Tamil.Nithyananda.Org
Nithyananda Dhyanapeetam – Tamil Website

 
 


சட்ட செய்திகள்

November 6, 2013

பெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்

பெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்,பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆஸ்ரமத்தில் அத்துமீறி நுழைதல் – செங்குட்டுவேல் தன் கைக் கூலிகளுடன் செய்த தொடர் தீவிர குற்றங்கள்

ஆவத்தி பாளையத்தில் இருக்கும் நித்யானந்த தியானபீட ஆஸ்ரமத்தில் கோவில் எழுப்பி, வேத பாட சாலை மற்றும் கோசாலை அமைத்து, அன்னதானம் வழங்கும் சேவைகளை சன்யாசிகளும் சன்யாசினிகளும் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், 2. 11. 2013 – இரவு 7. 30 மணியளவில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த செங்கோட்டுவேல், அவருடைய மனைவி சுகந்தி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த பெருமாள் ஆகியோர் ஒன்றாக கூட்டுச் சேர்ந்து சதிசெய்வதற்காக ஆஸ்ரமத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். சுவாமி நித்யானந்தர் மற்றும் அவரது சன்யாசிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியபடியே உள்நுழைந்து, அங்கு பிராணபிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களால் வழிபடப்பட்டுவரும் சிவ லிங்கத்தை செருப்புக் கால்களால் எட்டி உதைத்தார்கள். அதனோடு நிற்காமல் அங்கு வசித்துவரும் மா நித்ய தீரானந்தா சுவாமினியை (ரேவதி) பாலியல் ரீதியாக துன்புறுத்தி – தேவடியா என்று அழைத்து கொச்சைப்படுத்தினர். அங்கிருந்த அனைவரையும் பார்த்து -ிஇங்கிருந்து ஓடிவிடுங்கள். இல்லையென்றால் அனைவரையும் தீர்த்துக் கட்டி மொத்த ஆஸ்ரமத்தையும் கொளுத்திவிடுவோம்ீ என்று மிரட்டியுள்ளார்கள்.

இதனால் அதிர்ந்துபோன ஆஸ்ரமவாசிகள் பள்ளிப்பாளையம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் ஒன்றை அளித்தார்கள்.

புகார் செய்து 48 மணி நேரங்களுக்குள்ளாகவே, (பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சுவாமினி காவல் நிலையத்தில் இருந்த பொழுது), செங்கோட்டுவேல் 15 அடி ஆட்களை ஆஸ்ரமத்திற்கு அனுப்பி உள்ளான். ஆஸ்ரம கதவுகளை எட்டி உதைத்து உடைத்து உள்ளே நுழைந்த அந்த ரௌடி கும்பல் மிக நீளமாக மூங்கில் கழிகளை எடுத்துவந்தது. அங்கிருந்த பக்தர் ஒருவரை தாறுமாறாக அடித்து சித்தரவதை செய்ய செய்ய, அதைப் பார்த்த மற்றொரு சன்யாசினி ( மா நித்ய ஜோதிகானந்தா) அவரை காப்பாற்றுவதற்காக விரைந்து சென்று தடுக்க நினைத்து அருகில் சென்றுள்ளார். ஒரு பெண்ணால் தனியாக அத்தனை ரௌடிகளையும் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிந்த நிலையில் செய்வதரியாமல், செங்கோட்டுவேலால் நடக்கும் கிரிமினல் தாக்குதல்களை பதிவு செய்தாலாவது, பிறகு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று எண்ணி மொபைலில் பதிவு செய்திருக்கிறார்.

மூங்கில் கழியால் அந்த பக்தரை அடித்து மயக்கமடையச் செய்த ரௌடிகள், அடுத்ததாக தங்கள் செயல்களை பதிவு செய்து கொண்டிருந்த ஜோதிகானந்தா சுவாமினியை சுற்றி வளைத்தது. அவருடைய கையிலிருந்த செல்போனை பறிக்க முயற்சி செய்துகொண்டே, வெறியர்களாகி காட்டுமிராண்டிகள் போல் பட்டப்பகலில் அவருடைய புடவையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய துவங்கினார்கள். புடவையை இழுத்து, ஜாக்கெட்டை கிழுத்து மார்பை தொட்டு கற்பழிக்க எண்ணி பலவந்தப்படுத்தியிருக்கிறார்கள். ரௌடிக் குழுவிடமிருந்து தன் கற்பை காத்து கொள்வதற்காக போராடிய ஜோதிகானந்த சுவாமினியின் உடலில் காயங்களும் நகக்கீறல்களும் ஆழமாக ஏற்பட்டிருக்கிறது. உயிரையும் கற்பையும் காப்பாற்றிக் கொள்ள நடத்திய போராட்டத்தினால் ஏற்பட்ட மன அழுத்தம் அவரை பீதியடையச் செய்து நிலைகுலையச் செய்துள்ளது.

இதற்கெல்லாம் காரணமான செங்கோட்டுவேல் மற்றும் அவரது மனைவி சுகந்தி மற்றும் பெருமாள் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காலல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை இந்தப் புகாரை வழக்காக பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

பெண்கள், குறிப்பாக பெண் சன்யாசினிகள் மீது நடத்தப்பட்ட இந்த பாலியல் பலாத்காரம் (டெல்லி மாணவிக்கு நிகழ்ந்த மறக்க முடியாத கற்பழிப்பு சம்பவம் தொடர்கிறது…) பெண்களுக்கு பாதுகாப்பின்மையை உருவாக்கி தருகிறது.

எங்களுக்கு தகுந்த பாதுகாப்பையும், நீதியையும் வழங்குமாறு வேண்டுகிறோம்.

நித்யானந்த தியானபீடம் ஆவத்திப்பாளையம் ஆஸ்ரமம் சார்பாக …
பக்தர்கள், சன்யாசிகள் மற்றும் சன்யாசிணிகள்


 
 

 

வினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி

லாஸ் ஏஞ்சலிஸ் கலிபோர்ணியா அக்டோபர் 18, 2013 அன்று அமெரிக்காவிலிருக்கும் கலிபோர்ணியா மா...
by tamil
0

 
 

நக்கீரன் இதழ் மீது நடவடிக்கை

நக்கீரன் இதழ் பரமஹம்ஸ நித்யானந்தரின் சீடர் ஸ்ரீ நித்ய ஞானானந்தா அவர்கள் சொன்னதாக ( 11...
by tamil
1

 
 

நித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்

திருவண்ணாமலையில் இருக்கும் நித்யானந்த தியானபீடம் இந்து கோவிலாக இருப்பதால் இந்து அ...
by tamil
0

 

 

ஆரத்திராவ் -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஆரத்திராவ் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் மற்றும் ஊடகங்களில் தோன்ற கூடாது -சென்ன...
by tamil
1

 0 Comments


Be the first to comment!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *