பரமஹம்ஸ நித்யானந்தரின் கருத்துகள் அனைத்தும் மனித குலத்திற்கு நன்மை அளிக்கக் கூடியதாகவும் ஆர்வம் அளிக்கக் கூடியதாகவும் இருந்ததால் குண்டலினி சக்தியைப்பற்றிய ஆராய்ச்சிகளுக்கு சம்மதித்தேன்.
அந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட நுட்பம் நாசா ((Nasa) கழகத்தினால் முதன் முதலாகப் போர் விமானங்களில் பணிபுரியும் பைலட்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.
இப்பொழுது உலகம் முழுக்க மூளை மற்றும் அதன் சம்பந்தமான நோய்களைப் பற்றி அறிந்துகொண்டு, அதற்குத் தகுந்த முறையில் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. பரமஹம்ஸ நித்யானந்தரின் ஆஸ்ரமத்திலும் அதே அதி நவீன தொழில் நுட்பத்தையே பயன்படுத்தினேன்.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அனைத்தும் Nexus 32, QEE G கருவியின் மூலம் பதிவு செய்யப்பட்டது. (இந்தக் கருவி FDA அங்கீகாரம் பெற்றது, மேலும் CD யின் தரம் பெற்றது)
என்னுடன், என்னுடைய பயிற்சி பெற்ற குழுவினரும் உடனிருந்தனர். பரமஹம்ஸ நித்யானந்தர் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்தபொழுது, மூளை அதிர்வலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் வியப்பளிக்கும் வகையிலும், நலன் அளிக்கக்கூடிய வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக இருந்தன.
– Dr. Kanak Pandey
Founder of Gunjan Human Karigar and Maxcellence.
Psychological Consultant and EMDR expert from Hongkong Institute
Biofeed back, Neurofeedback, and QEEG trainer.
இதை, நான் 27 வருடங்களாக சைக்கலாஜிஸ்டாகவும், கடந்த 10 வருடங்களாக Neuro Feed Back மற்றும் QEEG துறையில் பணியாற்றி இருக்கின்ற அனுபவத்திலிருந்தும் சொல்கிறேன்.
சக்தி தீகை்ஷயின் போது குண்டலினி சக்தி, மூளையின் எல்லா சூட்‘மமான நரம்பு பகுதிகளிலும் ஏற்படுத்தும் அபரிதமான சக்தி மாற்றங்களைக் குறித்து அறியும் அறிவியல் பரிசோதனை சமீபத்தில் நித்யானந்த தியானபீடத்தில் குருபூர்ணிமை அன்று நடைபெற்றது. இது ஆன்மீக சக்தியை அறிவியல் பூர்வமாக நிரூபித்த ஓர் அபூர்வ நிகழ்வு.
குண்டலினி சக்தி, தீகை்ஷயின் மூலமாக விழிப்படையும் பொழுது அந்த நபருக்குள் என்ன நிகழ்கிறது என்பதைப்பற்றி விளக்குகிறேன்.
குண்டலினி சக்தி, தீகை்ஷயின் மூலமாக விழிப்படையும் பொழுது ‘நனவு நிலை’யில் (Waking state) ஒரு ஆழமான அமைதி ஏற்படுகிறது. இந்த அமைதி ஆழந்த உறக்கத்தின்போது அனுபவிக்கும் அமைதியை விடவும் ஆழமானதாக இருக்கிறது.
ஆனால் அதே சமயம் அவர்களினுடைய ஆழமான அமைதியான விழிப்புணர்வு (Deep Restful Awareness) விழிப்பு நிலையைவிடவும் (Waking State) பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
உறக்கத்தில் அனுபவிக்கும் ‘அமைதி’யையும், விழிப்பு நிலையில் அனுபவிக்கும் ‘விழிப்பான உணர்வை’யும் (Awarness)
ஒரே நேரத்தில் ஒரு சாதாரண மனிதரிடம் காணவே முடியாது. விழிப்பு நிலையில் இருக்கும் ஆழமான விழிப்புணர்வு, நம் உறக்க சமயத்தில் இருந்தால் நம்மால் உறங்கவும் முடியாது, கனவும் காண முடியாது.
இந்த மூன்று நிலைகளையும் தாண்டிய நான்காவது நிலை இருக்கிறது. அதுதான் துரிய நிலை. ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படையும் பொழுது, அவர், ஞானிகள் எப்பொழுதும் வாழும் இந்த நான்காவது நிலையான ‘துரிய நிலை’யில் இருக்கிறார்.
இந்த நிலையை ‘ஆனந்த நிலை’ என்று சொல்வார்கள். இந்த நிலையின் வெளிப்பாடாக பல அபரிமிதமான சக்திகள் வெளிப்படும். உடல் லேசாகி மேலே எழும்புவது (Levitation) ஐம்புலன்களின் உதவியில்லாமல் செய்திகளை தொலைவில் இருப்பவருக்குத் தெரியப்படுத்துதல் (Teleporting the Information), அதே போல் ஐம்புலன்களின் உதவி இல்லாமலேயே பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் தோன்றச்செய்தல் (Teleporting the Material) என்பவையெல்லாம் குண்டலினி சக்தி விழிப்படையும் பொழுது நம் உடலில் நடைபெறும் பக்க நிகழ்வுகள் ஆகும்.
இவ்வாறு நடைபெறுவது ஹிப்னாடிசமோ, மெஸ்மெரிசமோ அல்ல. சிவபெருமானும் பதஞ்சலியும் சொல்லியிருப்பதுபோல தீஷையின் நன்மைகளால் விளைவது.அதனால் இதைப் பார்த்து பயப்படத் தேவை இல்லை.
kundalini kandupidithavar eapadi muthalil ithanai kandupidithar endru theriyathu but avaruku nandri