பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவம் 

திருவண்ணாமயைில் டிசம்பர் 20,2011 அன்று நடைபெற்ற
பரமஹம்ஸ நித்யானந்தரின் 
35 வது அவதார பெருநாள் விழாவின் நிகழ்ச்சி தொகுப்பு

‘ஞான தபோதனர்களை வா‘ வென்று அழைக்கும் மலை திருவண்ணாமலை. அத்தகைய பழம் பெருமை கொண்ட திருவண்ணாமலையில் அவதரித்தவர் பரமஹம்ஸ நித்யானந்தர்.

 

அவதார புருஷர்கள் பூமிக்கு உடல் எடுத்து வருவது அபூர்வம். அவதார புருஷர்கள் அவதரித்த காலத்தில் வாழ்வதே பெறும் பாக்கியம்.

 

இப்போது நாம் வாழும் காலத்தில் நம்மிடையே தோன்றியிருக்கும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர்.

 

எல்லையற்ற பிரபஞ்ச சக்தி, ஆழ்ந்த கருணையினால் பூமிக்கு மனித உடல் எடுத்து வருவதுதான் ‘அவதாரம்‘ என்பது.

 

இந்த பூவுலகில் எத்தனையோ, மகான்கள், தவசிகள், ஞானிகள் அவதார புருஷர்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள். மனித இனமும், பூவுலகமும், ஜீவராசிகளும், ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு இவர்கள் உடல் சமைத்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் பரமஹம்ஸ நித்யானந்தர் மனித குலத்தின் நன்மைக்காக பல அளப்பரிய சத்தியங்களை, சக்திகளை, ஆற்றல்களை கொடுப்பதற்காக அவதரித்துள்ளார் .

 

உலகம் முழுவதும் நாத்திக நாராசத்தால் புரையோடி கிடக்கும் மக்கள் சமுதாயத்தை உள்முகமாகத் திருப்பி பார்கக் செய்து, உணர்வு நிலையை மேம்பட வைத்து விழிப்படைய செய்ய வந்தவர் பரமஹம்ஸ நித்யானந்தர்.

 

அவரின் 35வது அவதாரப் பெருநாள் விழா  (20.12.2011) திருவண்ணாமலையில் உலகம் முழுவதும் உள்ள மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் திருவண்ணாமலையில் வெல்லமென மக்கள் கூடி தங்கள் உள்ள கிளப்பையும் நன்றியையும் பரமஹம்ஸருக்கு தெரிவித்துக் கொண்டார்.

 

காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு அண்ணாமலையாருக்கு சிறப்பு அர்ச்சனைகளும் அபிசேகமும் நடத்தப்பட்டது. பின்னர் அருணகிரி யோகீஸ்வரர் மன்டபத்திற்கு முன்பு பரமஹம்ஸருடன் பக்தர்களும், சீடர்களும் குருகுல மாணவர்களும் அமர்ந்து குரு பூஜை செய்தனர்.

 

இதை தொடர்ந்து காலை 10 மணி  அளவில் பரமஹம்ஸர் தன் சீடர்களுடனும் பெருந்திரளான பக்தர்களுடனும் திருகோயில் வலம் வந்தார். அந்த ஊர்வலத்தில் பக்தர்கள் 1008 பால்குடம் ஏந்தி வந்தனர். மேலும், தீச்சட்டி ஏந்திவந்தும், முளைப்பாரி எடுத்து வந்தும், காவடி எடுத்து வந்தும் தங்கள் பக்தியை வெளிப்படுத்தினார்கள். அத்துடன் அளகு குத்தியும் விமான காவடி எடுத்தும், தங்கள் பக்தியை வெளிப்படுத்தினார்கள்.

 

காண்போரை நெகழ வைக்கும் இந்த பிரார்த்தனைகள் அனைத்தும் பாரம்பரியமானது மட்டுமல்லாமல், ஆதாரப்பூர்வமானது விஞ்ஞானப்பூர்வமானது.

1. அளகு குத்தல் என்பது அம்மனிதரின் குண்டலினி சக்தியை நேரடியாக விழிப்படைய செய்வது. இதனால் அவர்களின் உடல் நலமும் மன வளமும் மேம்படுகிறது. இதனால் மூலாதர சக்தி மையத்திலிருக்கும் சக்தி விழிப்படையும். அதனால் நினைவாற்றலும் புத்திக்கூர்மையும் மேம்படும்.

 

2. முளைப்பாரி எடுப்பது, படைப்பாற்றலின் வெளிப்பாடு. கண்ணுக்கு விருந்து, மனதிற்கு நிறைவு. இதுவும் மூலாதார சக்தியை விழிப்படைய செய்கிறது.

 

3. பக்திமிகுதியால் தீ சட்டி ஏந்தும் போது உயர்பயம் நீங்கி, மனம் கடந்த நிலைக்கு செல்லும்போது சுவாதிஸ்டான சக்கரம் விழிப்படைகிறது. இதனால் எல்லா பயங்களுக்கும் அடிப்படையான உயிர் பயமே நம்மை விட்டு நீங்கி விடுகிறது.

 

4. மனம்விட்டு, தெய்வ நாமங்களையும், குருவின் நாமத்தையும் சப்தமாக உச்சரிக்கும்போது, மணிப்பூரக சக்கரம் விழிப்படைகிறது. கவலைகள் நீங்கி மனம் லேசாகிறது.

 

5. பால் குடம் எடுத்தல் என்பது நம் உள்ளத்தூய்மையை பிரதிபலிக்கிறது. இதனால் மனம் விசாலம் பெற்று, அன்பு மேலோங்குகிறது. இதனால் அனாகத சக்கரம் விழிப்படைகிறது.

 

6. காவடி எடுத்தல் என்பது ஒப்பிட்டு பார்த்தலை நீக்குகிறது. வலிமையும், திறமையும் வெளிப்படுகிறது. இது விசுத்தியை விழிப்படைய செய்கிறது.

 

7. இது போன்ற பராம்பரியமிக்க கலைகளை, காரணமின்றி நம்முன்னோர்கள் வகுத்து வகைக்கவில்லை. இவை அனைத்தும் மூடப்பழக்கம் அல்ல. மூடி வைக்கப்பட்ட பழக்கம்.

 

இதை உணர்த்தவே அவதார புருஷர்கள் பூமிக்கு அவ்வப்போது வருகிறார்கள். அவர்கள் சொல்லும், ஞானகருத்துக்களை கடைப்பிடித்து வாழும் போது யோக உடலையும், வேத மனதையும் பெற்று, ஆனந்தமான வாழ்க்கையை வாழ வழி பெறுகிறோம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *