தமிழக முதலமைச்சருக்கு நன்றி

தமிழக முதலமைச்சருக்கு நன்றி

இந்துக்களின் வாழ்க்கை லட்சியத்தை நிறைவேற்ற நிதியுதவி அளிக்கும் தமிழக முதலமைச்சருக்கு நன்றி.

இந்து மக்களின் வாழ்க்கையின் இலட்சியமான…
இந்துக்கள் ஒவ்வொருவரும், ஒருமுறையாவது, கைலாயம்-மானசரோவரம் மற்றும் முக்திநாத் போன்ற புண்ணிய திவ்விய ஸ்தலங்களுக்குச் சென்று பிறவியில்லா நிலையை அடைய வேண்டும் என்று தவம் இருக்கிறார்கள்.

[box_dark]புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வது அனைத்து மதங்களிலும் காலங் காலமாக கடைப்பிடிக்கப்படுகின்ற மரபு.
யாத்திரை செல்வது, ஏழை எளியோருக்கு இதுவரை எட்டாக் கனியாகவே இருந்தது.ஆனால் இந்துக்களுக்கு புனித யாத்திரை செல்வதற்கான பயணச் செலவை தமிழக அரசே மானியமாக அளித்து இதில் முன்னோடியாக செயல்படுகிறது.[/box_dark]

இந்தத் துணிச்சலான முடிவை தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்தமைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி மாண்புமிகு. ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நானும், மதுரை ஆதீனத்தின் 292ஆவது குருமகாசன்னிதானமும், நித்யானந்த தியானபீடமும், 151 நாடுகளில் உள்ள 1 கோடியே 20 லட்சம் பக்தர்களும் தமிழக முதல்வரின் முடிவைப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம்.

கோயில்களில் தினமும் அன்னதானம் மற்றும் கோயில் திருப்பணிகள் செய்தல் போன்ற நல்ல திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்.
– பரமஹம்ஸ நித்யானந்தர்

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *