  அவனுடைய பள்ளியிலிருந்து வெளியேற்றப் பட்டிருந்தான்.

அவனிடம் நான் ஏன் அப்படிச் செய்தாய்?” என்று கேட்டேன். அதற்கு அந்தப் பையன் நான் சற்றும் எதிர்பார்க்காத பதிலைச் சொன்னான்.

எனக்கு மிகவும் போரடித்தது!” என்பதே அந்த பதில்.

உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? தன்னுடைய பதினான்கு வயதிலேயே தினசரி வாழ்க்கையில் உள்ள அனைத்து விஷயங்களும் அவனுக்குச் சலிப்பாய்ப் போனதால், அவன் வெளிப்படுத்துவதற்கு ஒரே ஒரு விஷயம்தான் இருந்தது – அது வன்முறை!

‘அதிகபட்சமான சலிப்படைதல்’ என்பது இன்றைய நாட்களில் ஒரு குணீஞுஞிடிச்டூ நோயாகிப் போய்விட்டது. ஒரு குழந்தைக்கு 5 வயது நிரம்பும்போதே, அதற்கு சலிப்பு என்னும் வார்த்தைக்குப் பொருள் தெரிந்துவிடுகிறது. இதன்மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?

அதாவது அவர்களுடைய 5 வயதிற்குள்ளேயே, உற்சாகம் தரக்கூடிய எல்லா விஷயங்களையும் பார்த்தாகிவிட்டது; செய்தும் முடித்துவிட்டாகிவிட்டது என்கிறார்கள்!

மனச்சோர்வு, பரபரப்பு, மன அழுத்தம் இவற்றோடு சலிப்படைதலும் நவீனகாலம் நமக்களித்துள்ள பரிசுகளில் ஒன்றாகிப்போனது. பணக்காரத்தனம் (Urban rich

), உயர்ந்த தர்க்க அறிவு இவற்றின் அடையாளமே ‘சலிப்படைதல்’.

சலிப்புடன் இருப்பதற்கு, வாழ்க்கையையே புறக்கணிக்கும் அளவிற்கு ஒரு அசாத்தியமான திறன் தேவைப்படுகிறது. சலிப்படைதல் என்பது உங்களது வாழ்க்கையை உணர்ச்சி அற்றதாக்கும் ஒரு மயக்க மருந்து! வாழ்க்கை என்பது உயிர்த்துடிப்போடு இருக்கவேண்டிய ஒன்று – அது, உங்கள் கண்களைத் திறந்து பார்க்கும்போது மட்டுமே சாத்தியப்படுகிறது.

ஆபத்தான நேரங்களில், கடிகாரமுட்கள் மெதுவாகச் சுழல்வதுபோல தோன்றுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

நீங்கள் தடுமாறிக் கீழே விழுந்திருந்தாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் விபத்து நிகழந்திருந்தாலோ, அதைப்பற்றி பின்னாளில் எப்போதாவது நினைத்துப் பார்க்கும்போது, அந்த நிகழ்வின் ஒவ்வொரு கணமும் Slow Motion

ல் ஒரு சினிமாப்படம் போல உங்கள் மனத்திற்குள் ஓடும்.

ஏனென்றால், அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் மொத்த விழிப்புணர்வு ஆற்றலையும் ஒன்று திரட்டியிருப்பீர்கள் அல்லது மொத்த விழிப்புணர்வு ஆற்றலுக்கும் அழைப்பு விடுத்திருப்பீர்கள். அந்தக் கணத்தில்தான் 100% கவனத்துடனும், அந்தக் கணத்தைப் பற்றிய விழிப்பிலும் இருந்திருப்பீர்கள்.

உண்மையில், அந்தக் கணத்தில்தான் நீங்கள்  வாழ்ந்திருக்கிறீர்கள்.

 

நீங்கள் முழுமையான உள்வாங்கும் நிலையில் இருக்கும்போதுதான், ஒவ்வொரு கணமும் ஏதோ ஒன்று புதிதாக, புத்துணர்வோடு, நிகழ்வதைக் காண்பீர்கள். நம்முடைய சாதாரண தினசரி வாழ்க்கையில், நாள்கள் வாரமாகவும், வாரங்கள் மாதமாகவும் நம் கவனத்திற்கு உட்படாமலேயே போய்கொண்டிருக்கும். ஆனால் வாரக் கடைசியில் விடுமுறைக்கு நீங்கள் செல்லும்போது, அந்த இரண்டு நாட்களும் எல்லையற்றதாய் நீண்டு கொண்டிருப்பதுபோல் தோன்றும்.

ஒவ்வொரு கணத்திலும் முழுமையான விழிப்போடு நீங்கள் வாழும்போது, வாழ்க்கையின் சாரத்தை அனுபவிப்பீர்கள். ஆனால் இப்போது நாம் இந்தச் சாரத்தைத் தூக்கி எறிந்து விட்டு, ஒவ்வொரு துளியையும், ஒவ்வொரு கணத்தையும் ரசித்து அனுபவிக்கத் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

உண்மை என்னவென்றால் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி எப்படிப் பார்ப்பது என்பது நமக்கு மறந்துவிட்டது. நம்முடைய சொந்த ஆசைகள், பழக்கவழக்கங்கள், பயங்கள் போன்றவற்றால் வர்ணம் பூசப்பட்ட கண்ணாடியின் மூலமாகத்தான் நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் பார்க்கிறோம்.

‘நிஜம்’ என்பதே நம்முடைய மனத்தின் உருவகம்தான் என்று குவாண்டம் – பிசிக்ஸ் சொல்கிறது. இதைத்தான் நம்முடைய பண்டைய ஞான குருமார்கள், மாயை என்றும் பொய்த்தோற்றம் என்றும் சொன்னார்கள். மாயை என்பது வேறு ஒன்றும் அல்ல, நம்முடைய பேராசையினாலும் பயத்தாலும் திரிக்கப்பட்ட நிஜமே!

உங்களது தினசரி வாழ்க்கைக்குள் விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள். அப்போது ஒவ்வொரு நாளும் ஒரு அற்புதம்போல தோன்றும். ‘சலிப்புத் தன்மை’ என்பது சக்திக் குறைபாட்டின் அடையாளம் அன்று; உங்களுக்குள்ளிருக்கும் சக்தியையும் திறன்களையும் பயன்படுத்துவதில் இருக்கும் குறைபாட்டின் அடையாளமே!

பிரபஞ்சமானது, எல்லையற்ற சக்தியை நமக்குப் பரிசாக தந்துள்ளது. ஆனால் நாம்தான் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் இருக்கிறோம். சக்தியை விழிப்புணர்வாக, படைப்பாற்றலாக, உருவாக்கும் திறனாக, அன்பாக உருமாற்றமடைய பயன்படுத்துவதில்லை.

உங்களது சக்தியைச் சரியான பாதையில் வடிவமைக்காமல் இருப்பது ஒரு பாவச்செயலாகும்! உங்களுக்குள் மிக அதிக அளவில் சக்தி சுழன்றுகொண்டே இருக்கிறது. அதைச் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? அந்தச் சக்தியைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், இப்போது அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் நேரடியாக மந்தத்தன்மையில் விழுந்து விடுவீர்கள்.

மந்தத்தன்மையைத் தொடர்ந்து மனச்சோர்வும் சலிப்புத்தன்மையும் உண்டாகிவிடும். குழந்தைகள் விளையாட்டுக்காக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள அது தூண்டுகோலாகிவிடும்.

சிறிது நேரத்திலேயே தங்களது விளையாட்டு பொருட்களால் குழந்தைகள் மட்டும் சலிப்படைவதில்லை. நாமும் எப்போதும் சலித்துக் கொள்கிறோம். ஆர்வத்துடன் பற்றிக்கொள்வதற்கு ஏதாவது புதிதாகக் கிடைக்காதா என்று புதுமையாக ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறோம்.

அதனால்தான் புதியதாக வணிகச்சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட வியாபார பொருட்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்தான். அந்தப் பொருளின் வெற்றியானது, சலிப்படைந்த மனிதர்களின் எண்ணிக்கை சதவிகிதத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது.

நாம் பொருள்களோடு மட்டும் அல்ல, மனிதர்களோடும் கூட விளையாடுகிறோம். ஏறக்குறைய எல்லோரும் ஒரே மாதிரியாகச் சோல்லும் ஒரு புகார் என்னவென்றால், அவர்களது குடும்பமும்  நண்பர்களும்தான் இந்த உலகிலேயே தங்களை மிகவும் சலிப்படைச் செபவர்கள் என்பதே!

நாம் புதிய மனிதர்களிடம் – புதிய நண்பர்கள், புதிய பக்கத்துவீட்டுகாரர்கள், புது க்ளப், புது ஆண் நண்பர் என்று எப்போதும் தாவிக்கொண்டே இருக்கிறோம்.

இப்போதெல்லாம் காரையும் பெண் நண்பரையும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டியது அவசியம் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். நாம் நம்முடைய சூழ்நிலை, நம்முடைய உறவு முறை என எல்லாவற்றிலுமே சலிப்படைந்து வருகிறோம். விளைவு, இறுதியில் நம்மிடமே சலிப்படைந்து விடுகிறோம்.

உண்மை என்னவென்றால், நமக்கு நாமேதான் அதிகமாகச் சலிப்பாக உணர்கிறோம். அதனால்தான் நம்முடன் நாமே தனியாக ஐந்து நிமிடங்கள்கூட செலவிடுவதில்லை. நாம் எந்த அளவிற்கு உற்சாகமற்றவராக இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு நாம் அச்சப்படுகிறோம். சமுதாயம் சார்ந்த நம்முடைய உறவுகள் எல்லாமே நம்மிடமிருந்து நாம் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு வழியே அன்றி, வேறு எதுவும் இல்லை.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை சலிப்பதில்லை; மனம்தான் சலித்துக் கொள்கிறது. மனம், உலகைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது. கண்ணாடியில் தூசு இருந்தால் உலகம் எப்படிப் புதியதாகத் தெரிய முடியும்? உங்களது மனமானது, உங்களை மந்தமானவராக, உணர்ச்சியற்றவராக மாற்றிவிடுகிறது.

எதை வேண்டுமானாலும் தன்னுடைய பழக்கமாக்கிக் கொள்வது மனத்தின் இயல்பு. நீங்கள் ஒன்றைப் பயன்படுத்தப் பழகிக்கொண்டுவிட்டால், அதனுடைய அருமையைப் பற்றி அக்கறைப்படுவதில்லை.

அதனால்தான் உங்களது தோட்டத்தில் பூத்திருக்கும் பூக்களை நீங்கள் இரண்டாவது முறை கூட பார்ப்பதில்லை. அந்த அளவிற்கு அவை உங்களுக்கு மதிப்பற்றதாகிவிடுகின்றன. அந்த அருமை உங்களுக்குப் புரிவதில்லை.  வெளியில் சந்தித்த வேறு ஒரு பெண்மனி அளவிற்கு, உங்கள் மனைவி ஆர்வத்துடன் கவனிக்கப்பட வேண்டியவராக உங்களுக்குத் தெரிவதில்லை.

இன்று புதிதாக ஒன்றைச் செய்ய முயற்சி செய்யுங்கள்; உங்களது தோட்டத்தில் உலாவுங்கள் அல்லது உங்களது தெருவில் நடந்து பாருங்கள். இதுவரை எத்தனை விஷயங்களைக் கவனிக்காமல் விட்டு இருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்.

எத்தனை செடிகளில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன? என்ன என்ன வண்ணங்களில் பூக்கள் மலர்ந்து இருக்கின்றன?

எத்தனை வீடுகளில் புதியதாக வண்ணம் அடித்துள்ளார்கள்?

என்ன என்ன ஓசைகளை நீங்கள் கேட்கிறீர்கள்?

நடக்கும்போது விழிப்போடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள். உங்களது உடலை வருடும் காற்றையும், முகத்தில் படும் சூரிய வெப்பத்தையும் விழிப்போடு உணருங்கள். முழு விழிப்புணர்வோடு நடந்து பாருங்கள்.

இத்தனை நாட்களாக எவ்வளவு விஷயங்களை இழந்து இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்! இந்த வாழ்க்கையே ஒரு உன்னதமான பரிசு. அதன் மதிப்பை உணராமல் அதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள்.

வாழ்க்கை எப்போதும் புதிதாகவும், மாற்றம் உடையதாகவும் இருக்கும்போது, உங்களுக்கு மட்டும் எப்படிச் சலிப்பு ஏற்பட முடியும்?

முழு விழிப்புணர்வோடு இருத்தல், முழு மனத்தோடு இருத்தல் என்பது ஒரு உன்னதமான தியான நுட்பம். இதை சிறுவயதிலிருந்தே நாம் நம் கல்வியோடு கற்க வேண்டும்.

முழு விழிப்புணர்வோடு வாழ சொல்லிதரப்பட வேண்டும்.

நீங்கள் வாழும்போது, நீங்கள் உங்கள் மனத்திற்கு பேச வாப்பளிப்பதில்லை. நிகழ்காலத்திற்குள் முழுமையாக நீங்கள் நுழையும்போது மனமானது  கடந்த காலத்தையோ எதிர்காலத்தையோ உங்களுக்குள் திணிக்க முடியாது. நினைவுகளோ திட்டங்களோ இல்லாமல், நிகழ்காலக் கணத்தில் விழிப்புணர்வோடு இருங்கள்.

வெறுமனே விழிப்புணர்வோடு இருந்தால் போதும், நீங்கள் மனம் – அற்ற அனுபவத்திற்குள் விழுந்து விடுவீர்கள்.

விழிப்புணர்வை அதிகரிக்கும்போது நீங்கள் ஞானமடைந்து விடலாம். நம்முடைய நித்யானந்த குருகுலத்தில் மிக உயர்ந்த விழிப்புணர்வில் குழந்தைகள் வளர்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கவனமாக கருத வேண்டும். இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் நல்ல மதிப்பெண் வாங்குகிறார்களா என்று பார்ப்பதைவிடவும், நல்ல மனிதர்களாக வாழ்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.

நித்யானந்த குருகுலம் உங்கள் குழந்தைகளை கடவுளாக வாழ வைக்கும்.முழு விழிப்புணர்வோடு வாழ சொல்லிதரப்படும் இடம் நித்யானந்த குருகுலம்.

admin

One thought on “நித்யானந்த குருகுலம்

  1. G.Selvavinaygam,Vridhachalam-606001

    Some Students mentally Disturbed by hard lessons. Parents don’t worry about their children. Their worries about their children will become a higher educator. Because the Students are going to immoral activities.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *