சீரகாபாடி ஆஸ்ரமம் தியானபீடத்தைச் சார்ந்தது

சீரகாபாடி ஆஸ்ரமம் தியானபீடத்தைச் சார்ந்தது

சீரகாபாடி ஆஸ்ரமம் தியானபீடத்தைச் சார்ந்தது

 – சட்டரீதியான விளக்கம்

 உண்மையில் நில அபகரிப்பு வழக்கு குணசேகரன்மீது அவருடைய மகள்களால் தொடுக்கப்பட்டது. நித்யானந்த தியானபீடத்தின் மீது அல்ல.

 

சீரகாபாடியில் வசிக்கும் குணசேகரன் என்பவரின் நிலத்தை நித்யானந்த தியானபீடம் அபகரித்துக் கொண்டதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டன.

இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு.

கீழ் உள்ள விளக்கங்கள் அதைப்பற்றி தெளிவாக தெரிவிக்கின்றன.

1. சீரகாபாடியில் வசிக்கும் குணசேகரன் அவர்கள் நித்யானந்த தியானபீடத்திற்கு நில ஒப்பாவணை மூலம் 1.12.2006 ஆண்டு நிலத்தை கிரயம் செய்து முறையாக விற்பனை செய்தார். குணசேகர் மற்றும் அவரது மனைவி திருமதி. விஜயா அவர்கள் இருவருமே கிரயப்பத்திரத்தில் கையெழுத்திட்டுத் தந்தார்கள். சட்டரீதியாக நிலம் நித்யானந்த தியானபீடத்தால் பெறப்பட்டது.

குணசேகர் அவர்களின் சகோதரி-பெயர்:  விஜயா கருப்பன்னண் அவர்களால் சாட்சி கையெழுத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. இந்த நிலத்தை கிரயம் செய்த பொழுது குணசேகரும், அவருடைய மனைவியும் சேர்ந்து தங்களுடைய மகள்களின் (மைனர் குழந்தைகள்) நிலப்பகுதியையும் சேர்த்து விற்பனை ஒப்பாவணை மூலம் தியானபீடத்திற்கு விற்பனை செய்திருக்கிறார்கள்.

3. 2010 ஆண்டு மேஜரான குணசேகரின் மகள்கள், தங்கள் பகுதி நிலம் தங்கள் பெற்றோர்களால் விற்பனை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

4. 2010 ஆண்டிலிருந்து இந்த சிவில் வழக்கு நடைபெற்று வருகிறது.

5. குணசேகர் மற்றும் அவர் மனைவிமீது அவர்களுடைய பெண்கள் தொடுத்த சிவில் வழக்கில் ஒரு பிரதிவாதியாக நித்யானந்த தியானபீடத்தின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

குணசேகரன் தம் மீது இருக்கும் சிவில் வழக்கை மறைத்து ஜூலை 2011-ல் நித்யானந்த தியானபீடம் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு சுமத்தினார்.

உடனடியாக இந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நில வழக்கு சம்பந்தப்பட்ட உண்மை விளக்கத்தை அளித்திடவும் சீரகாபாடி பக்தர்கள் முடிவு செய்து, சீரகாபாடி ஆஸ்ரம பொறுப்பாளர்களான சென்னாகிருஷ்ணன், செல்வக்குமார், செல்வம், சக்திவேல் ஆகியோர் ஆகஸ்ட் 1-2011 அன்று குணசேகரன் அளித்த பொய் குற்றச்சாட்டிற்காக குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சீரகப்பாடி பொறுப்பாளர்களின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு (எண்: 3047691), புகாராகப் பதிவு செய்யப்பட்டது. (எண்: 241/11) ( ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது)

சீரகாபாடி பொறுப்பாளர்கள் தங்களின் புகாரை

1. மாண்புமிகு முதல்வரின் தனிப்பிரிவு

2. உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்-சேலம்

3. உயர்திரு. காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்-சேலம்

4. உயர்திரு. காவல்துறை ஆய்வாளர் அவர்கள்-ஆட்டையாம்பட்டி, சேலம் மாவட்டம்

ஆகியோருக்கும் சென்று அளித்தார்கள்.

குணசேகரன் தங்கள் மீதிருக்கும் குடும்ப வழக்கை – நித்யானந்த தியானபீடத்தின் மீதான நில அபகரிப்பு வழக்காக கெட்ட நோக்குடன் இப்பொழுது திசை திருப்பியிருக்கிறார்.

குணசேகரன் அவர்கள் சொல்வது எல்லாமே பொய் என்பதை நித்யானந்த தியானபீடத்திடம் இருக்கும் சட்டரீதியான நியாயமான எல்லா நிலப்பத்திரங்களும் ஆவணங்களும் நிரூபிக்கும்.

 

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *