‘நித்யானந்த ஃபவுண்டேஷன்’ எனது நிறுவனம் அல்ல

‘நித்யானந்த  ஃபவுண்டேஷன்’ எனது நிறுவனம் அல்ல

அமெரிக்காவிலிருக்கும் நித்யானந்த ஃபவுண்டேஷன் நிறுவனம் மோசடி செய்கைகளில் ஈடுபட்டதாக ஆதன (real-estate agent) போபட் சாவ்லா என்பவரால் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமான பத்திரிகை செய்திகளுக்கு ஒரு நடுநிலையாளராக இருந்து, நித்யானந்த ஃபவுண்டேஷனுடன் நாங்கள் தொடர்பு கொண்டு தெரிந்து கொண்ட வழக்கு பற்றி செய்திகளையும், பரமஹம்ஸ நித்யானந்தரை அந்த வழக்குடன் இணைத்து பத்திரிகைகள் வெளியிட்ட தவறான செய்திகளுக்கு பரமஹம்ஸ நித்யானந்தர் அளித்திருந்த பதில்களையும் தொகுத்து உங்களுக்கு அளிக்கிறோம்.
நித்யானந்த ஃபவுண்டேஷனுடன் தொடர்பு கொண்டபொழுது அவர்கள் அளித்த தகவல்…

நித்யானந்த ஃபவுண்டேஷன், தங்கள் மீது சுமத்தப்பட்ட 10 குற்றச் சாட்டுகளுள் கீழ்கண்ட 9 குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்தது. அவற்றைப்பற்றிய விபரங்கள்…

தள்ளுபடி செய்யப்பட்ட 9 குற்றச்சாட்டுகள்:

1. ஒப்பந்தத்தை மீறுதல் (Breach of Contract)
2. ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பிட்ட செயல்பாடுகளைச் ((Specific Performance) செய்வது பற்றிய நீதிமன்ற ஆணையை மீறுதல்,
3.நில உரிமையாளர் பற்றி எழுப்பப்பட்டிருந்த (Quiet title),
4. சட்ட ரீதியான உரிமைகளை மறுக்க செய்யப்பட்ட (Civil conspiracy)
5.உணர்ச்சி ரீதியான துன்பத்தைக் கட்டாயப்படுத்தி அனுபவிக்கச் செய்தல் (Intentional Infliction of Emotional Distress)
6. சட்ட ரீதியாக உரிமையிருந்தாலும் சில முறையற்ற குறுக்கீடுளின் காரணமாக அந்த சொத்தை அனுபவிக்க கூடாது என்று வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை மீறுதல் (Constructive Trust)
7. நேர்மையற்ற வியாபார நடவடிக்கைகள் (Unfair Business Practices)
8 மற்றும் 9 . கிரிமினல் நோக்கத்திற்கும் சதிதிட்டத்திற்கும் உடன்போகுதல் (RICO and RICO
Conspiracy)
ஆகிய முக்கிய 9 குற்றச் சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

இது குறித்து பரமஹம்ஸ நித்யானந்தரிடம் கேட்டபொழுது அவர் அளித்த விளக்கம்…

நித்யானந்த ஃபவுண்டேஷனுடன் பரமஹம்ஸ நித்யானந்தர் தமக்கிருக்கும் தொடர்பை பற்றி விளக்கியிருப்பதாவது…

‘நித்யானந்த ஃபவுண்டேஷன்’ எனது நிறுவனம் அல்ல.
உலகளவில் இருக்கும் என்னுடைய லட்சக் கணக்கான பக்தர்களுள் ஒரு பக்தரால் நடத்தப்படும் நிறுவனம் அமெரிக்காவில் இருக்கும் இந்த நித்யானந்த ஃபவுண்டேஷன். இந்த நித்யானந்த ஃபவுண்டேஷனுடன் – எனக்கோ அல்லது நித்யானந்த தியானபீடத்திற்கோ எந்த தொடர்புமில்லை.

அறங்காவலராகவோ அல்லது கூட்டாளியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் நான் அந்த நிறுவனத்தினுடன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. நித்யானந்த ஃபவுண்டேஷன் நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை முழுமையாக பார்த்தீர்கள் என்றால்…அதில் மிகத் தெளிவாக என்னைப் பற்றி ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதை புரிந்து கொள்வீர்கள்.

புதிதாக துவங்கப்படும் வியாபாரம் வெற்றியடையவும் செழிப்படையவும் அந்த வியாரபாரத்திற்கு தமது இஷ்ட தெய்வத்தின் பெயரையோ அல்லது குருவின் பெயரையோ சூட்டுவது நம்முடைய பாரம்பரிய வழக்கம். அதன்படி 70 நாடுகளில் இருக்கும் எனது பக்தர்கள் எனது பெயரை தங்கள் வியாபாரத்திற்கும் நிறுவனத்திற்கும் பயன்படுத்தி இயக்கி வருகிறார்கள். எனது பெயரை அவர்கள் உபயோகிக்கிறார்கள் என்பதற்காக அவை அனைத்துமே என்னுடையதாகிவிடாது. இன்னும் சொல்லப்போனால் அதுபோன்ற பல நிறுவனங்களின் இருப்பைப்பற்றி எனக்கு தெரியாமலும் இருக்கலாம்.
என்னால் நடத்தப்பட்டு நான் பொறுப்பேற்கும் நிறுவனம் – நித்யானந்த தியானபீடம்.

‘நித்யானந்தா’ எனும் எனது பெயரை கொண்டு, எந்த நாட்டிலும் தாங்களே ஒரு நிறுவனம் துவங்கி, அதன்மூலமாக ஆன்மிகமோ அல்லது யோகமோ அல்லது தியானமோ கற்றுத் தரலாம் எனும் சுதந்திரம் இதுவரையிலும் எனது பக்தர்களுக்கு இருந்தது.

இனி எதிர்காலத்தில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாமல் தவிர்க்க, எனது பக்தர்களிடம், ‘இனி தாங்கள் துவங்க நினைக்கும் இயக்கத்திற்கு என்னுடைய பெயரை உபயோகிக்க வேண்டாம்,’என்று வேண்டுகோள் வைக்கப்படும்.
அதன் காரணமாக, இந்த மாதம் முதலே, என்னுடைய பெயரில் பக்தர்கள் நடத்தி வரும் இயக்கங்களை கலைத்திடவோ அல்லது தியானபீடம் எனும் ஒரு குடைக்குள் சட்டரீதியாகக் கொண்டுவரவோ வேண்டுகோள் வைக்கப்படும்” என்று பரமஹம்ஸ நித்யானந்தர் தெரிவித்திருந்தார்.

நித்யானந்த ஃபவுண்டேஷன் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் சிவில் வழக்குகளின் நிலைப்பற்றி கேட்கப்பட்டபொழுது அவர் அளித்த பதிலாவது, 10 குற்றச் சாட்டுகளில் 9 குற்றச் சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன என்று கேள்விப்பட்டேன். எஞ்சியிருக்கும் அந்த ஒரு குற்றச்சாட்டின்மீதும் நித்யானந்த ஃபவுண்டேஷன் மேல் முறையீடு செய்து எதிர்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கேள்வியுற்றேன்” என்று பதிலளித்துள்ளார்.

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *