நித்யானந்தர்: அவதார நோக்கமும், இலக்கும்.

நித்யானந்தர்: அவதார நோக்கமும், இலக்கும்.

வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர்:
அவதார நோக்கமும், இலக்கும்.

 

மனித பிறப்பின் காரணத்தையும், குறிக்கோளையும் நிறைவேற்றிடும் பூரணத்துவத்திற்கான அறிவியலை அளித்து,
வாழ்விலிருக்கும் துயரத்திலிருந்து விடுவித்து,
உயர்த்திடும் புதிய உணர்வை எழச் செய்து
ஸம்பூர்த்தி, சிரத்தை, பொறுப்பெடுத்தல் மற்றும் வளப்படுத்துதல் எனும் கொள்கைகளின் மூலம் மேம்பட்ட வாழ்வை உருவாக்கிடும் ஆற்றலை பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்குகிறார்.

 

ஒவ்வொரு தனிமனிதருக்கும் அடிப்படைத் தேவைகளான உடல் நலம், மன நலம், பொருளாதார வளம், உறவுகளில் இனிமை, ஆனந்தம் ஆகிய ஐந்தையும் அளித்திடும் ஜீவன் முக்த அறிவியலை வழங்குவதையே நோக்கமாக கொண்டு இயங்கும் ஆன்மிக இயக்கம் – நித்யானந்த தியானபீடம்.

 

இந்து மதத்தின் மிகத் தொண்மையான தலைமை அமைப்பான மஹாநிர்வாணி பீடத்தின் மஹாமண்டலேஸ்வரராக பரமஹம்ஸ நித்யானந்தர் முடிசூட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 

பிரபஞ்சத்தின் தர்மமான சனாதன தர்மத்தை, மனிதர்களும் வாழும் தர்மமாக்கிடுவதே நித்யானந்த தியானபீடத்தின் முக்கியமானதும், முதன்மையான நோக்கமாகும். இந்ந அரிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஆற்றப்படும் சேவைகளில் சில:

 

1.            சனாதன தர்மத்தின் ஆணிவேரான வேதங்களிலும், புராணங்களிலும், உபநிடதங்களிலும் பொதிந்திருக்கும் பொக்கிஷங்களைப் பாமரரும் புரிந்துணர்ந்து தங்களை ஜீவன் முக்தராக உயர்த்திக் கொள்ளும் சத்தியங்களை பரமஹம்ஸ நித்யானந்தர் ஆற்றும் நித்ய சத்சங்கங்களின் மூலமாக  40 மேற்பட்ட நாடுகளிலிருந்து வீடியோ கான்பிரன்சிங் வழியாகவும், தொலைக்காட்சிகளின் வழியாகவும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் கேட்டு பயனடைகிறார்கள்.

2.            1 1/2 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்களை உணரும் விதத்தில் உண்மையை எடுத்துவந்து, அவர்களின் இயல்பான எல்லையற்ற ஆற்றல்களை வெளிப்படுத்தி வாழ்ந்திடும் வாழ்வியல் தத்துவங்களை பெற்றிருக்கிறார்கள்.

3.            மனிதர்கள் தங்களை பாவிகள் என்றும், அழியக்கூடியவர்கள் என்றும், பலவீனர்கள் என்றும் நினைக்கும் குறையான முதிர்ச்சியற்ற நினைப்பை நீக்கி, தங்களுடைய அளவற்ற ஆற்றல்களையும் அமரத்துவத்தையும் பலத்தையும் நினைவுபடுத்திட ஆற்றிய ஆன்மிக சொற்பொழிவுகள் இலவசமாக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. 2 கோடி பேர் இதுவரை பார்த்து பயனடைந்திருக்கிறார்கள்.

_MG_5050-10-6-13-20 IMG_0284 Nithyananda_Swami-2-9-13 (39)

2000த்திற்கும் மேற்பட்ட வீடியோவும், தமிழ் மற்றும் ஆங்கில மொழில் எழுதப்பெற்று 27 மொழிகளில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ள 250 மேற்பட்ட புத்தகங்களும், 600 க்கும் மேற்பட்ட தியான நுட்பங்களும், எண்ணற்ற கட்டுரைகளும் இலவசமாகப் பெற்று பல லட்சக்கணக்கானோர் பயனடைந்திருக்கிறார்கள்.

4.            மனிதர்கள் தெய்வமாகுவதற்கான ஆன்மிக சூழலை அளிப்பதையே நோக்கமாக கொண்டு உருவாக்கப்படும் வேத இந்து கோவில்கள் பல உலக நாடுகளெங்கும் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை 3720 விக்ரகங்கள் பிராணபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

5.            தெய்வ உணர்வில் வாழ்ந்திட வித்திடும் ஆஸ்ரமங்களும், கிளைகளும் ஆன்மிக ஆலோசனை மையங்களும் 150 திற்கும் மேற்பட்ட நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன. இதன்வழியாக 10,000 மேற்பட்டோருக்கு தினந்தோறும் அன்னதானமும், 9000 த்திற்கும் மேற்பட்ட தியானசிகிச்சையாளர்கள் மூலமாக 20,000 பேருக்கு தினந்தோறும் தியான சிகிச்சையும்,  மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் அளிக்கும் இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

6.            1000த்திற்கும் மேற்பட்ட தீகை்ஷ பெற்ற ஆசிரியர்கள் மூலமாக யோகா, தியானம், க்ரியைகள், ஆன்மிக அறிவியல்கள் மற்றும் வாழ்வியல் தீர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

7.            பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான பாடப் புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் மற்றும் பிற எழுது பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன, மேலும் கட்டிட வசதிகளுக்கும் உதவியளிக்கப்பட்டு வருகிறது.

8.            மகத்தான பிரபஞ்சத்தின் உண்மைகளை அறிந்து, உலகின் வளர்ச்சிக்காகவும், ஆன்மிகத்தின் வளர்ச்சிக்காகவும் ஜீவன் முக்த சமுதாயத்தை உருவாக்கவும் தன்னலமற்ற சேவை செய்யும் பொருட்டு பரமஹம்ஸ நித்யானந்தரிடம் தீகை்ஷ பெற்ற சன்யாசிகள் கோடிக்கணக்கான மக்களுக்கு நல்வாழ்வை அளித்து வருகிறார்கள்.

9.            பாரத்தாயின் குழந்தைகளை உலகை வளப்படுத்தும் தலைவர்களாக உருவாக்கும் பாடசாலைளே நித்யானந்த குருகுலம். குழந்தைகளுக்கு ஆன்மிக ஞானத்தை அனுபவப்பூர்வமாக அளித்து, நாட்டை வழிநடத்தும் தகுதிகளை கற்றுத் தந்து, அவர்களை ஆற்றல்மிக்கவர்களாகவும், இறை நம்பிக்கை உடையவர்களாகவும், பூரணத்துவ நிலையில் நிலைத்திருப்பவர்களாகவும் ஆக்குகிறது நித்யானந்த குருகுலம்.

10.          ஆனந்த யோகம்: தலைப்பட்ட யோகப் பயிற்சிகளின் மூலம் யோக உடலையும், அகத் தூய்மையடையந்த வேத மனத்தையும் அளிக்கும் வாழ்க்கை கல்வி அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. உணவும், தங்கும் இடமும் கல்வியும் (3 மாதம், 6 மாதம் மற்றும் 2 வருடங்கள்) இலவசமாக அளிக்கப்படுகின்றன.

11.          ஆனந்த சேவை: புதையல் போன்று தங்களுக்கு கிடைத்த ஆன்ம அனுபவங்கள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கோடு 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முழுநேர சேவை புரிந்து வருகிறார்கள்.

தொலைகாட்சிகளில்
பரமஹம்ஸ நித்யானந்தரின் நிகழ்ச்சிகள்…

 

நித்ய சத்சங்கம்:

பரமஹம்ஸ நித்யானந்தர் தினந்தோறும் வழங்கும் நித்ய சத்சங்கம்(காலை 8 மணி முதல் 9 மணி வரை) Tata sky , Airtel, Doordarsan , Dth தளத்தின் வழியாக Sadhna TV, Lotus News TV தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகிறது.

 

Zee Tv (Tamil): தினந்தோறும் காலை 6 மணி முதல் 6.30 மணி வரை

Janashri (Kannada): தினந்தோறும் காலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை

Ishwar (Hindi): தினந்தோறும் காலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை மற்றும் மாலை 7.30 முதல் 8.00 வரை

 

நித்ய தர்மம்:

தந்தி தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் பரமஹம்ஸ நித்யானந்தர்  நித்ய தர்மம் – ரியாலிட்டி ஷோ நிகழ்த்துகிறார்.

சனிக்கிழமை: இரவு 9 முதல் 10 வரை

மறுஒளிபரப்பு செய்யப்படும் நாட்கள்:

ஞாயிறு மற்றும் செவ்வாய்: மாலை 3.10 முதல் 4. 10 வரை

 

இந்நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற்று, உங்கள் பிரச்சனைகளுக்கு வாழும் அவதார புருஷர் அளிக்கும் தீர்வுகளை நேரடியாகப் பெறலாம். பங்கேற்கவும் பதிவு செய்யவும் இந்த எண்ணிற்கு அழைக்கலாம்…080  27279999

 

நைமித்திக ருத்ராபிஷேகம்:

ஈசனுக்கு உகந்த நாளாம் திங்கட்கிழமை அன்று காலை 6.00 முதல் 6.30 மணிவரை பரமஹம்ஸ நித்யானந்தர் நிகழ்த்தும் நைமித்திக ருத்ராபிஷேகத்தைக் கண்டு களிக்கலாம், நேரடியாக பிடதி ஆஸ்ரமத்திற்கு வந்தும் கலந்து கொள்ளலாம் Sadhna TV, Lotus News TV

தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகிறது. அடாத கர்மவினைகளையும் தம் கருணையால் நீக்கும் ருத்ரனின் அருள் பெற, இதில் பதிவு செய்து குடும்பத்தினருடன் பங்கு பெறலாம். வாழும் அவதார சக்தி உங்களுக்காக இந்த பூஜை செய்யும் அதன் புண்ணியம் உங்கள் தலைமுறையினருக்கும் சென்று சேரும்.

 

பரமஹம்ஸ நித்யானந்தரின் சன்யாச சீடர்கள் வழங்கும் நிகழ்ச்சிகள்:

 

Sadhna TV யில் இரவு 10.000 முதல் 10.40 வரை

Lotus News TV யில் இரவு 9.30 முதல் 10.30 வரை தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகிறது.

 

நித்யானந்த தியானபீடத்தின்  இணையதள தொலைக்காட்சி (24*7):

Nithyananda TV – LIVE

 

 

 

 

 

 

 

 

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *