ஆரோக்கியம்

ஆரோக்கியம்

[button link=”The URL of the button” variation=”red”]ஆரோக்கியம் என்றால் என்ன?[/button]

இந்தக் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில், நோய்களே இல்லாத நிலைதான் ஆரோக்கியம்  என்பதாகும்.

இந்தக் கருத்து முழுக்க முழுக்க ஆரோக்கியத்திற்கு எதிரானது, தவறானது.

ஒரு சிறிய உதாரணம் சொன்னால் எளிதாக இதைப் புரிந்துகொள்ள முடியும்.

பணக்காரர் யார்?”  என்று கேட்டால் கடன்களே இல்லாதவர்,” என்று பதில் சொன்னால், எவ்வளவு அபத்தமாயிருக்கும்?

ஒரு கூலித் தொழிலாளி கடன்களே இல்லாமல் இருக்கலாம்.  உடனே அவரைப் பணக்காரர் என்று சொல்ல முடியுமா?

ஒரு தொழிலதிபர் நிறைய வங்கிக் கடன்களை வைத்திருப்பார். கடன்கள் இருப்பதால் இவரை ஏழை என்று சொல்ல முடியுமா?

பணக்காரர் என்பதற்கு எது அளவுகோல்….?

ஆரோக்கியம் என்பதற்கு எது அளவுகோல்…?

ஆரோக்கியத்தின் அளவீடாக நோய்கள் இருக்கிறதா? இல்லையா? என்பதை மட்டும் வைத்து முடிவு செய்யவே  முடியாது.

ஆரோக்கியம் என்பது ரம்மியமான அகஉணர்வு சம்பந்தப்பட்டது. மனிதனை சதா உற்சாகமாக வைத்திருக்கும் உள்ளத்தின் உற்சாக உணர்வு சம்பந்தப்பட்டது.

குழந்தைகளைப் பாருங்கள்! எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள்!

குழந்தை, ஞானி இருவரின் முகத்திலிருக்கும் மலர்ச்சியே அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களென்று சாட்சி சொல்லும்.

நம்மிடமிருந்த ரம்மியமான இந்த சுகஉணர்வு என்று குறைய ஆரம்பிக்கிறதோ அன்றே ஆரோக்கியம் மறைந்து விடுகிறது.

உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். மலர்ச்சி எவ்வளவு குறைந்து போயிருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆரோக்கியம் குறைந்து போய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் என்பது திடீரென வரக்கூடிய ஒன்றல்ல.  பல நாள் ஆரோக்கியக் கேட்டின் விளைவே ஒருநாள் நோயாக வெளிப்படும்.

சுகஉணர்வு என்றோ குன்றிப் போனதின் இன்றைய வெளிப்பாடுதான், நோய்.

தியானத்தின் மிக முக்கியமான செயல், நாம் இழந்து விட்ட சுகஉணர்வை மீட்டுத் தருவதே..

தொடர்ந்து தியானத்தைச் செய்து வர உடலில் உள்ளத்தில் உற்சாக உணர்வு அதிகமாக ஆரம்பிக்கும்.

உடலில் இருக்கும் நச்சுக்களெல்லாம் சிரத்தையோடு செய்யப்படும் தியானத்தால் உடலை விட்டு வெளியேறிவிடும். நச்சுக்கள் அகன்றால், உள்ளுக்குள் இருக்கும் உற்சாகம் முழுமையாக வெளிப்படும்.  ஆரோக்கியம்  கிடைத்துவிடும்.

admin

2 thoughts on “ஆரோக்கியம்

  1. Nithyanandam !

    I witnessed the happiness by comparing my son’s face to our Sath Guru’s face. I found the truth.

  2. ஆரோக்கியம் என்று நாம் வைத்திருக்கும் கருத்து எவ்வளவு தப்பு என்று இந்த கட்டுரையை படித்த உடன் அறிந்து கொண்டேன். மிகவும் பயன்மிக்க கட்டுரை.
    மலரடி பதங்களில் நன்றி சமர்பிக்கிறேன் சுவாமிஜி.

    நித்ய பிரியா ஹர்ஷிதா.
    மலேசியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *