குண்டலினி சக்தி – மனித மூளை

குண்டலினி சக்தி – மனித மூளை

[box_dark]

மூளைக்குச் செலுத்தப்படும் சக்தி அதிகரிக்க அதிகரிக்க மனச்சோர்வு குறைகிறது. உங்களுடைய சக்தியின் அளவு அதிகரித்து உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை மீட்டெடுக்கிறீர்கள்.”
– Biofeed back, Training by Eternal management.

மனித மூளை, நம் உடலின் எடையில் 2% க்கும் குறைவாக இருந்தாலும், தான் இயங்குவதற்காக மட்டும் அது உடலிலிருந்து குறைந்தது 20% சக்தியை உபயோகிக்கிறது.
-Drubach, Daniel…Brain Explained :Newjersey : prentice – Hall – 2000

குண்டலினி சக்தியை மனித உடலில் எழுப்புவதின் மூலமாக மூளையின் செயல்பாட்டிலும் மேம்பாட்டை ஏற்படுத்த முடியும். இதை விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கும் பட்சத்தில் பெருவாரியான மக்களுக்கும் பயன்படும்.எல்லோராலும் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியும். உடலும், மனமும், ஆன்ம உணர்வும் மேம்படும்.”[/box_dark]

நம்முடைய மூளையில் இரண்டு பாகங்கள் உள்ளன.

ஒன்று : இயந்திரமாக இயங்கும் பகுதி (Mechanical parts of Brain)

இரண்டாவது : இயந்திரமாக இயங்காத பகுதி (Non mechanical parts of Brain)

 

மூளையின் இயந்திரமாக இயங்கும் பகுதிதான்,நம்முடைய சாதாரண தினசரி வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான இயக்கங்களையும் மற்றும் இதயம், நுரையீரல்,சிறுநீரகம் போன்ற உடலின் முக்கியமான பாகங்கள் இயங்குவதற்குத் தேவையான இயக்கங்களையும் இயக்குகிறது.

நம்முடைய மூளையில் இந்த பாகம் மட்டும்தான் விழிப்படைந்திருக்கிறது. இந்த சாதாரண இயக்கத்தைத் தாண்டி நம் மூளை இயங்காததால் நம் வாழ்க்கையும் சாதாரணமாக இருக்கிறது.

அசாதரணமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் இயந்திரமாக இயங்காத (Non mechanical parts of Brain) இயங்க வேண்டும்.

1955-ஆம் ஆண்டில் ஐன்ஸ்டினின் மூளையை ஆராய்ச்சி செய்வதற்காகப் பாதுகாப்பாக பத்திரப்படுத்தினார்கள்.

பல ஆண்டுகள் கழித்து அவர்கள் செய்த  அந்த ஆராய்ச்சியில் கண்டுப்பிடித்தவை:

ஐன்ஸ்டினின் மூளைக்கு அதிகமான சக்தி தேவைபட்டது என்றும், அவரின் மூளை உடலின் சக்தியில் அதிகமான  அளவு சக்தியை உபயோகத்திருந்தது என்றும் கண்டுபிடித்தார்கள்.

மேலும் ஐன்ஸ்டினின் மூளையில் நியூரான்கள் அதிகமாகவும் அடர்த்தியாகவும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.

ஐன்ஸ்டினின் கணக்கிடும் ஆற்றலும் (Mathematical abilities), காரணங்களை ஆராய்ச்சி செய்யும் தன்மையும் (Spatial Reasoning)

சராசரி மனித மூளையின் இயக்கத்தை விடவும் 15 % அதிகமாக இருந்ததற்கு முதன்மையான காரணம் மூளையில் இருக்கும் செல்களுக்கு மத்தியில் இருந்த ஒருங்கிணைப்பு அதிகமாக இருந்ததுதான்.

செல்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பு சரியான முறையில் இயங்கியதால் திறமையாக மூளையும் இயங்கியது.”

– The British Medical Journal, The Lancet June 19,1999

 

இவை எல்லாமே மூளையின் ‡ Non Mechanical Parts அவருக்குள் சிறப்பாக இயங்கியதால் ஏற்பட்ட நற்பலன்கள், நல் ஆற்றல்களாகும்.

மூளையின் இயக்கம் இவ்வளவு தூரம் முக்கியத்தவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதனால் அதற்குத் தேவையான சக்தியை அளிப்பதும் இன்றியமையாததாக இருக்கிறது..

சாதராண மனிதருக்குள் தீகை்ஷயால் குண்டலினி சக்தி உயிர்ப்பிக்கப்படும் பொழுது அவருடைய மூளையின் ‡ Non Mechanical Parts

இயங்கத் துவங்கும்.

நம்முடைய மூளையின் சூட்‘மமான நரம்பு மண்டலத்தின் (Subtle Nerve System) இயக்கத்தை நாம் நவீன அறிவியல் கண்டுப்பிடிப்புகள் உதவியுடன் கண்டறிய முடியும்.  அதனை ஆங்கிலத்தில் ‡ Nuero feed back  என்று சொல்வோம்.

இம்முறையில் மூளை அலைகளின் (Brain Wave Activity) அறிய, தலைக்கு மேல் எலக்ட்ரோடுகள் (Electrode) பொருத்தப்படும். எலக்ட்ரோடுகள் உணரும் அலைவரிசைகளை நேரடியாகக் கணினிக்குள் செலுத்தி விடுவார்கள்.  கணினி, அந்த அலைவரிசைகளை அதன் திரையில் அலைகளாகக் (Wave) காண்பிக்கும்.

அலைகளின் அதிர்வெண்ணையும் (Frequency) , கதிர்வீச்சையும் (Amplitude) கணக்கிட்டு, அந்த நபர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைக் கண்டறிவார்கள்.

இவ்வகையான விஞ்ஞானப்பூர்வமான கருவிகளின் உபயோகமும் அறிவியலும் தற்பொழுது பெருமளவில் தேவைப்படுபவையாக இருக்கின்றன.

நம்முடைய மூளைதான் உடலின் பிரதான மந்திரி. மூளை எடுக்கும் முடிவுகளைத்தான் உடலின் மற்ற எல்லாப் பாகங்களும் செயல்படுத்தும்.

உறங்கும்பொழுதும் மூளை இயங்கிக்கொண்டே இருக்கும். மூளை, தான் இயங்குவதற்கு எப்போதும் சக்தியைச் செலவழித்துக்கொண்டே இருப்பதால் அதற்குத் தேவையான சக்தி தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். மூளைக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் சோர்வடைந்தால் (Memory loss) , குழப்பம், எரிச்சல், சோர்வு, மந்தத்தன்மை, மன அழுத்தம் போன்றவை உருவாகும் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.அமெரிக்காவின் ராணுவத் துறையிலும் விண்வெளித்துறையிலும் (NASA) இந்த அறிவியலைத்தான் (Bio feed back, Nuero feed back) பயன்படுத்துகிறார்கள்.

இந்த அறிவியலின் உதவியோடு மூளையில் நடைபெறும் மாற்றங்களை வைத்து தங்களுடைய பயிற்சிகளின் தன்மைகளை முடிவு செய்கிறார்கள்.

Fortune 500 கம்பெனி, sportstar  போன்ற புகழ்பெற்ற கம்பெனிகளும் இந்த அறிவியலைப் பயன்படுத்துகின்றன.

 

 

tamil

One thought on “குண்டலினி சக்தி – மனித மூளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *