ஆரோக்கியமான எதிர்காலம்

ஆரோக்கியமான எதிர்காலம்

[button link=”The URL of the button” variation=”red”]மனித குலத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் துரோகம்[/button]

The Great Conspiracy done against humanity

‘குழந்தைகளுக்கு துரதிர்ஷ்டவசமாக, சமூகத்தின் கொடுமையான சூழல் காரணமாக, உடல் மலர்ச்சி அடைகிற வயது குறைந்துகொண்டே வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் எட்டு வயதில் உடல் மலர்ச்சி நடக்கத் துவங்கிவிடுகிறது என்று மருத்துவர்கள் வேதனையோடு பகிர்ந்துகொண்டார்கள்.

 

அது சமூக ரீதியாகச் சரியாக இருக்கலாம். ஆனால், அது அவர்களுக்கு இழைக்கப்படும் பாவம். பாவம்கூட அல்ல, துரோகம்!

 

குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது.

உடல் மலர்ச்சி (Physical Maturity) ஆகிற வயது அதிகமாக ஆக, குழந்தைகள் ஆரோக்கியத்தோடும் ஆயுளோடும் உயர்ந்த மன அழுத்தம் இல்லாத, நரம்பு தளர்ச்சி அடையாத, ஸ்திரமான நரம்பு மண்டலத்தோடு வாழ்வார்கள்.

 

உடல் மலர்ச்சி நடக்கிற வயது, ஒரு காலத்தில் பதினெட்டு வயதாக இருந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறோம்.

 

என்னுடைய தவங்களை, சாதனைகளைப் பார்த்து சந்தோஷப்பட்டு, அதில் நான் தொடர்ந்து முன்னேற உத்வேகம் தந்தவர் ஒரு பெண் துறவி. அவருக்கு மாதாஜி விபுதானந்தபுரி தேவி என்று பெயர். அவர்கள், தங்களுடைய சிறுவயதில் செய்த சாதனைகளைப் பற்றியும், அடைந்த ஆன்மீக அனுபவத்தையும், என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.

 

சிறுவயதிலிருந்தே யோகம், தவம் செய்து வந்திருக்கிறார். மிகவும் சிரத்தையோடு தொடர்ந்து செய்து, இருபத்தி இரண்டு வயது வரை உடல் மலர்ச்சி ஆகவே இல்லையாம்.

 

அவர் பெரிய யோகி.

 

அவருடைய குடும்பத்தினர், அவருக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்பதற்காக, யோகம், தியானம் செய்வதை எல்லாம் நிறுத்தினார்களாம். அவரை யோகம் செய்யவிடாமல் தடுத்திருக்கிறார்கள்.

 

அதையெல்லாம் தடுத்தும், நான்கு வருடங்களுக்குப் பிறகுதான், உடல் மலர்ச்சி நிகழ்ந்ததாம்.

 

பதினெட்டு வயதில், யோகம் செய்வதை வீட்டிலிருந்தவர்கள் தடுத்திருக்கிறார்கள், நான்கு வருடங்களுக்கு பிறகு, இருபத்தி இரண்டு வயதில்தான் உடல் மலர்ச்சி நடந்ததாம்.

 

அதற்குப் பிறகுதான், இல்லற வாழ்க்கையிலேயே ஈடுபட்டு இருக்கிறார்கள். குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். கட்டாயப்படுத்தித்தான் திருமண வாழ்க்கையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்.

அவருடைய வாழ்விலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. ‘சூட்சுமமான உங்கள் உணர்வை மாற்றுவதன் மூலமாகவும், உடல் மலர்ச்சியையே தள்ளிப்போட முடியும். உடல் மலர்ச்சி நடந்தாலும், சக்தியைக் கீழே வராமல் அப்படியே மேலேயே எடுத்துக்கொண்டு போய் வைத்துவிட முடியும்.

சக்தி மேல்நோக்கி திரும்பி விட்டால், உடல் மலர்ச்சி நடந்தாலும், மனம் உடனடியாக இன்னொரு உடலைத் தேடாது. அதாவது, இன்னொரு உடலாலும், மனத்தாலும் அடையப்படும் ஆனந்தத்தைவிட, தனக்குள்ளேயே பொங்கும். உயர்ந்த ஆனந்தத்தில் உடலும் மனமும் இயங்கும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *