ஆன்மீக அறிவியல்

ஆன்மீக அறிவியல்

[button link=”The URL of the button” variation=”red”]காமசூத்திரமா? பிரம்ம சூத்திரமா?[/button]
குருவே முடிவு செய்வார்.
Kama Sutra or Brahma Sutra – Guru will decide

அப்பொழுதெல்லாம் ரிஷிமார்கள், குருமார்கள் மிக அழகாய், குருகுலத்திற்கு வந்திருக்கும் குழந்தைகளுடைய மனத்தைப் படித்துவிடுவார்கள்.
உடல் மலர்ச்சி ஆன உடனே, அந்தக் குழந்தை இன்னொரு ஆணையோ, பெண்ணையோ பார்க்கும் பொழுது, அந்தக் குழந்தையின் கண்களில் ஏற்படுகிற விரிவை வைத்தே, மனவோட்டத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.
உடல் ரீதியான மனவோட்டம் இருந்தால் சமூகத்திற்குக் கட்டுப்பட்டு, அவர்களால் உடல் ரீதியாக நெருங்கிப் போகமுடியாது. ஆனால், ஒரு ஆணையோ, ஒரு பெண்ணையோ பார்க்கும்போது, கண்ணுக்குள்ளே ஏற்படும் விரிவு அந்த ஏக்கத்தைத் தெளிவாகக் காண்பித்து விடும். கண்ணிலே அந்த உணர்வு வெளிப்பட்டு விடும். உடலால் மறைக்க முடிவதை, உணர்வால் மறைக்க முடியாது.
உடல் மலர்ச்சிக்குப் பின் உணர்வும் சக்தியும் சேர்ந்து கீழே இறங்கி வந்திருந்தால், உடனடியாக ஒரு ஆணையோ, பெண்ணையோ உடல் தேட ஆரம்பித்து விடும். வெளியே ஒரு துணையைத் தேடத் துவங்கிவிடும்.
உணர்வும், சக்தியும் கீழே இறங்கி வரவில்லையென்றால், இன்னொரு துணையே தேவைப்படாது. இன்னொரு துணையைத் தேட ஆரம்பித்திருக்கும் உணர்வாக இருந்தால், அந்த மாணவர்கள் இல்லற வாழ்க்கைக்குத் தேவையான காம சூத்திரம் படிக்கத் துவங்குவார்கள்.
உண்மையான இல்லற அறிவியலைக் கற்பார்கள். வெளியுலகிலிருந்து ஒரு துணைத் தேவைப்படுகிற உணர்வும் சக்தியும் உடையவர்களுக்கு, இல்லற வாழ்க்கையே பாதையாக வகுத்துத் தரப்படுகிறது.
இன்னொரு துணையே தேவைப் படாத மாணவர்களாக இருந்தால் பிரம்மசூத்திரம் படிப்பார்கள். ஞானத்திற்குள் ஆழ்ந்து போகத் தயாராவார்கள்.
இதிலிருந்து எப்படிச் சில குழந்தைகள் இன்னொரு துணையைத் தேடாத உணர்விலும், சில குழந்தைகள் இன்னொரு நபரைத் தேடுகிற உணர்விலும் இருக்கிறார்கள் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
ஏழிலிருந்து பதினான்கு வயது வரை, காயத்ரி மந்திரத்தை ஆழ்ந்து தியானிக்கும் பொழுது, முதல் அனுபவம் நடந்து விட்டால், ஆன்ம அனுபவம் நடந்துவிட்டால், அந்தக் குழந்தை உடல் மலர்ச்சி அடைந்திருந்தாலும், மன ரீதியாக இன்னொரு துணையைத் தேடுவதில்லை.
இயற்கையாக அவர்களுடைய உடல் வளருமே தவிர, உணர்வு வேறோரு துணையைத் தேடாது.
அவர்கள் புளியம் ஓடு போன்று ஒன்றுக்கொன்று பாதிப்படையாத உணர்வோடு இருப்பார்கள். எப்படிப் புளியம்பழமும் ஓடும் ஒன்றுக்குள்ளே ஒன்று இருந்தாலும், எப்படி ஒன்றுக்கொன்று தொடாமல் இருக்கிறதோ அது போல், அந்த உடலும் உணர்வும் ஒன்றுக்குள்ளே ஒன்று இருந்தாலும், ஒன்றால் ஒன்று பாதிக்காதது போல, சுதந்திரமாக உயர்ந்த நிலையிலேயே இருக்கும்.
புளியம் பழமும் ஓடும் போல, ஒன்றுக்கொன்று பாதிப்படையாத உணர்வோடு இருக்கும்.உணர்வு உயர்ந்து சுதந்திரமாக இருக்கிற குழந்தைக்கு, பிற ஆணையோ, பெண்ணையோ பார்க்கும் பொழுது, கண்களில் எந்த மாற்றமும் இருக்காது.
சுதந்திர உணர்வுடையவர்கள் மாற்றமின்றி, சலனமின்றித் தெளிவாய் இருப்பார்கள்.
மாற்றமின்றி ஒரே உணர்வோடுதான் இருப்பார்கள்.
அந்த முதல் அனுபவம் நடக்காவிட்டால், சக்தி ரீதியாக அந்தக் குழந்தை உடல் மலர்ச்சி அடையும்பெழுது, சக்தி கீழே வரும், அதோடு சேர்ந்து உணர்வும் கீழே வந்துவிடும். அதனால் தேவதைகளாக இருந்த குழந்தைகள், இப்பொழுது ஆணாகவோ, பெண்ணாகவோ மனித உணர்விற்கு இறங்கி வந்து விடுகிறார்கள்.
அதற்கு மேல், இயற்கையிலேயே, அந்தக் குழந்தைகளுடைய உணர்வு இன்னொரு துணையைத் தேட ஆரம்பிக்கும். இதை நாம் தடுத்தால், உணர்வு ரீதியாகத்தான் தேடுவார்கள். உடல் மட்டும் தூரமாக இருக்கும். ஆனால் உணர்வுக்குள் இன்னொரு துணையைத் தேடிக் கொண்டே இருப்பார்கள்.
முதல் ஆன்மீக அனுபவம் அடையாத, மற்றும் சக்தி மேல் நோக்கித் திரும்பாத குழந்தைகள் காம சூத்திரம் என்ற அறிவியலை முறையாகத் தெரிந்து கொள்வார்கள். கிருகஸ்த வாழ்க்கைக்கு தயாராவார்கள்.


முதல் ஆன்ம அனுபவம் அடைந்து, சக்தி மேல் நோக்கித் திரும்பிய குழந்தைகள் எல்லாம் பிரம்ம சூத்திரம் படித்து, ஞானத்திற்குத் தயாராவார்கள்.
ஞானப் பாதையா?
கிரஹஸ்த வாழ்க்கையா?
என்கிற முடிவு, பதினான்கு வயதில்தான் எடுக்கப்படும்.
எந்தச் சூத்திரத்திற்குள் அவர்கள் நுழைய வேண்டும் என்பது, அவர்களுடைய உடல் மலர்ச்சியை வைத்தும், உணர்வை வைத்தும் எடுக்கப்படும்.
நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்த அருமையான இரண்டு வார்த்தைகள்: ஊர்த்வரேஜஸ், தைத்ரியரேஜஸ்.
உடல் வளர்ந்திருந்தாலும், உணர்வு கீழே இறங்காத மகான்கள் சக்தி ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் மேல் நோக்கியே செல்பவர்களைத்தான் ஊர்த்வரேஜஸ் என்று சொல்வோம். உடல் வளரும்பொழுது,சக்தி ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கீழே இறங்கியவர்களைத்தான் தைத்ரியரேஜஸ் என்று சொல்வோம்.
ஊர்த்வரேஜஸாக இருக்கிறவர்கள், பிரம்ம சூத்திரம் படித்து, பதினாறிலிருந்து இருபத்தியொரு வயதிற்குள் ஞானமடைந்து விடுவார்கள். ஞானமடைந்தபிறகு, அவர்கள் சன்யாஸ வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.
காமசூத்திரம் படித்தவர்கள், பதினான்கிலிருந்து இருபத்தியொரு வயது வரை, வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான எல்லாக் கலைகளையும் கற்றுக்கொண்டு, இருபத்தியோரு வயதிலே திருமணம் செய்து கொள்வார்கள்.
சம்சாரியா, சன்யாசியா என்பதை எப்படி முடிவெடுப்பது என்று தெரிந்து கொள்ள, தெளிவான அறிவியலை வகுத்து வைத்திருந்தார்கள்.
தனிநபரின் மன அமைப்பை, உணர்வை ஆராய்ந்து வகுக்கப்பட்ட மிக உயர்ந்த முறை இது.
அதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தெளிந்த அறிவியல் முறைப்படி, மன உணர்வை ஆராய்ந்து, நம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய அமைப்புதான், ‘பிரம்மச்சரியம்’ என்ற அமைப்பு.
முறையாக சிறுவயதிலிருந்து, உணர்வை மேல்நோக்கித் திரும்பியவர்கள் திருமணம் செய்திருந்தாலும், அவர்களால் இல்லற வாழ்க்கையில் வாழ முடியாது.
அதாவது ‘எந்தெந்த உணர்வுடையவர்கள், எந்தெந்த வாழ்க்கைக்குப் போக வேண்டும்ீ என்று தெளிவாக நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள். அந்த முறையிலேயே சென்றதினால்தான், நம்முடைய வேத பாரம்பரியத்தில், வேத கால வாழ்க்கை முறை குழப்பம் இல்லாததாக இருந்தது.
முதல் ஏழு ஆண்டுகள் குருகுலத்தில் இருக்கும்பொழுது, வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளைப் பெற்றோர்கள் எடுக்கவில்லை. குருவே அந்தக் குழந்தைகளின் சூட்சும தன்மையையும் மன முதிர்ச்சியையும் அடிப்படையாக வைத்து வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை எடுக்கும் மிகப்பெரும் பொறுப்பை ஏற்றுச் செய்தார்.
உணர்வால் கீழ்நோக்கி திரும்பியவர்கள் சன்யாஸ வாழ்க்கையில் நுழைந்தாலும், அவர்களால் பிரம்மச்சரியம் வாழ்க்கை வாழ முடியாது. பிரம்மச்சரியம் அவர்களுக்குச் சாத்தியம் இல்லை.
காலப்போக்கில் ஏதோ சில இடங்களில், இந்த வாழ்க்கைமுறை தவறி உபயோகப் படுத்தப்பட்டது என்பதற்காக, அந்த அமைப்பே தவறு கிடையாது.
அந்த அமைப்பிற்குப்பின், மிகப்பெரிய அறிவியல் இருந்தது.
தங்களை உடலாக நினைக்கிற மனிதர்கள், தங்களைக் கீழே இறக்கும் கற்பனைகளையே உள்வாங்குகிறார்கள்.
உணர்வால் தங்களை உயர்த்திக் கொள்கிற மனிதர்கள், தங்களை உயர்த்தும் உணர்வையே உள்வாங்குகிறார்கள்.
எந்த நிலையில் நீங்கள் இருக்கிறீர்களோ, அது சம்பந்தமான கற்பனைகளையோ அல்லது உணர்வையோதான் எளிதாக உள்வாங்குகிறது; ஏற்றுக்கொள்கிறது.

 

[button link=”The URL of the button” variation=”red”]வளரும் சூழ்நிலையே நம் வாழ்வை வடிவமைக்கும்[/button]
ˆ Our living environment will design our life

சிறு வயதிலிருந்தே என்ன வார்த்தை உங்களுக் குள்ளே போகிறதோ; எந்தச் சூழ்நிலை உங்களுக்குள்ளே பதிவாகிறதோ; எந்தச் சூழ்நிலையில் வளர்கிறீர்களோ; எந்த விஷயங்களை ஆழமாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களோ, அதுதான் உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கிறது.
உடல் ரீதியான ஆரோக்கியத்திற்கோ; மன ரீதியான தெளிவிற்கோ; உணர்வு ரீதியான, ஆன்ம அனுபவத்திற்கோ தற்போது உதவி செய்கிறோம் என்றால், அதற்குக் காரணம் சிறுவயதிலேயே அண்ணாமலையாருடைய ஆலயம், என்னுடைய உணர்வில் ஏற்படுத்திய ஆழமான தாக்கம்…
சிறிய வயதில் நான் பிறந்து வளர்ந்த சூழ்நிலை, என் வாழ்வை வடிவமைப்பதில் மிகப்பெரிய பங்களித்தது.
அதனால்தான் சொல்கிறேன், என்னுடைய வாழ்வை வடிவமைத்த இடத்தை நினைத்து நன்றியுணர்வுடன் சொல்கிறேன்…
வயதும் சூழ்நிலையும் சாதாரணமானது என்று நினைக்காதீர்கள்.
எந்த மனிதரையும் மகானாக மாற்றும் சூழ்நிலையையும், உத்வேகத்தையும் தரும் சக்தி, நாம் வாழும் சூழ்நிலைக்கு உண்டு.

அதை தருவதுதான் ஆன்மீகம் என்ற அறிவியல்.

admin

3 thoughts on “ஆன்மீக அறிவியல்

  1. I am very late to know the spiritual science in my own language. That’s why I failed to brought up my son in this way at the age of 14. But I am proud to say that I brought my son upto Healer Initiation within the age of 15. That’s why Swamiji may look after his future.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *