அற்புதம்

அற்புதம்

[button link=”The URL of the button” variation=”red”]நீங்கள் காலியாக இருந்தால் அதிசயங்கள் நிகழும்[/button]
If you become empty, miracles will happen!

பரமஹம்ஸரின் ஜீவன் முக்தி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.பரமஹம்ஸர் தம் வாழ்வில் நிகழ்ந்த அதிசயத்தை தாமே விளக்குகிறார் )

 

 

அப்போது சீதபேதியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் என்னால் நகரக்கூட முடியவில்லை. அதனால் ஒரு பெஞ்சுமேல் படுத்து பக்கத்தில் ஒரு சிவலிங்கத்தை வைத்துக் கொண்டேன்.

          நான் இறந்து போய் விடுவேன் என்று நினைத்தேன். என் உடலை சிவலிங்கத்தின் அருகில் விட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

          அந்த சிவலிங்கம் இன்றும் உள்ளது. யாரோ அதைப் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

          நாம் அங்குப் போகும்போது அந்த சிவலிங்கத்தைப் பார்க்கலாம்.

          இது போன்ற நிகழ்வுகளை நாம் கதைகளிலும் புராணங்களிலும்தான் படித்திருக்கிறோம்.

          கடவுளே வந்து உணவளிப்பது நம்மை கவனித்துக் கொள்வது என்றெல்லாம் படித்திருக்கிறோம்.

          இந்த முறை அவர், எனக்கு வந்து உணவளித்தது மட்டும் அல்லாமல், இதை உலகத்திற்கும் சொல்ல வேண்டும் என்ற காரணத்தால், ஆழமான ஆதாரங்களை விட்டு விட்டுச் சென்றுள்ளார்.

          உத்வேகத்திற்காக இது உலகத்திற்கு சொல்லப்படவேண்டும் என்பதற்கே அவரே எனக்களித்த அனுபவத்தினால் தம்மைப் பிரபலப்படுத்தியிருக்கிறார்.

          அவர் ஒரு தெளிவான அத்தாட்சியை, சாட்சியை இந்த மொத்த உலகத்திற்கு சொல்வதற்காக உருவாக்கியுள்ளார்.

          இது ஒரு ஆழமான அனுபவம். அவர் எனக்கு தந்தது வெறுமனே உணவு மட்டும் அல்ல.

          அவரின் ஒவ்வொரு வருகையும் அவ்வளவு உத்சாகத்தையும், தைரியத்தையும் கொடுத்தது.

          கற்பனை செய்து பாருங்கள்.

          இதுபோன்ற ஏதோ ஒரு சம்பவம், உங்கள் வாழ்க்கையில் நடந்தால் பாரம் பரியத்தின் மீது எவ்வளவு தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களுக்கு ஏற்படும் என்று!

          அதனால்தான், நான் சொல்வதுண்டு. என்னுடைய ஞானத்தன்மைக்கு, நான்தான் சொந்தக்காரர், என்னால்தான் வந்தது,” என்று அங்கீகரிக்க முடியாது.

          எல்லோருக்கும் தைரியத்தையும், உத்சாகத்தையும் கொடுத்து, அவர்கள் அந்தப் பாதையில் தொடர வேண்டும் என்றுதான் இது போன்ற சம்பவங்கள் மீண்டும், மீண்டும் நடக்கிறது. அனைத்தும் கருணையின் தூய்மையான பரிசுகள். இதற்கான உரிமையை நான் கோர முடியாது.

          என் வாழ்வில் கிடைத்த எந்த விதமான பலனுக்கும், தனி நபராக நான் உரிமை கேட்க முடியாது,

          அதனால்தான், நாம் சொல்கிறேன், இதுபோன்ற பெரும் ஞானகுருமார்களின் பாதத்தில் எல்லாப் பலன்களையும் வெறுமனே சமர்ப்பித்துவிடுவோம்! அவர்கள்தான் இதைச் செய்தார்கள். இன்னொரு முறை செய்துள்ளார்கள் என்று நீங்கள் சொல்லலாம். அவ்வளவுதான்!

          மாறாக, நடந்தவற்றையெல்லாம் ஒரு தனி மனிதனாக நின்று அதற்கு உரிமைகோர முடியாது.

          எப்படி ஒரு 29 வயதுடைய இளைஞர் இவையெல்லாவற்றையும் செய்ய முடியும்?

          உங்களுக்கு என்னுடைய பின்னணியைப் பற்றி தெரியுமா?

          நான் ஒரு சாதாரண சின்ன கிராமத்தில், மலைகள் நிறைந்த கிராமத்தில்தான் பிறந்து வளர்ந்தேன்.

          அது ஒரு நகரம்கூட இல்லை.

          இப்போதுதான் அது ஒரு நகரம்.

          அந்த நகரத்திற்குள் தினமும் மூன்று பேருந்துகள்தான் வரும், அப்படிப்பட்ட நகரம்தான் அது.

          இன்று திடீரென்று ஒரு சமஸ்தானத்தின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருக்கிறேன்.

          யாரொருவர் என்னைப் பார்த்தாலும், என் வார்த்தைகளைப் பின்பற்றி கீழ்ப்படிகிறார்கள்.

          எல்லாம் தானாகவே நடக்கிறது. எனக்குள் என்னவெல்லாம் நடக்கிறது. என்னால் என்னைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்றுகூட தெரியாது. அது மட்டும் அல்லாமல் அதற்கான எந்த உரிமையும் நான் கோர முடியாது.

          இதைத் தனியாய்ச் சொல்லவில்லை. நான் உங்கள் எல்லோர் முன்னும் அமர்ந்துகொண்டு வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

          இந்த மொத்த இயக்கத்தின் உரிமையைகூட நான் எந்த விதத்திலும் உரிமை கோர முடியாது.

          நீங்கள் அங்குத் தினமும் உங்கள் வீட்டில் அமர்ந்துகொண்டு, உங்களின் வாழ்க்கை எனும் விளையாட்டை விளையாடுகிறீர்கள்.

          நான் இங்கு அமர்ந்து உட்கார்ந்துகொண்டு இந்த மிகப்பெரிய பிரபஞ்ச விளையாட்டை விளையாடுகிறேன்.

          இதற்குமேல் இதில் சொல்வதற்கு எதுவுமில்லை.

          என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் சொல்லி விட்டேன்.

          சங்கர் மஹராஜால் உங்கள் உள்ளுலகம் மட்டும் அல்ல, என்னுடைய உள்ளுலகமும் இப்போது நிறைந்துள்ளது.

          ஒரே ஒருமுறை இது போன்ற ஆழமான அனுபூதி நடந்தால், அது உங்கள் மொத்த இருப்புத் தன்மையையும் உலுக்கிவிடும். பிறகு, எந்தக் கேள்விகளும் மீதமிருக்காது. நீங்கள் திறந்த தன்மையோடு இருப்பதினால்தான் அதிசயங்கள் நடக்கிறது.

          எப்போதெல்லாம் குறைந்த காற்றழுத்தம் ஏற்படுகிறதோ அல்லது காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் புயல் உருவாகிறது இல்லையா?… நான் சொல்வது சரிதானே?

          அதேபோன்று உங்கள் இதயத்திற்குள்ளும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கினால்தான், திடீரென ஒரு பெரிய பிரபஞ்ச விழிப்புணர்வின் புயல் உங்களுக்குள் இறங்கும்.

          புயலைக் கவனித்திருக்கிறீர்களா?

          ஒரு புயல் வரும் பொழுது சின்ன சின்ன கற்களையெல்லாம் பறக்க வைக்கும். அங்குமிங்கும் உடைந்த பொருட்களும் கற்களும் பெரும் வேகத்தில் ஒரு அம்பை போன்று வேக வேகமாக சீறிப்பறந்து வரும்.

          இதே போன்று பிரபஞ்ச புயலில் அகப்பட்ட சின்னசின்ன சம்பவங்கள்தான் நமக்கு பெரிய பெரிய அதிசயங்களாக ஆகிறது. இந்த அதிசயங்களையெல்லாம்தான் நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம்.

          வாழ்க்கையில் ஒரு முழுமையான வெற்றிடத்தை உருவாக்குவதே, அதிசயங்கள் நடப்பதற்கான சாத்தியத்தை உருவாக்குவதற்குத்தான்.

          நான் இப்போதும் மகேஸ்வர பூஜை செய்கிறேன். எப்போதும் மகேஸ்வர பூஜை செய்து சாதுக்களுக்கு உணவளிப்பது வழக்கம். ஏன் என்றால், அவர்கள் எனக்கு உணவு அளித்தவர்கள்.

          அதுமட்டுமில்லாமல் கடவுளாய் வாழும் பல சாதுக்கள் இருக்கிறார்கள். இமாலய யாத்திரை வரும் போதெல்லாம் இந்த இடத்தில் மகேஸ்வர பூஜையை நான் செய்வேன்.

          எப்போதும் சாதுக்களுக்கு இங்கு உணவளிக்க நினைப்பேன். நாளை அந்த இடத்தில் மகேஸ்வர பூஜையை நடத்தப் போகிறோம்.

          நம்முடைய சுவாமிகள் எல்லோரும் இங்குதான் இருக்கிறார்கள். ஹரித்துவாரில்தான் மகேஸ்வர பூஜை செய்வோம். அந்த இடத்தில்தான் சங்கர் மஹாராஜுக்கு உணவளிப்போம்.

          என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். அந்த மஹாதேவர், ஒரு சாதுவின் ரூபத்தில் வந்து உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வார்.

          இப்போது நமக்கே தெரியும், அவர் வந்து சாப்பிவது மட்டும் அல்லாமல், ஒரு சாதுவின் ரூபத்தில் உணவைக்கூட அளிக்கவும் வந்தவர். அதனால்தான் நாம் மகேஸ்வர பூஜை செய்வோம். இது ஒரு நன்றி நவில்தல் நிகழ்ச்சி.

          நம்முடைய பிடதி ஆசிரமத்தில்கூட மகேஸ்வர பூஜை செய்வோம், ஆரத்தியும் செய்வோம்.

          சங்கர் மகராஜ் ஒரு பழைய தாமிரத் தட்டிலும், டம்ளரிலும் எனக்கு உணவளித்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

          அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் ஒரு வைரப்பேனாவும், பழைய தட்டையும் வைத்திருந்தார். அது ஒரு நல்ல தட்டுகூட இல்லை. இப்போது நமக்குத் தெளிவாகப் புரியும். அவரிடம் உள்ளதைத்தான் அவர் எடுத்து வந்தார் என்று!

          இந்த நிகழ்வு, என்னுடைய வாழ்க்கையில் நடந்தது என்றால், அது உங்களுடைய வாழ்க்கையிலும் நடக்கும்.

          நீங்கள் எல்லோரும் சொல்லலாம், இல்லை, நீங்கள்தான் இதற்குத் தகுதியுடையவர். அதனால்தான் இது உங்களுக்கு நடந்தது. இது எங்களைப் போன்ற சாமான்யர்களின் வாழ்க்கையில் நடக்காது,” என்று! அப்படியெல்லாம் இல்லை.

          பாருங்கள், எனக்கிருந்த ஒரே தகுதி, என்னிடம் தாழ்வு மனப்பான்மை என்பதே இல்லை என்பதை மட்டும் உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.

          உயர்வு மனப்பான்மையையும் உணரவில்லை, தாழ்வு மனப்பான்மையையும் உணரவில்லை.

          கிருஷ்ண பகவான் இதை 5,000 வருடங்களுக்கு முன்பு சொல்லிவிட்டார், அவரின் இந்த ஒப்பந்தம் 200 வருடங்களுக்குள் முடிந்துவிடும் என்று அவர் சொல்லவில்லை.

          அதனால் இது இன்றளவிலும் உயிருடன்தான் உள்ளது. அவர் தம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார் என்பது உறுதி. அவ்வளவுதான்.

          நான் இதைத் தைரியமாகச் சொல்ல விரும்புகிறேன். எனக்கும், உங்களுக்கு இருக்கிற எல்லாப் பிரச்சினைகளும் இருந்தது. எல்லாம் என்று சொன்னால், எல்லாமுமே என்றுதான் அர்த்தம்.

          அதனால் நாம் ஏதோ ஒருவிதத்தில் சிறந்தவர்கள் என்றோ, தாழ்ந்தவர்கள் என்றோ ஒரு போதும் நினைக்காதீர்கள். அப்படி நினைக்காததால்தான் எனக்கு கொடுக்கப்பட்டது.

          தகுதிகளைப் பார்த்து பரிசுகள் கொடுக்கப்படுவதில்லை.

          தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்றால் அது ஒரு வியாபாரம்.

          அது வியாபாரம் அல்ல, பரிசு!

          கருணையினால்தான் பரிசுகள் கொடுக்கப்படுகிறது. வெறுமனே தயாராக இருங்கள், அதிசயங்களுக்காகத் தயாராகுங்கள்.

          உங்கள் வாழ்க்கையை அதிகமாகத் திட்டமிடாதீர்கள். வெறுமனே எளிமையாக இருங்கள். நிறைய அதிசயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடப்பதை நீங்கள் பார்க்கலாம்.

          எளிமையாக வாழ்வதுதான், அதிசயம் நிகழ்வதற்கான வழி.

          வாழ்க்கையில் பெரிதாக எதையும் திட்டமிடாதீர்கள். எளிமையாக இருங்கள்.

          வாழ்க்கையில் பல அதிசயங்கள் நிகழ்வதைப் பார்க்கலாம். எளிமையாக வாழ்வதுதான், அற்புதங்கள் நிகழ்வதற்கான ஒரே வழி.

admin

5 thoughts on “அற்புதம்

  1. This tamil web is very useful to me.Why means i am housewife.In my time i spent to tamilwebnar.Swamiji descores is very very useful in my life.I am very happy to say him.nithyanandam swamiji.

Leave a Reply to gowsalya in tiruchengode Cancel reply

Your email address will not be published. Required fields are marked *