சோலைக் கண்ணனின் கீழ்த்தரமான கற்பனை

சோலைக் கண்ணனின் கீழ்த்தரமான கற்பனை


சோலைக் கண்ணனின் பொய்க் குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகளின் மறுபக்கம்

மதுரை ஆதீனத்தின் ஆக்கப்புர்வமான செயல்களை தடுத்து நிறுத்தி, அதன் இயக்கத்தை முடக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியினால், மிகவும் விரும்பத்தகாத, ஆதாரமற்ற முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளை திரு. சோலைக்கண்ணன் அவர்கள் குருமகாசன்னிதானங்களின் மீது சுமத்தியிருக்கிறார் (மனு எண்: CRMP 2682 – 2012).

அவர் சாட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதற்கான ஆதாரங்கள்…

ஆதாரம் 1:
மே 12, 2012 அன்று மாலை 6 மணி அளவில், சோலைக்கண்ணன் இரண்டு நண்பர்களுடன் மதுரை ஆதீனத்திற்கு வந்ததாகச் சொல்கிறார்.
இது முதல் பொய். அவர் மதுரை ஆதீனத்திற்குள் நுழையக்கூட இல்லை. இது ஒன்றே இவர் சொன்ன எல்லாக் குற்றச்சாட்டுகளும் பொய் என்பதை நிரூபிக்கிறது.

ஆதாரம் 2:
மதுரை ஆதீனத்தில், ஓவ்வொரு நாளும் மாலை வேளை 7.00 மணி அளவில் ஆரத்தி நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல நிகழ்ந்த ஆரத்தி நிகழ்ச்சியில், பரமஹம்ஸர் முழுமையாக கலந்து கொண்டு பக்தர்களுக்கு திருநீறு அளித்து ஆசி வழங்கினார். (அதற்கான புகைப்பட ஆதாரங்களும், வீடியோ ஆதாரங்களும் உள்ளன.)
இந்த ஆதாரங்களிலிருந்து, இறைவழிபாடு நடைபெற்றபொழுது நடந்ததாக சோலைக்கண்ணன் சொன்ன குற்றச்சாட்டுகளான, யானை தந்தம் வைக்கப்பட்டது, புலித்தோல் விரிக்கப்பட்டது, தவறான செயல்கள் நடைபெற்றது என்ற பொய்க் குற்றச்சாட்டுகள் அவரின் கீழ்த்தரமான கற்பனையையே வௌிப்படுத்துகின்றன.

ஆதாரம் 3:
பக்தர்களுக்கு அன்னதானம் மட்டும்தான் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு, பரிசுத்த நீர் என்ற பெயரில் மதுரை ஆதீனத்தின் பாரம்பரியத்தில் எதுவும் இதுவரை வழங்கப்பட்டதில்லை, அன்னதானம் மட்டும்தான் வழங்கப்படுகிறது.

ஆதாரம் 4:
திருவாசகப் பாடல்களை ஆங்கிலப் பாடல்கள் என்பதா?
மதுரை ஆதீனத்திற்குள் திருஞானசம்பத்தரின் திருநீற்றுப்பதிகம் மட்டுமே இசைக்கப்படுகிறது. சுத்தமான தமிழ்ப் பாடலை ஆங்கிலப் பாடல் என்று சொல்லும் அளவிற்கு சுத்த செவிடர்களாகிவிட்டார்களா?

ஆதாரம் 5:
திருமதி. ரஞ்சிதா வரவில்லை.
மே 12, 2012 அன்று திருமதி. ரஞ்சிதா அவர்கள் மதுரை ஆதீனத்திற்கு வரவில்லை. அவர் திருநங்கைகளுடன் வந்திருந்தார் என்று சொல்லியிருப்பது சுத்தப் பொய்.

ஆதாரம் 6:
மே 12, 2012 அன்று பரமஹம்ஸர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்:

காலை 7 வழ 9.30: தியான சத்சங்கம்
மதியம்: அகில இந்திய மராத்திய மக்கள் சங்க நிர்வாகிகளுடன் சந்திப்பு, பரார்த்த புஜை
மாலை 4 மணி : நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களுடனான சந்திப்பு
மாலை 6 வழ 7 : பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
மாலை 7 வழ 7.30 : ஆரத்தி
மாலை 7.30 வழ 8.00 : பக்தர்களுக்கு திருநீறு வழங்கி ஆசீர்வாதம் அளித்தார்.

ஆதாரம் 7:
ஜூன் 6, 2012 அன்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி ஏ.ஆர்.வி. ரவி அவர்களால் சோலைக்கண்ணனின் இதே குற்றச்சாட்டுகள் அடங்கிய மனு தள்ளுபடி செய்யப்பட்டு, இந்த மனுவை விசாரணைக்காக காவல்துறைக்கு அனுப்பத் தேவையில்லை. இது வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாக இருக்கிறது என்று தீர்ப்பளித்திருந்தார். (அதன் படிவம் இணைக்கப்பட்டுள்ளது)
அந்தத் தீர்ப்பை மறைத்து மீண்டும் மற்றொரு இடத்தில் இதே வழக்கை பதிவு செய்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். இது சோலைக்கண்ணனின் குற்றச்சாட்டுகளின் பொய்யானது என்பதை சட்ட ரீதியாகவும் உணர்த்துகிறது.

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *