தியானம்

தியானம்

உங்களது வாழ்க்கையை நன்றாகப் பாருங்கள்!

The art of listening

 

ஒரு நாளில், எத்தனை மணிநேரம் நீங்கள் பேசுவதற்காகச் செலவிடுகிறீர்கள்?

எத்தனை மணிநேரம் கேட்பதற்காகச் செலவிடுகிறீர்கள்?

ஒரு நாளின் பெரும்பான்மையான நேரத்தில், ஒன்று, நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம் அல்லது பேச முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்! மக்கள் ஒரு குழுவாக ஒன்றுகூடும் சமயங்களில்,  அங்கிருக்கும் ஒவ்வொரு தனி மனிதருமே, அங்கு நடக்கும் உரையாடலில் தம்முடைய முழு ஆதிக்கம் இருக்க வேண்டுமென்பதின் தேவையை ஆழமாக உணர்கிறார்.

‘பேசுதல்’ என்பது சூழ்நிலையை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு வழிமுறையாகும். பெரும்பாலான மனிதர்கள், ‘பேசுதல்’ என்பதை தங்கள் அதிகாரத்தைப் புலப்படுத்தும் (அல்லது) நிலைநிறுத்தும் (அல்லது) உறுதிப்படுத்தும் ஒரு வழிமுறையாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை வார்த்தைகளால் மட்டும் அல்ல, அவர்கள் அதை எந்தவிதத்தில் சோல்கிறார்கள், எவ்வளவு நேரம் சோல்கிறார்கள், மற்றவர்களின் பேச்சை எந்தளவிற்கு அவர்களால் கட்டுப்படுத்த முடிகிறது என்பவற்றின் மூலமாகவும் புலப்படுத்துகிறார்கள். அவர்கள் மற்றவர்களின் பேச்சைக் கட்டுப்படுத்தும்போது, அவர்களைப் பார்த்து, ஒருவரை மிகவும் அவமானப்படுத்தும் சோல்லாகக் கருதப்படும், வாயை மூடு,” என்ற சோல்லைச் சோன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மற்றவர்கள் உங்களை பேசஅனுமதிக்கவில்லை என்றால் முக்கியமான ஏதோ ஒன்றை இழந்துவிட்டதைப் போன்று உணர்கிறீர்கள். ஏனென்றால் எல்லோருமே தங்களது கருத்துகளையும் எண்ணங்களையும் மற்றவர்மேல் வாந்தியெடுப்பதற்கு போட்டி போட்டுகொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும் கடன்வாங்கப்பட்ட கருத்துகளைக் கொண்டு,  ஒரு மொத்தச் சேமிப்புக் கிடங்கையே நமக்குள்ளே நாம் கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் அவற்றையெல்லாம் நம்மிடமிருந்து கேட்பதற்கு விரும்பும் ஒருவரை மிக அரிதாகதான் கிடைக்கப் பெறுகிறோம்.

சாப்பிடுகிறீர்கள், ஆனால் உங்களால் அந்த உணவை ஜீரணிக்கமுடியாமல் போகும் போது என்ன ஆகிறது? அதனை நீங்கள் வெளியில் வாந்தியெடுத்துத்தான் ஆகவேண்டும்.

அதே போன்று வேறு யாரோ ஒருவருடைய தத்துவங்களையும் கருத்துகளையும் நீங்கள் படிக்கும்போது, அது உங்களது சோந்த அனுபவமாக மாறாத பட்சத்தில், நீங்கள் அவற்றை ஜீரணிப்பதில்லை. விளைவு, அவற்றை மற்றவர்கள்மேல் வாந்தியெடுக்கிறீர்கள்.

‘பேசுதல்’ என்று நான் சோல்லும்போது, அது மற்றவர்களோடு பேசுவதை மட்டும் குறிக்கவில்லை. உங்களுக்குள் நீங்கள் பேசிக்கொள்வதையும் சேர்த்தே குறிக்கிறது. மற்றவர்களோடு நீங்கள் பேசாமல் இருக்கும்போதும், நீங்கள் உங்களுடனேயே பேச ஆரம்பித்து விடுகிறீர்கள். அது மிகவும் அபாயகரமானது. உண்மையில், நாம் விழித்துக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும், நாம் நம்முடனேயே பேசிக்கொண்டு இருக்கிறோம். நம்முடைய எல்லாத் திட்டங்களும் கவலைகளும் என்பது வேறொன்றுமில்லை நமக்குள்ளேயே பேசுவதைத் தவிர!

உங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வது என்பது வேறொன்றுமில்லை, உங்கள் உள் உரையாடல்தான், உங்களது மனதிற்குள்ளேயே தொடர்ந்து ஓடிக்கொண்டு, உங்களைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் உங்களது எண்ண ஓட்டங்கள்தான். வெளி உரையாடல்களிலாவது சற்று இடைவெளி கிடைக்கும். ஆனால் இந்த உள் உரையாடல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது உங்களைப் பைத்தியமாக்குகிறது. உண்மையில், பலசமயங்களில் உங்களது உள் உரையாடல்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு ஒரு வழியாகத்தான் நீங்கள் மற்றவர்களோடு உரையாடுகிறீர்கள். அதனால்தான் உலகம் முழுவதும் இவ்வளவு அதிக உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

இன்று உலகளாவிய அளவில், ‘கேட்டல்’ எனும் கலை மிகவும் அரிதாகிவிட்டது. ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே ‘பெர்னாட் ரஸல்’ என்பவர் எதிர்காலத்தில் ‘கேட்பது’ என்பது அதிக அளவு பணம் பெற்றுக்கொண்டு செயும் ஒரு வேலையாக இருக்கும் என்று கணித்துச் சொல்லியுள்ளார். அது இப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இன்று, முக்கியமாக மேலை நாடுகளில், ஒவ்வொரு மனிதரும் தமக்கென்று ஒரு ‘கேட்பாளரை’ வைத்துள்ளார்.

‘கேட்பாள’ருக்கு மக்கள் அதிக அளவு சம்பளம் தருகிறார்கள் – தங்கள் பிரச்சினைகளை அவர் தீர்க்கிறார் என்பதற்காக அல்ல, தங்கள் பேசியதை வெறுமனே அவர் கேட்கிறார் என்பதற்காக! ஏனென்றால் அங்கு கேட்பதற்கென்று யார் இருக்கிறார்கள்? இன்று, மற்றவர்களுக்குத் தங்கள் கவனத்தைத் தரவோ அல்லது மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதற்கோ யாருக்குமே நேரம் இருப்பதில்லை.

உங்களது கவனமே உங்களது சக்தி! உங்களுக்கே போதுமான அளவு சக்தி இல்லாதபோது, நீங்களே சக்திநிலையில் குறைந்து இருக்கும்போது, நீங்கள் எப்படி மற்றவர்களுக்குச் சக்தியைத் தருவீர்கள்? பெரும்பாலான நேரங்களில், மற்றவர்கள் உங்களிடம் பேசுவதை நீங்கள் கேட்பதுகூட இல்லை. மற்றவர்கள் பேசுவதை உங்களால் கேட்கமுடியுமானால், எல்லாநேரங்களிலும் உங்களைச் சுற்றி பலவும் சொல்லப்படுகின்றன என்பது உங்களுக்குப் புரியும்.

‘பேசுதல்’ என்பது எப்போதுமே வார்த்தைகள் மூலம்தான் நடக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். உண்மையில், நம்முடைய தகவல் பரிமாற்றத்தின் முக்கியமான பகுதிகள் பெரும்பாலும் வார்த்தைகள் அற்றதாகவே இருக்கின்றன.

உங்களது மனைவி காலையில் காபி கொண்டு வந்து தரும்போது, அவரைக் கவனியுங்கள். அவரது வார்த்தைகளை மட்டும் அல்ல, அவரது அசைவுகளையும் கேளுங்கள்.

கோப்பையை ‘டப்’ என்று வைக்கிறாரா?

அவர் உங்களிடம் என்ன சொல்ல முயல்கிறார்?

உங்களது வீட்டிற்கு விருந்தினர் வரும்போதெல்லாம் உங்கள் குழந்தை சத்தமாக ‘வீல்வீல்’ என்று கத்துகிறானா?

அவனது ஓசையைக் கேட்ககாதீர்கள், அவனது உடல் மொழியைக் கேளுங்கள். அவன், உங்களது நேரமும் கவனமும், அவனுக்குத் தேவை என்பதை உங்களுக்குச் சோல்ல முயற்சி செகிறான்.

‘வீல்வீல்’ என்று ஓசையிடுவதுதான், உங்களது கவனத்தைக் கவருவதற்கான இப்போதைய வழி.

அதற்கு இப்போது உங்களால் ஏதாவது செய்யமுடியுமா?

மற்றவர்கள் சோல்வதை நாம் கேட்காமல் இருக்கிறோம் என்பது மட்டும் அல்ல; இப்போது சோல்லுங்கள், உங்கள் குரலையே நீங்கள் கேட்கிறீர்களா? உதாரணமாக, உங்களது உடலின் மொழியை கேட்டிருக்கிறீர்களா?

விருந்துகளுக்குச் சென்று அதிக அளவு சாப்பிடும்போதும், குடிக்கும்போதும் உங்கள் உடல், போதும்,” என்று கத்துவது உங்களுக்குக் கேட்டதுண்டா? தொலைகாட்சிமுன் அமர்ந்து, இரவு வெகுநேரம் கண்விழித்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது உங்கள் உடல், போதும், எனக்கு ஓய்வு தேவை,” என்று சொல்லுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

உங்களது நோய்கள் எல்லாமே, உங்கள் உடல் உங்களது கவனத்தையும் அக்கறையும் கேட்டுப் பெறும் ஒரு வழிதானே தவிர வேறொன்றும் இல்லை. வேலையிலிருந்து திரும்பி வரும்போது உங்களது வீட்டுகக்தவுகளை அறைந்து மூடும்போது எழும் ‘படார்’ என்ற சப்தத்தைக் கேட்டிருக்கிறீர்களா? ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது அப்படித்தான் செய்கிறீர்களா? ‘படார்’ என்கிற சத்தமானது உங்களது வேலையை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைச் சொல்கிறது. அதனை எப்படி மாற்றப்போகிறீர்கள்? நீங்கள் அதைக் கேட்காவிடில், ஏதோ ஒன்று உங்களுக்குள் தவறாகப் போக்கொண்டிருக்கிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வீர்கள்.

நாம், ‘கேட்டல்’ எனும் மேன்மையான கலையையே மறந்துவிட்டோம். ‘கேட்டல்’ என்றால் யாரோ ஒருவர் பேசுவதை நாம் கேட்டுக் கொண்டிருப்பது அல்லது நம்மோடு நாமே பேசிக்கொண்டிருப்பது என்பது மட்டும் அல்ல; நமக்குள்ளும் நம்மைச்சுற்றியும் இருக்கும் அந்த அமைதியை, மௌனத்தைக் கேட்பதும்தான்.

நம்முடைய பேச்சுகள் அனைத்துமே நிசப்தம் என்னும் அழகான கடலின் மேல் எழும் அலைகளைப் போன்றதுதான். நீங்கள் எப்போதாவது அந்த நிசப்தத்தைக் கேட்டதுண்டா?

நிசப்தத்தைக் கேட்பதற்கான இடத்தையும் நேரத்தையும் உங்களது வாழ்க்கையில் உருவாக்குங்கள். ஒவ்வொரு நாளும் கொஞ்சநேரம் இதற்காகச் செலவிடுவதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.  உங்களது அமைதிக்குள் இயற்கை ஓசைகளுக்கு இடம் கொடுங்கள். அவற்றுக்கு வரவேற்பளியுங்கள்.

எதையுமே ‘கேட்கவேண்டுமே’ என்பதற்காகக் கேட்காமல், தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகக் கேளுங்கள். விழிப்புடன் இருங்கள். மௌனத்திற்காகத் திறந்த நிலையில் இருங்கள். மெனெத்தில்தான் நீங்கள் நிறைய கற்றுக்கொள்கிறீர்கள். உண்மையில், மௌனத்தில்தான் வாழ்க்கை, கவிதை, இயற்கை இவையனைத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதை வாழ்வில் கடைபிடிக்கும் ஒருவர் அபரிமிதமான சாதனைகளை புரிகிறார்.

Right Listening is God.

admin

3 thoughts on “தியானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *