மாபெரும் துரோகம்

மாபெரும் துரோகம்

 

 

 

[button link=”The URL of the button” variation=”red”]மனித குலத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் துரோகம்[/button]

The Great Conspiracy done against humanity

‘குழந்தைகளுக்கு துரதிர்ஷ்டவசமாக, சமூகத்தின் கொடுமையான சூழல் காரணமாக, உடல் மலர்ச்சி அடைகிற வயது குறைந்துகொண்டே வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் எட்டு வயதில் உடல் மலர்ச்சி நடக்கத் துவங்கிவிடுகிறதுீ என்று மருத்துவர்கள் வேதனையோடு பகிர்ந்துகொண்டார்கள்.

அது சமூக ரீதியாகச் சரியாக இருக்கலாம். ஆனால், அது அவர்களுக்கு இழைக்கப்படும் பாவம். பாவம்கூட அல்ல, துரோகம்!

குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது.

உடல் மலர்ச்சி (Physical Maturity ) ஆகிற வயது அதிகமாக ஆக, குழந்தைகள் ஆரோக்கியத்தோடும் ஆயுளோடும் உயர்ந்த மன அழுத்தம் இல்லாத, நரம்பு தளர்ச்சி அடையாத, ஸ்திரமான நரம்பு மண்டலத்தோடு வாழ்வார்கள்.

உடல் மலர்ச்சி நடக்கிற வயது, ஒரு காலத்தில் பதினெட்டு வயதாக இருந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறோம்.

என்னுடைய தவங்களை, சாதனைகளைப் பார்த்து சந்தோஷப்பட்டு, அதில் நான் தொடர்ந்து முன்னேற உத்வேகம் தந்தவர் ஒரு பெண் துறவி. அவருக்கு மாதாஜி விபுதானந்தபுரி தேவி என்று பெயர். அவர்கள், தங்களுடைய சிறுவயதில் செய்த சாதனைகளைப் பற்றியும், அடைந்த ஆன்மீக அனுபவத்தையும், என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.

சிறுவயதிலிருந்தே யோகம், தவம் செய்து வந்திருக்கிறார். மிகவும் சிரத்தையோடு தொடர்ந்து செய்து, இருபத்தி இரண்டு வயது வரை உடல் மலர்ச்சி ஆகவே இல்லையாம்.

அவர் பெரிய யோகி.

அவருடைய குடும்பத்தினர், அவருக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்பதற்காக, யோகம், தியானம் செய்வதை எல்லாம் நிறுத்தினார்களாம். அவரை யோகம் செய்யவிடாமல் தடுத்திருக்கிறார்கள்.

அதையெல்லாம் தடுத்தும், நான்கு வருடங்களுக்குப் பிறகுதான், உடல் மலர்ச்சி நிகழ்ந்ததாம்.

பதினெட்டு வயதில், யோகம் செய்வதை வீட்டிலிருந்தவர்கள் தடுத்திருக்கிறார்கள், நான்கு வருடங்களுக்கு பிறகு, இருபத்தி இரண்டு வயதில்தான் உடல் மலர்ச்சி நடந்ததாம்.

அதற்குப் பிறகுதான், இல்லற வாழ்க்கையிலேயே ஈடுபட்டு இருக்கிறார்கள். குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். கட்டாயப்படுத்தித்தான் திருமண வாழ்க்கையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்.

அவருடைய வாழ்விலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. ‘சூட்சுமமான உங்கள் உணர்வை மாற்றுவதன் மூலமாகவும், உடல் மலர்ச்சியையே தள்ளிப்போட முடியும். உடல் மலர்ச்சி நடந்தாலும், சக்தியைக் கீழே வராமல் அப்படியே மேலேயே எடுத்துக்கொண்டு போய் வைத்துவிட முடியும்ீ.

சக்தி மேல்நோக்கி திரும்பி விட்டால், உடல் மலர்ச்சி நடந்தாலும், மனம் உடனடியாக இன்னொரு உடலைத் தேடாது. அதாவது, இன்னொரு உடலாலும், மனத்தாலும் அடையப்படும் ஆனந்தத்தைவிட, தனக்குள்ளேயே பொங்கும். உயர்ந்த ஆனந்தத்தில் உடலும் மனமும் இயங்கும்.

ஆனால், இந்தக் காலத்தில் துரதிர்ஷ்டவசமாக, இன்னொரு துணையைத் தேடுகிற மன அமைப்பு, உடல் மலர்ச்சி அடைவதற்கு முன்பே வந்துவிடுகிறது.

அந்த மன அமைப்பு கொடுக்கிற அழுத்தத்தினால்தான், இப்பொழுது உடல் மலர்ச்சியே நடக்கிறது.

சமூக அமைப்பினால் உருவான மன அமைப்பை மாற்றினால் உச்சத்திலேயே வாழ்வீர்கள்.

இந்தக் காலத்தில், சக்தி ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் உச்சத்தில் வாழ குழந்தைகளின் மன அமைப்பை மாற்றுவது மட்டுமல்லாமல், கற்பனைகளையும், கனவுகளையும் புகுத்தும் சமூகச் சூழலை மாற்ற வேண்டும்.

கற்பனைகளையும் கனவுகளையும் குழந்தைகளின் மன அமைப்பிற்குள் புகுத்தும் சமூக சூழல்தான் மனித குலத்திற்கு இழைக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய கொடுமை, மிகப்பெரிய துரோகம்.

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *