ஆஸ்ரமம்

ஆஸ்ரமம்

 

[button link=”The URL of the button” variation=”red”]ஆஸ்ரமம்[/button]

 

ஆஸ்ரமம் என்பது ஒரு வாழும் ஞான குருவின் வழிகாட்டுதலாலும், தூய நேர்த்தியான அமைப்பாலும் உருவாக்கப்படும் ஒரு சக்திக் களம்!

ஆஸ்ரமத்தின் ஒவ்வொரு இடத்திலுமே, ஞான குருவின் ஆனந்த சக்தியை நம்மால் உணரமுடிகின்றது. அதுமட்டுமல்லாமல், சீடர்களும் பக்தர்களும் தொடர்ந்து பல மணி நேரம் ஆன்மீகப் பயிற்சிகள் செய்வதால், அவர்களுள் மலரும் ஆனந்த சக்தியையும் நம்மால் உணரமுடிகின்றது.

நீங்கள் இதற்குமுன் எப்போதுமே தியானம் செய்திருக்காவிட்டாலும்கூட, ஆன்மீகத் தேடுதலுடைய மனநிலை இல்லாதவராக இருந்தாலும்கூட, ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தவுடன், அங்கிருக்கும் ஆழ்ந்த விழிப்புணர்வுடன் உங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு, உங்களுக்கு நீண்ட ஆவதில்லை.

நித்யானந்த தியான சங்கத்தின் தலைமைப் பீடமாக விளங்குவதால், ஆன்மீக நுட்பங்களையும் பயிற்சிகளையும் ஞான குருவிடமிருந்து நேரடியாகவே கற்றுக்கொள்ளும் ஒரு இடமாகவும் விளங்குகிறது.

 

பலர், வகுப்புகளில் கலந்துகொள்வதற்காகவோ அல்லது சில மணி நேரம், ஆஸ்ரமத்தில் உள்ள ஆலமரத்தின் அடியிலும், ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி ஸமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரர் ஆலயத்திலும், வைத்திய ஸரோவரில் உள்ள ஆனந்த லிங்கத்தின் அருகிலும் அமர்ந்து, தங்கள் நேரத்தை ஆன்மீக உயர்வுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காகவோ வருகின்றனர்.

இந்த எல்லா இடங்களும், தினமும் அமர்ந்து தியானம் செய்வதற்கான இடங்களாகவும், அதே சமயத்தில், வெறுமனே அமைதியாக அமர்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆஸ்ரமம் என்றால் ‘அக விழிப்பு’ அடைவதற்கான ஒரு இடம் என்று பொருள். மக்கள் வகுப்புகளில் கலந்துகொள்ள வந்தாலும்சரி, ஞானகுருவின் ஸாந்நித்தியத்தில் இருப்பதற்காக வந்தாலும்சரி, அவர்களுக்குள் ‘அக விழிப்பு’ உண்டாகிறது.

21 அடி உயர லிங்கம் : (குணமளிக்கும் வைத்ய ஸரோவரம்)

நீங்கள் ஆஸ்ரமத்திற்குள் நுழைந்ததும் உங்களை வரவேற்கும் விதமாக உங்கள் கண்களில் முதலில் தென்படுவது 21 அடி ஆனந்த லிங்கம்தான்.  இது மிகவும் புனிதம் வாயந்த மருத்துவ குணம் கொண்ட 1008 மூலிகைகளாலும் நவபாஷாணத்தாலும் வடிவமைக்கப்பட்ட ஆனந்த லிங்கமாகும்.

நீருற்றுகள் மூலம் ஆனந்த லிங்கத்தின் மேல் பொழியப்படும் நீரானது, குணமளிக்கும் தீர்த்தமாக, லிங்கத்தைச் சுற்றி வைத்திய ஸரோவரில் தேக்கி வைக்கப்படுகிறது.  ஆனந்த லிங்கமும், வைத்யஸரோவரும் குணமளிக்கும் ஆற்றலைப் பரப்புவதற்கென்றே, வாழும் அவதார புருஷரால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன.  வாழும் அவதார புருஷரால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆனந்த லிங்கம், பிரபஞ்ச சக்தியின் செயல்படும்தன்மை மற்றும் செயலற்ற தன்மைகளுக்கு அடையாளமாகத் திகழ்கிறது.

இந்தத் தீர்த்தத்தில் புனித நீராடும்போது, இந்தத் தீர்த்தமானது உங்கள் மனத்திற்குப் புத்துயிரூட்டி, உங்கள் உடலிலுள்ள முக்கியமான ஆற்றல்களைச் சமப்படுத்தி,  உங்களுக்குள் அமைதியான ஒரு ஆன்மீக உருமாற்றத்தைக் கொண்டு வருகிறது.

 

ஆலமரம்¦

பரமஹம்ஸ நித்யானந்தர், தம் அகக் காட்சியில் கண்ட அந்த ஆலமரத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு பல மாதங்கள் ஆயின.  கண்டுபிடித்தபின் 2003 ஆண்டு இந்த ஆஸ்ரமம் நிறுவப்பட்டது.  இப்போது இந்தப் புனிதமான ஆலமரம்தான் ஆஸ்ரமத்தின் ஆன்மீக வழிகாட்டியாக கருதப்படுகிறது.

ஒரு பெரிய குடைபோல் விரிந்து கவிழ்ந்திருக்கும் இந்த ஆலமரத்தின் நிழலில்தான், அமைதியின் மூலமாகத் தம் சீடர்களுக்கு ஆழமான ஆன்மீக சத்தியங்களைப் போதித்த ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.  ஆன்மீக அதிர்வலைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற ஒரு இடமாக இந்த ஆலமரம் திகழ்கிறது.

பல வருடங்களாக இந்த இடம், ஆன்மீக தியான சிகிச்சைக்காகவும், நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மைக்காகவும், ஒரு ஆன்மீகத் தெளிவைக் கொடுக்கும் காரணத்திற்காகவும் உலகெங்கிலுமிருந்து பல மக்களையும், ஆன்மீகத் தேடுதல் உள்ளவர்களையும் தன்னகத்தே ஈர்க்கும் இயல்பு கொண்டதாக இருக்கிறது.

இந்த இடத்தில் அதிர்வலைகள் அசாதரணமானவையாகவும் தெளிவாக உணர்ந்து கொள்ளக் கூடியவகையிலும் இருப்பதை, முதன்முறையாக வரும் பார்வையாளர்களும் உணரமுடியும்.

பரமஹம்ஸ நித்யானந்தர், தம்முடைய நாளைத் தொடங்குவதே, இந்த ஆலமரத்தைத் தரிசித்து வணங்கியபிறகுதான்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *