மதத் தீவிரவாதம்

மதத் தீவிரவாதம்

[button link=”The URL of the button” variation=”red”]மதத் தாக்குதல்[/button]

            மதத் தீவிரவாதம் என்பது…  (சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம்)

தனிநபர்களுக்கு எதிராகவோ அல்லது சொத்துகளுக்கு எதிராகவோ… சட்டவிரோதமாக தங்கள் ஆற்றலைப் பயன்படுத்தியோ அல்லது வன்முறையைப் பயன்படுத்தியோ, ஒரு அரசாங்கத்தையோ அல்லது ஒரு மனித சமுதாயத்தையோ  மத, அரசியல், சமுதாய நோக்கங்களுக்காக அச்சுறுத்துவது அல்லது வேண்டுமென்றே பலவந்தமாய்த் தடுப்பதுதான் மதத் தீவிரவாதம்.

மேற்சொன்ன நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிமனிதர்கள் மதத் தீவிரவாதிகள் எனப்படுகிறார்கள்.

என்னை விமர்சிப்பவர்கள் தங்களுடைய சொத்துகளை ஏழை எளிய தமிழக மக்களின் நலனுக்காக எழுதி வைத்து அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்கத் தயாராக இருந்தால், நானும், என்னுடைய 1200 ஆசிரமவாசிகளும் சன்யாசிகளும் ஒன்றாகச் சேர்ந்து தியானபீடத்தையும், அதனுடைய எல்லாச் சொத்துகளையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு, உடுத்தியிருக்கும் துணியோடு வரத்தயார்.

– பரமஹம்ஸ நித்யானந்தர்

(19.07.2011 அன்று நடைபெற்ற சர்வதேச வீடியோ கான்பிரன்ஸில் விடுத்த சவால்)

நாங்கள் தயார்…நீங்கள் தயாரா?பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாக இருந்துகொண்டு நாத்திக மதத்தின் (சர்வ தேச சட்ட விவாதப்படி நாத்திகமும் ஒரு மதம்தான்) மடாதிபதியாக வலம் வரும் நாத்திகமதத் தலைவர்களே, மக்களுடைய சொத்துகளை உங்களுடைய சொத்துப்போல பாவித்து வாழ்ந்தது போதும். (ஏழை எளிய தமிழ் மக்களின் பல கோடி சொத்து). அதை மீண்டும் மக்களிடமே ஒப்படைத்துவிட்டு உடுத்திய உடையோடு தமிழ்நாட்டில் வலம்வர நீங்கள் தயாரா?

நீங்கள் எந்த வீதிக்கு வருகின்றீர்கள் என்று சொல்லுங்கள்…

எங்கள் குருநாதர் உங்களுக்கு முன் நீங்கள் வருகின்ற வீதியில் வந்து நிற்பார்.

நீங்கள் செய்திருக்கும் மதக்குற்றங்கள்… ஆதாரத்துடன்…

(According to Indian Law…The Fundamental Right to Freedom of Religion under Article 25 of the Constitution of India says the following…)

எந்தத் தவறும் செய்யாத அப்பழுக்கற்ற எங்களின் குருநாதரைப் பாலியல் குற்றவாளி என்று அபாண்டமாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இதுபோன்று சட்டபடி நீங்கள் எத்துணை மதக் குற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றீர்கள் என்பது உங்ளுக்குத் தெரியுமா?

நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் தெரியுமா?

மதத் தீவிரவாதம் (Religious Terrorism) செய்துகொண்டிருக்கிறீர்கள் .

பரமஹம்ஸ நித்யானந்தர் எங்கள் குரு. உலகெங்கிலும் கோடிக்கணக்கான பக்தர்களால் வழிபடப்படும் குருநாதர். பரமஹம்ஸ நித்யானந்தரை வேண்டுமென்றே நீங்கள் அவதூறு செய்திருப்பதும், அவமானப்படுத்தும் நோக்கத்தோடு விமர்சித்திருப்பதும் எங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.

[button link=”The URL of the button” variation=”red”]ஆதாரம் -1…[/button]

சட்டம் சொல்கிறது…

‘’… Right to freely profess, practice and propagate religion…”

 

எங்களுடைய சட்ட சுதந்திரம்:

நாங்கள் நம்பும் ஆன்மீகப் பயிற்சிகளை தியான பீடங்களுக்குச்

சென்று செய்வதற்கான சுதந்திரம் உண்டு.

 

நீங்கள் செய்த மதக் குற்றம் (சட்டப்படி):

 

பல ஊர்களிலும், மடங்கள், தியானபீடங்கள் என்று அமைத்து, அதில் சினிமா நடிகைகள், வாழ்க்கையில் விரக்தி அடைந்து மணவிலக்கு பெற்ற பெண்கள், விதவைகள், குடும்பப்பெண்கள் முதலிய பலருடன் யோகா, தியானம் என்பவற்றைக் காட்டி அவர்களின் கற்பையும் சூறையாடி சுகபோக வாழ்க்கை நடத்தியுள்ளது அம்பலமாகி உள்ளது” என்று விடுதலை பத்திரிக்கையிலும், தமிழ் ஓவியா இணையத்திலும் 31.03.2010 அன்று அவதூறாகச் சொல்லி நாங்கள் செய்யும் பயிற்சிகளைக் களங்கப்படுத்தி மாபெரும் மதக் குற்றத்தைச் செய்திருக்கின்றீர்கள்.

 

தியான பீடத்தில் நீங்கள் கற்பனை செய்வது போன்ற எந்த செயல்களும் நடைபெறுவதே இல்லை.

 

உங்களுக்கு நன்றாகத் தெரியும்…

 

தமிழகத்தில் மட்டும் தியானபீடத்தின் ஆறு லட்சம் பெண் பக்தர்கள் இருக்கிறார்கள்.  அவர்களை நேரிடையாக இழிவு செய்ததினால் IPC 354  (Outraging the modesty of women )

எனும் குற்றம் செய்ததற்கான தண்டனை பெறுவதற்குத் தகுதியுடையவராகின்றீர்கள்.

 

[button link=”The URL of the button” variation=”red”]ஆதாரம் -2…[/button]

சட்டம் சொல்கிறது…

‘’…Every religious denomination shall have the right to Own and acquire movable and immovable property…”

 

எங்களுடைய சட்ட சுதந்திரம்:

தியான பீடத்திற்கு என்று அசையும் மற்றும் அசையாச் சொத்துகளை வாங்குவதற்கும், சொந்தமாக்கிக் கொள்வதற்கும் சட்டத்திலேயே இடமிருக்கிறது. உரிமையும் இருக்கிறது.

நீங்கள் செய்த மதக்குற்றம் (சட்டப்படி):

தியானபீடத்திற்கு 5000 கோடி சொத்துகள் இருக்கிறது என்று ஆதாரமில்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்.  முதலில் தியானபீடத்திற்கு 5000 கோடி சொத்துகள் இல்லை.  கர்நாடக அரசினால் நிறுவப்பட்ட வருமானவரித்துறை தியானபீடத்தின் சொத்துகளை விலாவாரியாக ஆராய்ந்துவிட்டு ‘கணக்குகள் துல்லியமாக’ இருக்கின்றன என்று சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். தியானபீடத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு சொத்துகளை முடக்கி அரசுடமையாக்க வேண்டும் என்று இந்நிலையில் நீங்கள் பொறுப்பில்லாமல் சொல்லியிருப்பது எங்களுடைய மதத்தைப் பரப்புவதற்குத் தடையாகவும், தடுப்பதாகவும் இருக்கிறது.  இது எங்கள் மத சுதந்திரத்தை அழிக்கிறது.

[button link=”The URL of the button” variation=”red”]ஆதாரம் -3…[/button]

சட்டம் சொல்கிறது…

 

‘’…Every religious denomination shall have right to establish and maintain institutions for religious and charitable purposes…”

எங்களுடைய சுதந்திரம்:

சமுதாயத்திற்குச் சேவையாற்றுவதற்காகவும், ஆன்மீக சேவையாற்றுவதற்காகவும் நித்யானந்த தியானபீடம் பரமஹம்ஸ நித்யானந்தரால் நிறுவப்பெற்றது.  தியானபீடம் அதன் நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

 

நீங்கள் செய்த மதக் குற்றம் (சட்டப்படி):

 

தியானபீடத்தை மக்களுக்காகப்  பயன்படுத்தாமல் பரமஹம்ஸ நித்யானந்தர் தன் சுகபோக வாழ்க்கைக்காகப் பயன்படுத்துகிறார் என்று எங்கள் இயக்கத்தையும், இயக்கத்தின் நிறுவனரையும் விமர்சித்திருக்கின்றீர்கள். (ஆதாரம் 31.03.2010 – விடுதலை பத்திரிக்கை மற்றும் தமிழ் ஓவியா இணையதளம்). இதன்மூலம் பரமஹம்ஸரின் கோடிக்கணக்கான  பக்தர்களின் மத உணர்வுகளை நீங்கள் சிதைத்திருக்கின்றீர்கள்.

 

[button link=”The URL of the button” variation=”red”]ஆதாரம் -4…[/button]

சட்டம் சொல்கிறது…

 

‘’…Every religious denominations shall have the right to manage its own affairs in matters of religion…”

எங்களுடைய சட்ட சுதந்திரம்:

 

தியான பீடத்திற்குத் தன்னுடைய உயர்ந்த ஆன்மீகக் கொள்கைகளை (மனிதர்களை ஜீவன் முக்தர்களாக ஆக்குவது) நடைமுறைபடுத்துவதற்கு முழு உரிமை உள்ளது.

 

நீங்கள் செய்த மதக் குற்றம் (சட்டப்படி):

 

சாமியார் தொழிலை தடுத்து நிறுத்த வேண்டும்,” என்று விமர்சித்து, ஒட்டுமொத்தமாக எங்கள் மதத்தையே  கொச்சைப்படுத்தியிருக்கின்றீர்கள்.

உங்களிடம் வெளிப்படையாக நாங்கள் கேட்க விரும்பும் கேள்விகள்…

நீங்கள் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஏதாவது ஒரு ஆதாரமாவது உங்களிடம் இருக்கின்றதா?

எதை வைத்து இவ்வளவு தூரம் எங்கள் மத உரிமைகளையும், உணர்வுகளையும் அழிக்கின்றீர்கள்?

சட்டத்தில் அதற்கு இடமில்லை எனும்போது யார் உங்களுக்கு அந்த உரிமையைத் தந்தது?

ஏன் வேண்டுமென்றே எங்கள் மதத்தை இழிவு செய்து மதக் கலவரத்தைத் தூண்டுகிறீர்கள்?

மதக் குற்றவாளியான நீங்கள் கோடிக்கணக்கான பரமஹம்ஸ நித்யானந்தரின் பக்தர்களுக்குப் பொறுப்பான பதில் சொல்லியே தீர வேண்டும்.

பத்திமான்களும், அரசர்களும் தங்கள் குடிமக்கள் பக்தியுணர்வில் வளர்ந்து ஞானநிலையை அடையவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு ஒவ்வொரு ஊரிலும் திருக்கோயில்களைக் கட்டினார்கள். அந்தக் கோயிலினால் பயனடைந்த பக்தர்கள், அந்தக் கோயிலுக்கு அளிக்கும் நன்கொடைகளையும், கோயிலின் சொத்துகளையும் அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று போர்க்கொடி தூக்குகின்றீர்களே…

உங்களிடம் ஒன்றை தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறோம்…நாத்திக மதத்தின் தலைவராக இருக்கும் நீங்கள் சாதாரண மடங்களை விடவும் அதிகமான சொத்துகளை வைத்துள்ளீர்கள். பொதுமக்களுக்கான தொடர் சேவைகளாக மாறாமல் இருக்கும் உங்களுடைய மதத்தின் தேங்கிப்போன சொத்துகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல்வேலை.

உங்களுடைய  நாத்திக மடத்தின் சொத்துகளை உங்களின் கொள்கைபடியே தமிழக மக்களின் சேவைக்காக எழுதி வையுங்கள் அல்லது அரசாங்கத்திடம் ஒப்படையுங்கள்.

நீங்கள் முன் மாதிரியாக இருந்தால்தானே நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்பார்கள். பொதுமக்களுக்கு உபயோகப்படாமல் உங்களால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் சொத்துகளை ஒப்படையுங்கள்.

அவ்வாறு நீங்கள் செய்யும் பட்சத்தில், உங்கள் சார்பாக நாங்களே பாதயாத்திரையாகச் சென்று ஒவ்வொரு மடாதிபதியையும் நேரில் சந்தித்து உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற சொல்லிப் போராடுவோம்.

சொன்னதைச் செய்வோம்!செய்வதைச் சொல்வோம்!! இவையே உங்களின் தாரக மந்திரங்கள். இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்தாலே போதும்.தமிழக மக்கள் பெருமூச்சு விடுவார்கள். நாங்களும் நிம்மமதியாய் இருப்போம்.

admin

2 thoughts on “மதத் தீவிரவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *