உத்தமர்களாக மாற்றும் சக்தி

உத்தமர்களாக மாற்றும் சக்தி

பிறக்கும் பொழுது ஒருவர் எல்லா ஆற்றல்களுடனும் தான் பிறக்கிறார். ஒருவருக்கு எவ்வளவு விரைவாக மேம்பட்ட சூழலில் கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக அவர் தம்முடைய முழுத் திறனையும் வெளிப்படுத்தத் தொடங்குகிறார்.

உத்தமர்களாக வளர்வதற்கு மேம்பட்ட சூழலும், சரியான ஊக்குவிப்பும் அவசியம்.

ஆனந்த யோகம் இந்த இரண்டினையும் வழங்குகிறது.

எந்தக் கல்வியாக இருந்தாலும் சரி, அது, நுண்ணறிவுத்திறன்(Intellectual Quotient), உள எழுச்சித் திறன்(Emotional Quotient)மற்றும் மெய்யறிவுத்திறன் (Spiritual Quotient) ஆகிய மூன்றையும் ஒருங்கே சமநிலையில் உருவாக்க வல்லதாக இருக்க வேண்டும்.

ஆனால் தற்போதைய கல்வி முறைகள், வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான செல்வத்தை ஈட்டுவதற்குத் தேவையான நுண்ணறிவுத் திறனை  மட்டும் வளர்ப்பதாக இருக்கிறது.

மேலும் நம்முடைய பண்பாட்டை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் தராததாக இருப்பதும் வேதனையைத் தருகிறது. மன ஆற்றலை வளர்த்து அறிவுத் திறனை விரிவடையச் செய்யக்கூடிய கல்விதான் இப்போது நமக்குத் தேவை.

[box_dark]ஒரு மனிதனை, தன்னைத்தானே தாங்குபவனாகவும், தன் சொந்தக் கால்களில் தலை நிமர்ந்து நிற்கும் ஆன்ம நலம் மிக்கவனாகவும் செய்யவல்ல கல்விதான் இன்றைய தேவை என்று அன்று விவேகானந்தர் சொன்னார். இன்றைய தேவையும் அதுதான்.[/box_dark]

[quote]ஆன்மீகம் சார்ந்த கல்விதான் இன்றைய காலத்தின் உடனடி தேவை.[/quote]

எப்பேர்ப்பட்டவர்களையும் உத்தமர்களாக மாற்றும் சக்திதான் ஆன்மீகம்.

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *