அமெரிக்க சிவில் வழக்கின் நஷ்ட ஈடுகளிலும் வெற்றி

அமெரிக்க சிவில் வழக்கின் நஷ்ட ஈடுகளிலும் வெற்றி

நித்யானந்த ஃபவுண்டேஷனுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த சிவில் வழக்கின் 9 பொய் குற்றச்சாட்டுகளையும்
அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளது

லாஸ் ஏஞ்சலிஸ், ஜூலை 19-2012:

அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி மாண்புமிகு நீதிபதி ஸ்டீஃபன் எஃப்.வில்சன் அவர்கள் நித்யானந்த ஃபவுண்டேஷனுக்கு எதிராக ஆதன முகவர் (real-estate agent) போபட் சாவ்லா என்பவரால் சுமத்தப்பட்டிருந்த சிவில் வழக்கின் 9 பொய் குற்றச்சாட்டுகளையும் நீக்கி தீர்ப்பளித்துள்ளார்.

பரமஹம்ஸ நித்யானந்தர் இந்த ஃபவுண்டேஷனின் அறங்காவலராகவும் இல்லை, கூட்டாளியாகவும் இல்லை…சட்ட ரீதியாகவும் வேறு எந்த வகையிலும் இந்த ஃபவுண்டேஷனுடன் சம்பந்தப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பரமஹம்ஸ நித்யானந்தர், இந்த வழக்கில் வாதியாகவோ அல்லது பிரதிவாதியாகவோ… ஏன் சாட்சியாக கூட வேறு எந்த வகையிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

இந்த வழக்கு பக்தர் ஒருவருக்கும் போபட் சாவ்லா என்பவருக்கும் இடையில் நடைபெறும் ஒரு சிவில் வழக்காகும்.

நித்யானந்த ஃபவுண்டேஷனுக்கு எதிராக சொல்லப்பட்டிருந்த 10 குற்றச்சாட்டுகளில் ஒன்றே ஒன்று மட்டுமே வாதிக்கு சாதகமாக காணப்பட்டுள்ளது. எப்படியாயினும் எஞ்சியிருக்கும் இந்த ஒரு குற்றச்சாட்டையும் நித்யானந்த ஃபவுண்டேஷன் ஒன்பதாம் சர்க்கியூட் நீதிமன்றத்தில் (Ninth Circuit Court of Appeals) மேல் முறையீடு செய்து எதிர்கொள்ளும்.

வழக்கின் தேர்வாய்வு தறுவாயில் தண்டனையாக அளிக்கப்படும் நஷ்ட ஈடுகளிலும் நித்யானந்த ஃபவுண்டேஷன் வெற்றிப் பெற்றுள்ளது.

tamil

One thought on “அமெரிக்க சிவில் வழக்கின் நஷ்ட ஈடுகளிலும் வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *