ஆரத்திராவ் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் மற்றும் ஊடகங்களில் தோன்ற கூடாது -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சமீப காலமாக அடிக்கடி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தோன்றி பரமஹம்ஸ நித்யானந்தரைப் பற்றி அவதூறு செய்து கொண்டிருக்கும் ஆர்த்தி ராவ் இப்பொழுது கடுமையான சிக்கலில் சிக்கியுள்ளார்.
தற்பொழுது ஆர்த்திராவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் சில கடுமையான விதிமுறைகளை விதித்து 6 வாரங்களுக்கான முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த வழக்கின் விபரமாவது…
ஆர்த்திராவ், நித்யானந்த தியானபீடத்தின் நிர்வாகி ஸ்ரீ நித்ய ஆத்ம பிராபானந்தா அவர்களை மிரட்டி பணம் பறித்தது, ஏமாற்றியது மற்றும் அச்சுறுத்தியது சம்பந்தமான வழக்கில் ஒரு முக்கிய குற்றவாளியாக இருக்கும் ஒரு நபராவார். இந்த சதித்திட்டத்தின் கூட்டாளிகளான லெனின் கருப்பன், சன் டி.வி யின் சி.ஓ.ஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா,அவரது கையாட்களான ஐயப்பன் மற்றும் பிரசன்னா போன்றோர்கள் ஏற்கனவே தமிழ்நாடு சி.பி- சி.ஐ.டி போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்கள்.
2010-ல் ஸ்ரீ நித்ய ஆத்ம பிராபானந்தா அவர்களால் பதியப்பட்ட இந்த வழக்கு சம்பந்தமாக ஆர்த்திராவிற்கு நீதிமன்றம் 2011-லிருந்து 6 முறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவர் தலைமறைவாகவே இருந்து வந்தார். அதன் காரணமாக தமிழ்நாடு சி.பி- சி.ஐ.டி போலீஸாரும் சர்வ தேச போலீஸிடம் ( interpol) ஆர்த்தி ராவைப்பற்றிய ரெட் அலர்ட் ஒன்றை அளித்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, ஆர்த்திராவ் மீது அமெரிக்க நீதிமன்றத்திலும், குழந்தையயை துஷ்பிரயோகம் செய்தது, நிறுவனத்தை ஏமாற்றியது உட்பட பல வழக்குகள் இருக்கின்றன. இத்தனை கடுமையான குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்த அவர், கடந்த மாதம் திடீரென்று கன்னட தொலைக்காட்சியான சுவர்னா தொலைக்காட்சியில் தோன்றி ஒரு வஞ்சகத்தனமான பேட்டியை கள்ளத்தனமாக அளித்தார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, நான் ஏற்கனவே திருமணமான பெண். என்னை பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்கள் ஐந்து வருடங்களாக, 10 இடங்ளில், 40 முறைகள் ‘எனக்குத் தெரியாமலேயே’ பாலியல் பலாத்காரம் செய்தார்,” என்று பேட்டியளித்திருந்தார்.இந்த பேட்டியை அளித்தபின் தாம் எங்கே கைதாகி விடுவோமோ, விசாரணைக்கு அழைக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.
இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் ஆரத்தி ராவோ அல்லது அவரது கணவரோ இதுவரை பரமஹம்ஸ நித்யானந்தர் மீது எந்தவொரு புகாரையும் பதியவே இல்லை. மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த மாதம் பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆர்த்தி ராவின் தந்தை திரு. சேதுராமன் அளித்த போட்டியில், அதுபோன்ற ஒரு சி.டி என் மகளிடம் இருந்ததும், அதை வைத்து அவள் நித்யானந்தரின் பக்தர்களிடம் பணம் கேட்டதும், பணம் கொடுக்காவிட்டால் பரமஹம்ஸ நித்யானந்தர் மீது ஒரு பொய்யான கற்பழிப்பு வழக்கைப் பதிவு செய்வேன் என்று அவர்களை மிரட்டியதும் எனக்குத் தெரியும். மேலும் ஆரத்திராவை இந்த சி.டி சம்பந்தமாக கைது செய்யமாட்டார்கள் என்று ஆரத்திராவின் வழக்கறிஞர் உறுதியளித்திருந்தார்,” என்று கூறியிருந்தார்.
இவ்வளவு குற்றப் பின்னனியிலிருக்கும் ஆர்த்தி ராவ் தனக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி எம். எம். சுந்தரேஷ் அவர்கள் சில கடுமையான விதிமுறைகளை விதித்து ஆறு வராங்களுக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கியுள்ளார்.
1. ஆரத்திராவ் அவரது பாஸ் போர்ட்டை போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும்.
2. அவர் எக்காரணம் கொண்டும் இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்யக் கூடாது.
3. அவர் எக்காரணத்திற்காகவும் ஊடகங்களில் தோன்றவோ, பேட்டியளிக்கவோ அல்லது ஊடகங்களுடன் தொடர்பு கொள்ளவோ கூடாது.
4. ரூபாய். பத்தாயிரத்திற்கான எக்ஸிகியூட்டிவ் பாண்டும், தலா இருபதாயிரத்திற்கான இரு சூரிட்டிகளையும் அளிக்கவேண்டும்.
5. தினந்தோறும் சி.பி- சி.ஐ.டி போலீஸார் முன் நேரில் ஆஜராக வேண்டும், தவறினால் அவரது பெயில் ரத்து செய்யப்படும்
என்ற விதிமுறைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
aarathirav don’t say fake message….. nithyananda va thappu solla yarukkuem arugathai illa……..