தியான சத்சங்கம்

தியான சத்சங்கம்

ஏன் ஊர் ஊராகச் சென்று தியான சத்சங்கங்கள் நடத்துகிறீர்கள்? 

                                                                                                                 – கருணா, மலேசியா

 

தியான சத்சங்கம் உங்களின் ஜீவன் விழிக்குமிடம். knowledge is free.

அதனால்தான் தியான சத்சங்கள் அனைத்தும் இலவசமாக நடத்தப்படுகின்றன.

விவேகானந்தர் ஒரு இடத்தில் மிக அழகாக விளக்குகிறார். மனிதனை நல்லவனாக இரு, ஆன்மீகவாதியாக மாறு. நல்ல விஷயங்களைக் கடைபிடி என்று சொல்வது மிகப் பெரிய தவறு,” என்று அவர் சொல்கிறார்.

அதெப்படி மிகப்பெரிய தவறாகலாம்?” என்று நீங்கள் நினைக்கலாம்.

விவேகானந்தர் விளக்குகிறார்.

மனிதனை நல்லவனாக மட்டும் இரு,

சத்தியத்தோடு இரு,

ஆன்மீகவாதியாக இரு,

என்று சொல்வது மிகவும் எளிது.

ஆனால், எப்படி நல்லவனாக இருப்பது என்று கற்றுக்கொடுப்பதுதான் கடினம்”

பொதுவாகவே, நாம் எல்லோரும் கோபத்தை அடக்குங்கள், அன்போடு இருங்கள்…, ஆன்மீகத்தோடு வாழுங்கள்..” என்கின்ற வார்த்தைகளை மீண்டும், மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமானதுபோல் தெரிவதே இல்லை.

மீண்டும், மீண்டும் இந்த வார்த்தைகளைக் கேட்டாலும், அந்த வார்த்தைகள் நடைமுறையில் ஏன் சாத்தியம் ஆகாமலே இருந்து கொண்டிருக்கின்றன?

காரணம், நாம் கேட்கின்ற வார்த்தைகள் வெறும் மூளை அளவில் மட்டுமே பாதிக்கின்றன. அவை வெறும் அறிவு அளவிற்கு மட்டுமே செல்கின்றன. அவை ஆழ்ந்து நமக்குள் செல்வது இல்லை. ஆழ்ந்து நமக்குள் படிவது இல்லை. வெறும் வார்த்தைகளை உள்வாங்கும் பொழுது, அவை நம் மூளையை மட்டும்தான் தொடுகின்றன. உணர்வைத் தொடுவது இல்லை.

அந்த வார்த்தைகள், உணர்வைத் தொட்டு, அனுபவமாக மாற்றுவதற்கான யுக்தி, அதற்கான முறையை அறிவிப்பதுதான் தியான சத்சங்கம்.

தியான சத்சங்கம், ஒரு சாதாரணமான சொற்பொழிவு அல்ல. பொதுவாக, நாம் ஒரு சொற்பொழிவிற்குச் சென்றுவிட்டு வெளியே வரும்போது, ஏற்கெனவே நம் தலையில் இருந்த செய்திகளையும், சுமைகளையும்விட, அதிகமான சுமைகளுடன் வெளியே வருவோம்.

பேச்சாளரின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு வருவதால்… ஏற்கெனவே, தலையில் இருக்கும் சுமையோடு, இன்னும் சிறிது சுமையையும் சேர்த்துக் கொண்டு வெளியே வருவோம்.

சொற்பொழிவு என்பது, உங்கள் தலைச்சுமையை, ஒரு விதத்தில் தலைக்கனத்தை அதிகரிக்கும் ஒரு நிகழ்ச்சி. தியான சத்சங்கம் என்பது, உங்கள் தலையில் இருக்கும் சுமையை இறக்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சி. இது உங்கள் தலையில் இருக்கும் கனத்தை இறக்கிவைக்கும் நிகழ்ச்சி.

உங்கள் தலைக்குள், மேலும் மேலும் வார்த்தைகளைத் திணிப்பதற்காகச் சத்சங்கம் நடத்தப்படவில்லை. உங்களுக்குள் இருக்கும் வார்த்தைகளைக் குறைத்து, உங்களுக்குள் இருக்கும் வார்த்தைகளை அனுபவமாக, அனுபூதியாக மாற்றுவதற்குத்தான் இந்தச் சத்சங்கங்களை நடத்துகிறோம்.

பொதுவாகவே, நாம் எல்லோரும் அனுபவத்தை நோக்கிப் பயணிப்பதாகவும், ஆன்மீக அனுபவம் நமக்கு வேண்டும் என்றும், நமக்கு நாமே ஒரு தவறான கற்பனையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நிஜ வாழ்க்கையில் நாம் ஆன்மீகத்தையும், ஆன்மீக அனுபவத்தையும் ஏற்றுக் கொள்வதே இல்லை. மேலோட்டமாக, ஆன்மீகம் சம்பந்தம் இல்லாத எந்தச் செயலை வேண்டுமானாலும் நாம் ஆன்மீகத்தின் பெயரால் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

உண்மையைச் சொல்லவேண்டுமானால், தமக்குள் ஒரு பெரிய மாற்றத்தை எடுத்துவரும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. தம்மை மாற்றிக்கொள்ள இயலாத தைரியமின்மையே, ஆன்மீகத்தைப் பார்த்ததும் பயமாக வெளிப்படுகிறது.

ஞானக் கருத்துகளும், தியான சக்தியும் சம விகிதத்தில் ஒன்று சேரும் போது மட்டுமே, அறிவு அனுபவமாகி, அனுபூதி நோக்கி அழைத்துச் செல்லப்படுவீர்கள். முக்தி சித்திக்கும்.

admin

6 thoughts on “தியான சத்சங்கம்

  1. ஸ்வாமிஜி , படித்தேன் !!!,உணர்ந்தேன் படி தேன் என உணர்ந்தேன்.!!!!!!! மலைத்தேன் !!! ஆம் அண்ணாமலை எனும் தேன் என்ற் உணர்வில் நிலைத்தேன் !!!! மகிழ்ந்தேன் !!!! அகமிக மகிழ்ந்தேன் !!!! தெரிந்தேன் !!! ஏன் இந்த வாழ்க்கை எனத் தெளிந்தேன் !!!!! மலர்ந்தேன் !!! புதிதாய் இன்று பிறந்தேன் !!!!!! சரணடைந்தேன் !!! தங்களின் திருவடிகளே சதமென்று எனை சமர்ப்பித்தேன் !!!! எடுத்தேன் !!! வேகம் எடுத்தேன் !!! விரித்தேன்!!! சிறகை விரித்தேன்!!!! அடைந்தேன் !!! ஞானம் ( சுவாமிகளிடம் சரணடைந்தேன் ) அடைந்தேன் !!!!!! கரைந்தேன் !!!! உன்னில் என்னைக் கரைத்தேன் !!!! நறுந்தேன் !!!! அய்யனே இது நறுந்தேன் !!!!

Leave a Reply to p.karthikeyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *