பூஜை – ருத்ராபிஷேகம்

பூஜை – ருத்ராபிஷேகம்

புதுப்பிக்கும் சக்தி அனைத்தும் ருத்ரமே!

 

சிவனின் அம்சம் ருத்ரன். அவர் ஓர் புதுப்பிக்கும் கடவுளாகக் கருதப்படுகிறார்.

யஜுர் வேதத்தில் புதுபிக்கும் சக்தி பற்றி மிக அற்புதமான விளக்கப்பட்டிருக்கிறது. அவை மந்திரங்களாக பாடப்பெற்றிருக்கிறது. மனம் உருகி பாடுவதாலேயே, இந்த மந்திரங்கள் நமக்குள் சக்தியை புதுப்பிக்கிறது. ஸ்ரீ ருத்ரம் மிகவும் ஆற்றல்வாய்ந்த மந்திரத் தொகுதியாக இருக்கிறது. இந்த மந்திரங்கள், புதுப்பிக்கும் ருத்ர சக்தியைப் போற்றும் விதத்திலும், ருத்ர தேவரின் பிரபஞ்ச வடிவை விவரிக்கும் விதத்திலும் உள்ளன.

 

ஆஹுதிகள் சமர்ப்பித்து, ஸ்ரீ ருத்ரரை வேண்டிக்கொள்ளும் ஒரு புனிதமான ஆற்றல் வாய்ந்த  பிரார்த்தனை முறைதான் ருத்ர ஹோமம்.  ஸ்ரீ ருத்ர மந்திரங்களை ஓதிக்கொண்டே ஸ்ரீ நித்யானந்தேச்வரருக்கு (சிவனுக்கு) பல்வேறுவிதமான புனிதப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது ருத்ராபிஷேகம்.

 

ஸ்ரீ ருத்ரம் – சமகம், வேத இலக்கியத்திலும் வைதீக பாரம்பரியத்திலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது.

 

வித்யைகளில் மேலானது வேதங்கள். வேத மந்திரங்களிலேயே மேலானது ருத்ர ஏகாதசி; ருத்ர மந்திரங்களிலேயே மேலானது பஞ்சாக்ஷரீ ( நமசிவாய). நமசிவாய என்ற மந்திரத்திலேயே சிவா என்ற இரண்டெழுத்து மேலானது.

 

மரத்தின் வேரில் ஊற்றப்படும் நீரானது, எல்லாக் கிளைகளுக்கும் பரவி அம்மரத்தையே செழிக்கச் செய்வது போல், ருத்ர ஜபத்தின் மூலம் ஸ்ரீ ருத்ர தேவனை வழிபடும்போது அனைத்து தேவர்களும் திருப்தியடைகிறார்கள். இது அனைத்து பாவங்களிலிருந்து விடுவிக்கும் சிறந்த பிராயச்சித்த ஹோமமாகவும், மேலான விருப்பங்களை அடைவதற்காகச் செய்யப்படும் ஆன்மீக சாதனையாகவும் இருக்கிறது.

 

ருத்ர ஜபத்தால் எல்லாத் தேவதைகளுமே திருப்தியடைகிறார்கள் என்றும், நம்முடைய நேர்மையான பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்றும் உறுதியாக நம்பப்படுகிறது.

 

ருத்ர ஜபம், சித்தத்தைத் தூய்மைப்படுத்தும்  மந்திரம், சக்திவாய்ந்த பரிகார மந்திரம் .

சுருக்கமாகச் சொல்லப் போனால் மேலான பரம் பொருளிடமிருந்து ஆன்மீக ரீதியான பலன்களையோ அல்லது உலகியல் ரீதியான பலன்களையோ பெறுவதற்கான சிறந்த ஸாதனை ருத்ராபிஷேகம்.

சிவன், ருத்ரராகவும் அறியப்படுகிறார். ருத்ரரின் ஆனந்த கண்ணீரிலிருந்து உருவானதே  ருத்ராக்ஷம் என்று வேதங்கள் சொல்கின்றன. சிவனின் சிறந்த ஆற்றல் வடிவாக ருத்ரர் இருப்பதால், அவர் ருத்ராஷங்களுக்கு மருத்துவ ரீதியான மற்றும் ஆன்மீகரீதியான ஆற்றல்களை அளிக்கிறார். அந்த ஆற்றல்கள், இப்புனித ருத்ராக்ஷங்களை அணிந்து இருப்பவருக்குள்ளும் பாய்கிறது.

 

ருத் என்றால் பாவங்களிலிருந்தும் துக்கங்கங்களிலிருந்து விடுவிப்பவர் என்று பொருள்.

 

பூமி, நீர், அக்னி, வாயு, ஆகாசம், சூரியன், சந்திரன், மற்றும் பிராண சக்தி என்ற இந்த எட்டு இயற்கை சக்திகளுமே ருத்ரனின் அம்சங்களே!

 

தொடர்ந்து மீண்டும் மீண்டும் உச்சரிப்பதற்கும், தியானம் செய்வதற்கும் நமது முன்னோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரங்களுள் ஸ்ரீ ருத்ரமும் ஒன்று.

பௌணர்மி நாட்களில் கோள்களின் சக்தியானது, உயிர்களின் ஆற்றல்களை புதுப்பிக்கக்கூடிய வகையில் மேலோங்கி இருக்கிறது.

 

பூமியில் அமைந்துள்ள சக்திமிக்க ஸ்தலங்களுள் ஒன்றாக விளங்கும் திருவண்ணாமலை,ஞானமடைந்த ஆத்மாக்களைக் கவந்திழுக்கும் ஆன்மீக ஒளியாக விளங்குகிறது.

 

புனிதமிக்க அருணாச்சல மலையின் சக்தியோடு, ஸ்ரீ ருத்ர சமகத்தின் ஆற்றலும் இணைந்தால் நிகழும் சக்தி மாற்றங்களைப்பற்றி வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

 

பெர்ளணமி தோறும் திருவண்ணாமலை நித்யானந்த தியானபீடத்தில் பரமஹம்ஸரின் ஸாந்நித்யத்தில் ருத்ராபிஷேகம் நடைபெறுகிறது. ருத்ராபிஷேகத்திற்கான நன்கொடையை வழங்கி குடும்பத்தினரோடு நீங்களும் இப்பூஜையில் கலந்து கொள்ளலாம். பதிவு செய்ய விரும்புபவர்கள்…072 00 00 33 11 / 22  எனும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இனை தளத்தின் வழியாக நேரடியாக பங்குபெற்று முழு பூஜையிலும் கலந்து கொள்ளலாம். தங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

[button link=”The URL of the button” variation=”red”]2012 வருடத்தின் பௌர்ணமி தினங்கள்[/button]

 

ஜனவரி 8,2012 

ஞாயிறு      அதிகாலை12.47 மணி முதல்

மறுநாள் அதிகாலை 1 மணி  வரை

 

பிப்ரவரி 7,2012

செவ்வாய் அதிகாலை 4.47 மணி முதல்

மறுநாள் அதிகாலை 3.23 மணி  வரை

 

மார்ச் 7,2012 

புதன்            மாலை 5.52 மணி முதல்

மறுநாள் பிற்பகல் 3.09 மணி வரை

 

ஏப்ரல் 6,2012

வெள்ளி      காலை 4.20 மணி முதல்

மறுநாள் இரவு 12.48 மணி  வரை

 

மே 5,2012 

சனி   நண்பகல் 12.53 மணி முதல்

மறுநாள் காலை 9.05 மணி  வரை

 

ஜுன் 3,2012

ஞாயிறு      இரவு 8.17 மணி முதல்

மறுநாள் மாலை 4.41 மணி  வரை

 

ஜுலை 3,2012

செவ்வாய் காலை 3.21 மணி முதல்

மறுநாள் அதிகாலை 12.21 மணி  வரை

 

ஆகஸ்டு 1,2012 

புதன்            காலை 10.58 மணி முதல்

மறுநாள் காலை 8.57 மணி  வரை

 

ஆகஸ்டு 30,2012

வியாழன்  இரவு 8.11 மணி முதல்

மறுநாள் இரவு 7.28 மணி  வரை

 

செப்டம்பர் 29,2012

சனி   காலை 8.03 மணி முதல்

மறுநாள் காலை 8.48 மணி  வரை

 

அக்டோபர் 29,2012

திங்கள்       இரவு 11.17 மணி முதல்

மறுநாள் அதிகாலை 1.19 மணி  வரை

 

நவம்பர் 27,2012 

செவ்வாய் மாலை 5.34 மணி முதல்

மறுநாள் இரவு 8.15 மணி  வரை

 

டிசம்பர் 27,2012 

வியாழன்  பகல் 1.26 மணி முதல்

மறுநாள் மாலை 3.51 மணி  வரை

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *